சென்னையில் நிலத்தடி நீர் வற்றிவிடும் ஆபத்து
‘நிதி ஆயோக்’ (Ammyy admin) அமைப்பு, ‘கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை’ (Composite Water Management Index) ஜூன் 14 அன்று வெளியிட்டது. இந்தியா கடும் நீர்த் தட்டுப்பாட்டை எதிர் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வில் சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அத்துடன், நாட்டின் தண்ணீர் பிரச்சினை இதே விதத்தில் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 05072018 இதழ்