வேத பார்ப்பனியம் கட்டமைத்த ‘தேவதாசி’ முறை தொடரும் அவலம்

பெண்களை கோயில்களுக்கு அர்ப் பணிக்கும் தேவதாசி முறை இப்போதும் நீடிக்கிறது. இளம் பெண்களை கோயில் களுக்கு காணிக்கையாக்கி அவர்கள் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் அர்ச்சகர்கள், கோயிலுக்கு உரிமையாளர் களால் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தும் சமூகக் கொடுமையை பார்ப்பனியம் மதச் சடங்காக சமூகத்தில் திணித்திருந்தது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி இந்த இழிவை ஒழிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவர் மேலவை உறுப்பினரானபோது இந்த இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார், முத்துலட்சுமியின் முயற்சிக்கு தீவிர ஆதரவு அளித்தார்.

இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது காங்கிரசிலிருந்த சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள், இந்துமத சடங்குகளில் அரசு குறிக்கிடக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெ ரிவித்தனர். இப்படி ‘தேவதாசி’களாக்கப்படு கிறவர்கள், ‘தேவதாசி’ குடும்பப் பெண்களாகவே இருந்தனர்.

சட்டத்தால் தடை செய்யப்பட்ட பிறகும் பெண்கள் மீது சுமத்தப்பட்ட இந்த கொடுமை ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்திலும் தமிழ்நாட்டில் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து கொண்டிருக் கிறது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் இரண்டு மாநில அரசுகளிடமும் விளக்க அறிக்கை கேட்டிருக்கிறது.

மாத்தம்மா கோயிலுக்கு சிறுமிகள் காணிக்கை யாக்கப்படுகிறார்கள். அதற்கான சடங்குகள் முடிந்தவுடன் 5 ஆண் சிறுவர்கள் சிறுமியின் ஆடைகளை அகற்றி நிர்வாண மாக்குகிறார்கள். அப்போது மணப்பெண் கோலத்தில் சிறுமிகள் அலங்கரிக்கப்படு கிறார்கள். பிறகு மாத்தம்மாவுக்கு காணிக்கை யாக்கப்பட்டவுடன் இந்த சிறுமிகள் பொதுச் சொத்தாக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்று மனித உரிமை ஆணை யம் தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 22 மண்டலங்களில் இந்த முறை இப்போதும் தொடருகிறது. இதிலிருந்து விடுபட நினைத் தாலும் கிராமத்திலுள்ள இளைஞர்கள் அவர்களை மிரட்டி கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் நீடிக்கச் செய்கிறார்கள் என்றும் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது. ஒரு காலத்தில் தேவதாசி குலப் பெண்கள் இப்படித் தள்ளப்பட்டாலும் இப்போது ‘தலித்’ பெண்களே இப்படி காணிக்கையாக்கப்படுகின்றனர்.

இப்படி காணிக்கையாக்கப்பட்ட சிறுமிகள் வளர்ந்து பெரியவர்களாக நோய் வாய்ப்பட்டவர்களாக மாறிவிட்டனர். கோயில் வாசலில்தான் அவர்கள் உறங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படு கிறார்கள் என்று இவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்க செயல்பட்டு வரும் ‘கைவிடப்பட்ட கிராமப் பெண்களின் அன்னையர் அமைப்பு’ கூறுகிறது.

மும்பைப் போன்ற நகரங்களுக்கு விபச்சாரத் தொழிலுக்கு விற்கப்படுகிறார்கள் என்றும் 2017ஆம் ஆண்டிலிருந்து சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 7 பெண்கள் ‘எய்ட்ஸ்’ நோய் பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்து விட்டனர் என்றும், அந்த அமைப்பினர் கூறுகிறார்கள். சித்தூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான ‘மாத்தம்மா’க்கள் இருக்கிறார்கள். இவர்களில் 363 பேர் பெண் குழந்தைகள் அவர்கள் 4லிருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் தடைச் சட்டம் இருந்தாலும் இந்த மதப்பழக்கம் நம்பிக்கைக் காரணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘பெண்கள் அர்ப்பணிப்பு சட்டம்’ என்ற தேவதாசி முறையை தடை செய்யும் சட்டம் செயல்படாத சட்டமாகவே இருக்கிறது. சட்டத்துக்கான விதிமுறைகள் 2016இல்தான் உருவாக்கப்பட்டன. இந்த சட்டத்தின் கீழ் இதுவரை 2 பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டம் புத்தூரில் உள்ள குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரிகள் இது பற்றிக் கூறுகையில் பாதிக்கப்பட்ட பெண்களும் கிராமத்து மக்களும் சட்டத்தை அமுல்படுத்த ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அவர்கள் தேவதாசி முறைக்கு ஆதரவாக மத ‘நம்பிக்கை’ காரணமாக ஆதரவாகவே இருக்கிறார்கள். எவ்வளவு ‘மாத்தம்மா’க்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் எடுக்கப்படவில்லை. இவர்களின் மறு வாழ்வுக்கான ஆக்கப்பூர்வ திட்டங்களும் அரசிடம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆந்திர மக்களிடம் ஊறிப்போய் நிற்கிற மத உணர்வு, இந்தக் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறது. எனவே சட்டமன்ற உறுப் பினர்கள், அதிகாரிகள் மக்கள் உணர்வு களுக்கு எதிராக செயல்பட விரும்பாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 2 முதல் 6ஆம் தேதி வரை கிராம மக்களே ‘மாத்தம்மா’ திருவிழா நடத்துகிறார்கள். 5ஆவது நாள் ‘மாத்தம்மா’ எனும் கோயிலுக்கு பெண்களை காணிக்கையாக்கும் முறையை காலங்காலமாக தொடர்ந்துவரும் புனிதமான வழக்கம் என்பதை இளைய தலைமுறையிடம் கிராமத்து முதியவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள். ஒரு சிறுமி ‘ரேணுகாதேவி’ வேடமிட்டு நடிப்பாள். 4 சிறுவர்கள் அந்தப் பெண்ணிடம் திருட வருவதாக நடித்து இறுதியில் சிறுமியின் ஆடைகளைக் களைவார்கள் என்று கிராமத்து மக்கள் கூறுகிறார்கள். மக்களிடம் இதை எதிர்த்துப் போராடவோ விழிப் புணர்வு ஏற்படுத்தவோ இயக்கங்கள் ஏதும் ஆந்திராவில் இல்லை என்பதே இதற்குக் காரணம். ‘தி இந்து’ ஆங்கில நாளேடு (ஆக.8) இந்தசெய்திகளை வெளியிட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 09112017 இதழ்

You may also like...