ரோகிங்யா முஸ்லிம்கள் உரிமை கோரி காஞ்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்த ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும் இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்திருக்கும் அம்மக்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை கழகத் தோழர் ரவி பாரதி ஒருங்கிணைத்தார். தோழர்கள் டி.கன்னிவேல், பிரகாஷ், இராமசெயம், காஞ்சி அமுதன் (பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கம்), மேகலா (மக்கள் மன்றம்), ஷாஜகான் (மனிதநேய மக்கள் கட்சி), செந்தமிழ்குமரன் (தமிழ்தேச மக்கள் கட்சி) ஆகிய தோழமை அமைப்பு தோழர்கள் உரையாற்றினர். ஏழுமலை நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 02112017 இதழ்

You may also like...