கேரளாவில் சமூகப் புரட்சி: தலைமை அர்ச்சகரானார் தலித் இளைஞர்

150 ஆண்டுகால பழமை வாய்ந்த மணப்புரம் சிவன் கோயிலின் தலைமை அர்ச்சகராக (மேல் சாந்தி) 22 வயது புலையர் சமூகத்தைச் சார்ந்த யாது கிருஷ்ணா என்ற தலித் பதவி ஏற்றுக் கொண்டார். சமஸ்கிருதத்தில் மேல் பட்டப் படிப்பு படித்த இந்த இளைஞர் 10 ஆண்டுகளாக அர்ச்சகர்களுக்கான பயிற்சி – பூஜை முறைகளைக் கற்றுத் தேறியவர். ‘தேவஸ்வம் போர்டு’ நடத்திய தேர்வில் 4ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார் இந்த இளைஞர். 150 ஆண்டுகாலமாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக இருந்த இந்த கோயிலில் ‘தலித்’ ஒருவர் தலைமை அர்ச்சகராகியுள்ளார்.

பெரியார் முழக்கம் 19102017 இதழ்

You may also like...