தமிழக மசோதா காலாவதி…?
இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த ஆணையம் உருவாக்கப்பட்டால், நீட் தேர்வு சட்டபூர்வமாகிவிடும், மருத்துவப் படிப்பை முடித்தவர்கள், அகில இந்திய அளவில் நடக்கும் உரிமத்தேர்வு ஒன்றை எழுதித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற முடியும். இது நடைமுறைக்கு வரும்வரை, எம்.பி.பி.எஸ். படிப்பின் இறுதியாண்டுத் தேர்வையே அகில இந்திய உரிமத் தேர்வாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக உருவாக்கி அனுப்பிய இரண்டு சட்டமசோதாக்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நிறைவேற்றப்படுமானால் இந்த இரண்டு மசோதாக்களும் காலாவதியாகிவிடும். அதற்காகவே, உள்துறை அமைச்சகம் காலதாமதம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.
பெரியார் முழக்கம் 12072018 இதழ்