19 நாட்களே நாடாளுமன்றம் வந்த மோடி

நான்கு ஆண்டுகளில், 19 நாட்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றம் வருகைதர உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூன் 12 அன்று பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கைத் தொடர்ந்திருக் கிறார். கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒட்டு மொத்தமாகவே 19 நாட்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார்.

அத்துடன், சிலமுறையே மோடி நாடாளு மன்றத்தில் பேசியுள்ளார். அரசின் மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் போதும், 5 முறை தனது அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போதும், நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 6 முறையும், சிறப்பு விவாதத்தின் மீது 2 முறையும் மோடி பேசியுள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க.வின்

800-க்கும் மேற்பட்ட பேரணிகளில் கலந்து கொண்டிருக்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 28062018 இதழ்

You may also like...