கவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது? சங்பரிவார் கும்பல் சதி அம்பலமானது
கர்நாடக இதழியலாளரும் முற்போக்கு சிந்தனையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் 05.09.2017 அன்று படுகொலை செய்யப்பட்டார். சில சங்பரிவார ஆதரவு இதழ்கள் இது தனிப்பட்ட விரோதம்காரணமாக நடந்த கொலை என்றனர். இன்னும் சிலர் இது நக்சலைட்டுகளின் செயல் என திசைத் திருப்ப முயன்றனர்.தற்பொழுது 6 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். அனைவரும் சங்பரிவார அமைப்பினர். எனினும் இவர்கள் சங்பரிவாரத்தின் முக்கிய அமைப்புகளுடன் கொண்டிருக்கும் தொடர்புகளை மிகவும் திட்டமிட்டு மறைப்பது மட்டுமல்ல; கொலை செய்ய இவர்கள் தீட்டிய திட்டம் எவ்வளவு நுணுக்கமானது என்பதை அறியும் வகையில் சில செய்திகள் வெளியாகியுள்ளன. கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கீழ்கண்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: படுகொலையை அரங்கேற்றியவர்கள் : பரசுராம் (சிறீராம் சேனா), வாக்மோர், நவீன் குமார் (இந்து யுவசேனா ஸ்தாபகர்), சுஜித் குமார் (இந்து ஜனசகுர்த்தி சமிதி), அமோல் காலே (சனாதன சன்ஸ்தா), மனோகர் (சிறீராம் சேனா எடாவே), பிரதீப் (சனாதன சன்ஸ்தா) காவல்...
