தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம் ஈரோடு 18102017

 

ஆதித்தமிழர் பேரவை சார்பாக 18102017 மாலை 5 மணி அளவில்  ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில்  “தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கத்தில்” திவிக தலைவர் தோழர் கொளத்தூர்மணி பங்கேற்றார்.

அதில் பேசியவைகளில் இருந்து சில துளிகள்

மராட்டியத்தில் எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே ஏன் கொல்லப்பட்டார்?? பன்சாரே தன்னுடைய நூலில், மராட்டிய சிவாஜி இந்து மதத்திற்கு மட்டும் உரியவர் அல்ல.. இந்துக்களுக்காக மட்டும் போராடியவர் அல்ல..

அவர் தன்னுடைய படையில் மெய்க்காவலர்களாக நம்பிக்கைக்கு உரியவர்களாக இஸ்லாமியர்களையும் வைத்திருந்தார் என்று தொடர்ந்து ஆதாரத்துடன் ஆய்வு நூல்களை எழுதி வந்தார்..

இந்தக் கருத்துக்கு எதிரானவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார்..

 

தலைவன் என்பவன் தன் பின்னால் மக்களை அழைத்துச் செல்பவனாக இருக்க வேண்டும்; அடுத்தவர் பின்னால் செல்லக் கூடியவராக இருக்கக் கூடாது -பெரியார்

 

பள்ளிக்கூடம் நடத்த நிதியில்லை என்று கூறி, 6000 கிராமப்புற பள்ளிகளை மூடிய ராஜாஜி, வேதபாடசாலைகள் அமைக்க 15 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கினார்

 

ஒருமுறை விவேகானந்தரிடம் கோசாலை கட்டுவதற்காக நிதி கேட்டு போனார்கள். அதற்கு விவேகானந்தர், பட்டினியால் இத்தனை லட்சம் மக்கள் இறக்கிறார்களே?? அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்றாராம்??

அதற்கு நிதி கேட்டு வந்தவர்கள், “கோமாதா நமது தாய் அல்லவா?” என்றார்களாம்..

கோபமடைந்த விவேகானந்தர், ” ஆம் உங்களைப் போன்றவர்களை எல்லாம் வேறு யார் பெற்றிருக்க முடியும்?? “என்றாராம்..

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறான ஞானதீபம் புத்தகம்

22491775_936217226552448_3302831906572264872_n22550049_936178856556285_1259093574836408239_n

 

செய்தி பசி திவிக

You may also like...