ஆயுத பூஜையைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

27.09.2017 அன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் மத்திய மாநில அரசுகளின் நவோதயா பள்ளி திட்டம் அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை இவைகளை  தடைசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார்  தலைமை உரைக்குப் பின் சி. கோவிந்தராஜ் (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.சக்திவேல்,  இரண்யா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மேட்டூர் ஆர்.எஸ். காவேரி கிராஸ், நங்கவள்ளி, கொளத்தூர், தார்க்காடு, காவலாண்டியூர் தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.குமரப்பா நன்றி உரை நிகழ்த்தினார்.

பெரியார் முழக்கம் 02112017 இதழ்

You may also like...