அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையைக் கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

25.09.2017 அன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரியும் கடவுள் படங்களை அகற்றக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இராஜேஷ் குமார், சுதாகர் முன்னிலையில் தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன், தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தேவராஜ், சி.பி.அய்.எம். விவசாய அணி செயலாளர் என். செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர், மாநில வழக்கறிஞர் பேராசிரியர் முருகையன், வி.சி.க. வழக்கறிஞர் ஸ்டாலின், திராவிடர் கழகத்தைச் சார்ந்த அக்ரி ஆறுமுகம், தி.க. மாவட்ட செயலாளர் தங்கராசு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் காமராசு, முற்போக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர் சீனிவாசன், பெரியார் தொண்டர் சிற்பிராசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த கலைஞர் சங்கர், பேராசிரியர் ப. செல்வகுமார், ஆசிரியர் இராமர், கவிஞர் அகவி மற்றும் பலர் கண்டன உரை ஆற்றினர். 4 மணி நேரம் எழுச்சியுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் திரளாக நின்று கேட்டனர். 26.9.2017 அன்று மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப் பாளரிடமும் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை நிறுத்தக் கோரி கழக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 12102017 இதழ்

You may also like...