Author: admin

தபோல்கர் கொலை: மதவெறியர் கைது மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் மராட்டியத்தில் வேகம் பெறுகிறது

தபோல்கர் கொலை: மதவெறியர் கைது மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் மராட்டியத்தில் வேகம் பெறுகிறது

2013ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் டாக்டர் தபோல்கரை சுட்டிக் கொன்ற ‘சிவசேனை’ முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா வில் நடப்பது இந்துத்துவ பாசிச கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சிவசேனை ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது. கவுரி லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து கருநாடக அரசு மேற்கொண்ட தீவிரப் புலனாய்வு காரணமாக இதுவரை சிக்காமல் பதுங்கி நின்ற ‘சங்பரிவார்’ குடும்பங்கள் சிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய படுகொலைகளை நடத்தும் ‘சங்பரிவார்’ கொள்கையாளர்கள் ஒவ்வொரு வன்முறை நிகழ்த்தும் போதும் ஏதேனும் ஒரு புதிய இந்துத்துவா பெயரை சூட்டிக் கொள்வது வழக்கம். காந்தி கொலையில் கோட்சே கும்பல் இதே தந்திரத்தைத்தான் பின்பற்றியது. அவரைத் தொடர்ந்து அதே மாநிலத்தைச் சார்ந்த கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரியில் கோலாம்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்துத்துவா எதிர்ப்பாளர். மாவீரன் சிவாஜியின் உண்மையான வரலாற்றை தாய்மொழியில் நூலாக எழுதியவர். 2015 ஆகஸ்ட்டில் கருநாடக மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் துணைவேந்தரும் சிறந்த இலக்கியவாதி யுமான முனைவர் கல்புர்கி...

சமூக நீதியை சிதைக்கும் ‘நீட்’ அரசுப் பள்ளி மாணவர் 4 பேருக்கே  அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்

சமூக நீதியை சிதைக்கும் ‘நீட்’ அரசுப் பள்ளி மாணவர் 4 பேருக்கே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்

‘நீட்’டின் மற்றொரு கோர முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு தமிழ்நாடு  அரசுப் பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இடம் கிடைத்தவர்கள் இரண்டு பேர். ஆக 100 சதவீதம் அதிகரித்துவிட்டது என ‘புள்ளி விவரப் புலிகள்’ மார் தட்டலாம். ஆனால் எதார்த்தம் மிக மிக மோசம். தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த இடங்கள் 5660. இதில் அரசுப் பள்ளியில் படித்த பெரும் பொருட் செலவில் தனியார் பள்ளிகளில் படிக்க வாய்ப்பில்லாத மாணவர்கள் பெற்ற இடம் இவ்வளவுதான். ‘நீட்’ தேர்வு வருகைக்கு முன்பு 2016இல் 30 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம் பிடித்தனர். இப்போது தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத எதிர்ப்பும் கண்டனங்களும் வெடித்தப் பிறகே சி.பி.எஸ்.ஈ. அனுமதித்தது. அதிலும் 49 கேள்விகள் தவறானவை. மாணவர்கள் விடையளிக்க முடியாததால் சுமார்...

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பரப்புரைப் பயணத்தில் ‘நீட்’ பாதிப்புகளையும் தமிழ்நாட்டின் மத்திய அரசுத் துறைகளில் வடநாட்டார் குவிக்கப்படுவதையும் மக்கள் பேராதரவுடன் வரவேற்கிறார்கள். துண்டறிக்கைகளை, நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் சென்னைக் குழு பரப்புரை செய்தபோது நெற்றி முழுதும் விபூதி-குங்குமம் அணிந்த தோழர், ஆர்வத்துடன் சைக்கிளில் வந்து இறங்கி கழக வெளியீடுகளை வாங்கி தோழர்களின் கரங்களைப் பிடித்து பாராட்டினார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகையில் பரப்புரை முடிந்து தோழர்கள் பயணப்பட்ட பிறகு, ஒரு தோழர் மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பின் தொடர்ந்து வந்து வாகனத்தை நிறுத்தி ரூ.500 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 23082018 இதழ்

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் தொடங்கியது. 20ஆம் தேதி சென்னை, மேட்டூர், மயிலாடுதுறை குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. 21ஆம் தேதி குடியாத்தம், திருப்பூர், சங்கரன்கோயில் பயணக் குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. முன்னதாக சென்னை பயணக் குழுவின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஆகஸ்டு 19 ஆம் தேதி மாலை 6 மணியளவில் திருவல்லிக்கேணி சேக்தாவூது தெருவில் அருண்குமார் தலைமையில் சி.இலட்சு மணன் முன்னிலையில் ப. பிரபாகரன் வரவேற்புரையுடன் தொடங்கியது. கலைஞர் நினைவு அரங்கம் என்று மேடைக்கு பெயர் சூட்டப்ப்டடிருந்தது. கலைஞர் உருவப் படத்தைப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தொடக்க உரையைத் தொடர்ந்து ‘விரட்டு’ கலை பண்பாட்டுக் குழுவினரின் பறை இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. சமூக நீதி காத்த தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் பாடல்கள், கல்வி உரிமைப் பயண நோக்கங்களை விளக்கம் பாடல்களைத் தொடர்ந்து...

ரூ.2 இலட்சம் கொடுத்தால் யாரும் வாங்கலாம்: விலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்

ரூ.2 இலட்சம் கொடுத்தால் யாரும் வாங்கலாம்: விலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்

நீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி உள்ளிட்ட அனைத்து விவரங் களும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விலைக்கு விற்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அதாவது, 2018ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில், 2 லட்சம் மாணவர்களின் முழு விபரங்களும் தற்போது ஆன்லைனில் கிடைக்கின்றன; ரூ. 2 லட்சம் தந்தால், அந்த 2 லட்சம் மாணவர்களின் முழு விபரங்களையும் குறிப்பிட்ட இணையத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் ஆகிய வற்றை குறிவைத்து, இந்த டேட்டாக்கள் விற்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெற்றும், குறைந்த மதிப்பெண் எடுத்ததால், சீட் கிடைக்காமல் போனவர்களை கண்டுபிடித்து, அவர்களை தங்கள் கல்லூரிகளில் சேருமாறு அழைக்க வும், இத்தனை லட்சம் கொடுத்தால் நீங்கள் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று பேரம் பேசவும், தனியார் கல்லூரிகளுக்கு மாணவர் களின் தரவுகள் பயன்பட்டிருக்கின்றன. அதேபோல நீட் தேர்வில் வெற்றி பெறாதவர்களை...

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு  (Current a/c) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 i.f.c. Code : kvbl0001257 தொடர்புக்கு:  7299230363 பெரியார் முழக்கம் 16082018 இதழ்

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞர் மறைவுக்கு கழக சார்பில் சென்னையில் வீர வணக்கப்பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு ஊர்களில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை : திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞருக்கு 08.08.2018 காலை 11 மணிக்கு அண்ணாசிலையி லிருந்து இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞரின் உருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீர வணக்க உரையாற்றினர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் : கலைஞருக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட...

பெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்!

பெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்!

குண்டர் சட்டத்தைத் தகர்த்து விடுதலை யானவுடன், மே 17 இயக்க ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தி, 2017ஆம் ஆண்டு தோழர்களுடன் நேராக இராயப்பேட்டை திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியார் படிப்பக வாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலையிட வந்தார். அப்போது திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வரவேற்று மாலை அணிவிப்பு நிகழ்வில் பங்கேற்றனர். ஓராண்டுக்குப் பிறகு இப்போது சட்ட விரோதமாகக் கூடி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாக காவல்துறை தோழர் திருமுருகன் காந்தியை கைது செய்துள்ளது. முதலில்  அவர் மீது ‘தேசத் துரோக’ வழக்கைப் பதிவு செய்து வெளிநாட் டிலிருந்து அவர் திரும்பும் வரை காத்திருந்து பெங்களூர் விமான நிலையத்தில் கருநாடக காவல்துறை கைது செய்து, சென்னை நகர காவல்துறையிடம் ஒப்படைத்தது. சைதை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார் திருமுருகன் காந்தி. ஜெனிவாவில் உள்ள அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி திருமுருகன் பேசியிருக்கிறார். இது தேச விரோதம்...

27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது?

27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது?

பார்ப்பன-மேல்சாதி இந்திய ஆளும் வர்க்கம் வன்னெஞ்சத்துடன், இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் உயிருடன் கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த எழுவரின் விடுதலை, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போனதுபோல் இழுத்தடிக் கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இராசிவ் காந்தி 1991 மே 21 அன்று திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரான இத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரணதண்டனையை உறுதி செய்தது. இராபர்ட் பயாஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. மற்ற 19 பேரை விடுதலை செய்தது. பின்னர் 2000ஆம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய...

பெரம்பலூர் – கருஞ்சட்டைக் கடலாகட்டும்!

பெரம்பலூர் – கருஞ்சட்டைக் கடலாகட்டும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாற்றல் மிக்க தோழர்கள் தமிழர்களின் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதிக்கப் படும் கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். 2018 ஆக. 20இல் தொடங்கி 26இல் பெரம்பலூரில் நிறைவு விழா மாநாடு; 6 முனைகளிலிருந்து புறப்பட்டு 180 ஊர்களில் பரப்புரைக் கூட்டங்கள். எத்தனையோ தடைகளைத் தகர்த்து ‘மனு சாஸ்திரம்’ நமக்கு மறுத்த கல்வி உரிமையை மீட்டு நமது தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள் இப்போது பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கியது நமக்கான வகுப்புவாரி உரிமை. 1950இல் தமிழ்நாட்டில் பின்பற்றி வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும் பிறகு உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. பெரியார் போராடினார்; தமிழகம் கொந்தளித்தது. இந்திய அரசியல் சட்டம் பெரியார் நடத்திய போராட்டத்தால் முதன் முதலாக 1951இல் திருத்தப்பட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக் கான போராட்டத்தையும் வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தையும்...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று! • தமிழ்நாட்டில் ‘நீட்’டை விலக்கு! • மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக் காரர்களைத் திணிக்காதே!   • தமிழகத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வேலை கொடு; தேர்வுகளை  தமிழில் நடத்து! • தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கு! தோழர்களே! கல்வி – வேலை வாய்ப்பு – இதுவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நமக்கு இரண்டு கண்கள்: ஆனால், நமது கண்கள் இப்போது பிடுங்கப் படுகின்றன. மீண்டும் நமது தாத்தா, பாட்டி களின் ‘கைநாட்டு’க் காலத்துக்கே விரட்டப் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் சூழ்ந்து நிற்கிறோம். இதோ சில தகவல்கள்… இதைப் படியுங்கள். 1976ஆம் ஆண்டு வரை கல்வி நமது மாநில அரசுக்கு மட்டுமே உரிமையாக இருந்த நிலை மாறி மத்திய அரசு ‘நாங்களும் தலையிடுவோம்’ என்று குறுக்கிட்டுத் தானாகவே பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. அதன் விளைவு? இப்போது நமக்கு அடி மேல் அடி. ‘நீட்’ தேர்வு அப்படித்தான்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜூலை 2018 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜூலை 2018 இதழ்

தலையங்கம்-ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம் ‘தலித்’துகளை புறக்கணிக்கும் கிரிக்கெட் வாரியம் ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறல்- ஒரு விரிவான அலசல் தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் – அய்.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 09082018 இதழ்

மேட்டூர் பகுதியில்  விளக்கக் கூட்டங்கள்

மேட்டூர் பகுதியில் விளக்கக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தமிழர் கல்வி உரிமைப் பரப்புரை பயணம் வருகிற ஆகஸ்டு 20 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது. பரப்புரை பயணத்தின் நோக்கங் களையும், கோரிக்கைகளையும்  மக்களிடையே விளக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம் சார்பில் பயண விளக்க தெருமுனைக் கூட்டங்கள் 4.08.2018 சனிக்கிழமை மாலை 4 மணி, சேலம் மாவட்டம் பொட்டனேரி மற்றும் 6.30 மணி மேச்சேரி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது.  மேட்டூர் டிகேஆர் இசைக்குழுவின் பறையிசை மற்றும் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அ.சக்தி வேல் (தலைமைக் குழு உறுப்பினர்),  பரத் ஆகியோர் பயணத்தின் நோக்கம் குறித்து மக்களிடையே விளக்க உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு கோ.தமிழரசன் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

பரப்புரைப் பயணத்துக்கு  கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

பரப்புரைப் பயணத்துக்கு கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 03.08.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை யில் நடைபெற்றது. இதில் வரும் ஆக°ட் 20 முதல் 26 வரை நடைபெறவிருக்கும் “கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தின்” நோக்கத்தை குறித்தும், பயணத்தை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வை இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செய லாளர்) ஒருங்கிணைத்தார். ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), அன்பு தனசேகர் (தலைமை செயற்குழு உறுப்பினர்) மற்றும் கழகத் தோழர்கள் தங்களுடைய கருத்துகளை கூறினர். இறுதியாக தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

நாடு முழுதும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த ஆய்வில் வெளியான தகவல் பார்ப்பன-பனியாக்களின் கூடாரம் பாஜக!

நாடு முழுதும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த ஆய்வில் வெளியான தகவல் பார்ப்பன-பனியாக்களின் கூடாரம் பாஜக!

பா.ஜ.க. தொடங்கி 38 ஆண்டுகளுக்குப் பிறகும் அக்கட்சியின் தேசிய மாவட்ட நிர்வாகிகள் பார்ப்பன-பனியா உள்ளிட்ட உயர்ஜாதிப் பிரிவினர்களிடமே இருக்கிறது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்து கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்சாவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவின் ஆட்சி அதிகாரத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதற்கான முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாக்குகளைக் கைப்பற்று வதற்கான முயற்சிகளையும் இவர்கள் பின்பற்று கிறார்கள். ஆனால் அந்தக் கட்சியின் கட்டமைப்பில் அடித்தட்டு மக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது. பாஜக உருவாகி 38 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் அக்கட்சி பொறுப்பில் இன்றளவிலும் முன்னேறிய சமூகத்தினரின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. குறைந்த அளவில்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பாஜகவின் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்களைக் காட்டிலும் மிகக் குறைவான அளவில்தான் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும், சிறுபான்மையினரும் பொறுப்பில் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன கட்டமைப்பு குறித்த ஒரு...

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் ஆறாவது சந்திப்பு, 30.07.2018 அன்று மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அதைத் தொடர்ந்து ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் இமானுவேல் துரை, ‘யோகக் கலை’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன் மற்றும் ‘திராவிடர் இயக்க சாதனைகள்’ குறித்து ஜெயபிரகாஷ் ஆகியோர் விரிவாகப் பேசினர். ‘நிமிர்வோம்’ டிசம்பர் 2017 மற்றும் சனவரி 2018 மாத இதழ்களை குறித்தும் தங்களது கருத்துகளையும் எடுத்துரைத்தனர். தொடர்ச்சியாக இந்த நிகழ்வுக்கு சிறப்புரையாற்ற வந்திருந்த கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “கலைஞரின் 50 ஆண்டு கால வரலாறு” குறித்து தனது ஆழமான கருத்துகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

பல்கலைக் கழக மான்யக் குழுவைக் கலைப்பது ஏன்? ‘தகுதி’ என்ற பெயரில் சமூகநீதி புறக்கணிப்பு

பல்கலைக் கழக மான்யக் குழுவைக் கலைப்பது ஏன்? ‘தகுதி’ என்ற பெயரில் சமூகநீதி புறக்கணிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன். அவர் தலைமையில் 1948இல் உருவாக்கப்பட்டது பல்கலைக்கழகக் கல்வி வாரியம். அனைவருக்கும் தரமான உயர் கல்வி என்ற இலக்கோடு 1956இல் பல்கலைக்கழக மானியக் குழுவாக (யு.ஜி.சி.) அது சட்டபூர்வமாக நிலைபெற்றது. மாணவர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை முன்வைத்த சி.டி.தேஷ்முக், மகளிர் பல்கலைக்கழகங்களை நிறுவத் திட்டங்கள் தீட்டிய மாதுரிஷா ஆகிய இருவரும் ஒரு ரூபாய் ஊதியத்துக்கு யூ.ஜி.சி.யின் தலைவர்களாகப் பணியாற்றியவர்கள். இப்படிக் கல்வியாளர்களாலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு கல்விக் கழகம் யு.ஜி.சி. ஆனால், தற்போது அது கலைக்கப்பட விருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் (ழiபாநச நுனரஉயவiடிn ஊடிஅஅளைளiடிn டிக ஐனேயை – ழநுஐ) என்ற புதிய கல்விக் கழகம் வரப்போகிறது. அப்படியானால் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரி களுக்கும் தொடர்பில்லாதவர்கள் இனி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் திட்டத்தை மதிப்பிட்டு மானியம் வழங்க உரிமைகொண்டவராவர். கோரிக்கையின் தொகுப்பு இந்திய உயர்கல்வியின்...

வெட்கம்; அவலம்; தமிழகத்தின் ஜாதி வெறிக் கிராமங்கள்!

வெட்கம்; அவலம்; தமிழகத்தின் ஜாதி வெறிக் கிராமங்கள்!

திருப்பூர் அருகே திருமலை கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த பாப்பாள், உள்ளூர் ஜாதி வெறியர்கள் எதிர்ப்பால் அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு – ஜாதி எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்து வந்தன. பிறகு மீண்டும் பாப்பாளின் சொந்த ஊரான திருமலைக் கவுண்டன் பாளையத்துக்கே மாற்றப்பட்டார். இப்போது ஜாதி வெறியர்கள் பாப்பாள் குடும்பத்தை அச்சுறுத்தி வருவதாக பாப்பாள் கணவர் பழனிச்சாமி, போலீ° பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். பாப்பாள் நியமனத்துக்குப் பிறகு சில ஜாதி வெறியர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மதிய உணவை பள்ளியில் சாப்பிடக் கூடாது என்று கூறி, வீட்டிலிருந்தே உணவு தயாரித்துக் கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறார்களாம். இதே போன்று, திருச்சி  புத்தூரிலிருந்து ஒரு தலித் அர்ச்சகர் சந்திக்கும் ஜாதிக் கொடுமைகள் குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. தமிழ்நாடு அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த கே.சிவசங்கரன் (34)...

விடை பெற்றார்!

விடை பெற்றார்!

1924 -2018 கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும்! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்! பெரியார் முழக்கம் 09082018 இதழ்

தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதல் – தோழர் கொளத்தூர் மணி அவர்கள் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திட்டவட்டம்

தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதல் – தோழர் கொளத்தூர் மணி அவர்கள் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திட்டவட்டம்

”தி.மு.க வின் மீது வைக்கப்படும் எந்த ஒரு விமர்சனமும் கூட அது தமிழ் மக்களுக்கே பாதிப்பாக வந்துவிடுமோ என்கிற அச்சம் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.” ”தி.மு.க.வை கட்சியாக பார்க்காமல் தமிழர் நலன்,தமிழ்நாட்டு நலன் என இணைத்து பார்க்கிறோம்.” ”அரசியலைப்பொறுத்த வரை சூழலைப்பார்த்துதான் முடிவெடுக்க முடியும்.” அழகிரியின் திடீர் பேட்டி குறித்து ”கழகத்தலைவர் கொளத்தூர் மணி” அவர்கள் நேற்று 13.08.2018 அன்று NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ‘காலத்தின் குரல்’ நிகழ்சியில் அளித்த பேட்டியின் சாரம் : ”அழகிரியின் பேட்டி அதிர்ச்சியளிக்கிறது.அவர் திமுகவில் குழப்பத்தை எற்படுத்த முயற்சிக்கிறார்.பொது வெளியில் இப்படி பேசியதை ஏற்க முடியாது.இதனை கண்டிகிறேன்.இவரால் எந்த பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது எனினும் இதைக்கூட அனுமதிக்க கூடாத ஒன்று இப்படி அவர் நடந்திருக்க கூடாது. இதனை கட்சி விவகாரமாகவோ,குடும்ப சிக்கலாகவோ பார்க்கவில்லை.இது ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதலைப்போலத்தான் உணர்கிறேன். பா.ஜ.க. தமிழகத்திற்கு நுழைய பெரும்...

கலைஞர் இரங்கல் நிகழ்வு திருச்செங்கோடு 12082018

கலைஞர் இரங்கல் நிகழ்வு திருச்செங்கோடு 12082018

கடந்த 7.8.2018 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் முன்னிலையில் இரங்கல் கூட்டம்  நடைபெற்றது. நிகவில், மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கலைஞரின் சாதனைகள் மற்றும் கலைஞரின் மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினர், மேலும், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த கழகத்  தோழர்கள் கலந்து கொண்டனர்.  ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மாநில துணைப்பொதுச் செயலாளர்  தமிழரசு இரங்கல் உரை நிகழ்த்த,  ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் செல்வவில்லாளன் கலைஞரின் சமூக நீதி சாதனைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் நிறைவுரையாக தனது இரங்கல் கருத்தை பதிவு செய்தார். மேலும், நாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர்...

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி !  பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் உரை

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் உரை

https://www.facebook.com/dvk.chennai.5/videos/444132239438752/ கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! (காணொளி) பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் உரை ! 08.08.2018 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.facebook.com/dvk.chennai.5/videos/444132239438752/  

பா.ஜ.க. ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பொதுக்கூட்டம் மதுரை 13082016

பா.ஜ.க. ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பொதுக்கூட்டம் மதுரை 13082016

மதுரையில் பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ”பா.ஜ.க. ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு.”எனும் தலைப்பில் உரையாற்றுகிறார் ! நாள் : 13.08.2018.திங்கட் கிழமை. நேரம் : மாலை 6.00 மணி இடம் : பெத்தானியாபுரம்,குரு திரையரங்கம் எதிரில்,மதுரை. தோழமை அமைப்புகளின் தலைவர்களும் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்த்தேச மக்கள் முன்னணி.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு

“பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு” இன்றைய வாட்ஸ் அப்(12.08.2018)செய்தி அரசியல் பதவி வேட்டை லாபங்களுக்காக துணை போகாமல் எந்த பதவியும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் பெரியாரின் சமுதாய தொண்டை மக்களுக்கு ஆற்றப் போகிறோம் என்று சொந்த செலவில், சொந்த உழைப்பில் சமூகத்தில் கல்வி உரிமை, சுயமரியாதைக்காக பகுத்தறிவுக்காக பாடுபடுகின்ற பெரியார் தொண்டர்களை காவல் துறை ஏன் இப்படி அலைக்கழிக்கிறது. ஏன் இப்படி பொய் வழக்குகளை போடுகிறது என்பது நமக்கு புரியவில்லை. அதுவும் தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தமிழ் இன கொள்கைகளை மக்களிடையே கொண்டு சொல்வதற்கும், பறிக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை, தமிழ்நாட்டை மதவெறி பூமியாக மாற்றுகிற ஆபத்துகளை எதிர்த்தும், போராடி கொண்டிருக்கிற, களமாடி கொண்டிருக்கிற ஒரு சமுதாய புரட்சி இயக்கத்தை சார்ந்த தொண்டர்களை ஏன் காவல்துறை சமூக விரோதிகளாக பார்க்கிறது. பொய் வழக்குகளை புணைகிறது என்ற கேள்வியை இப்போது கேட்க வேண்டியிருக்கிறது....

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி! சென்னை 08082018

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி! சென்னை 08082018

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விடை பெற்ற திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு 08.08.2018) காலை 11 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்.அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீரவணக்க உரையாற்றினார்கள். தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் புதுச்சேரி 13082018

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் புதுச்சேரி 13082018

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் கடந்த 2017-ஆம் ஆண்டு ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தியை தமிழக அரசு தேசத் துரோக வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்- மறியல். நாள்: 13.08.2018, காலை 10 மணி. இடம்: ராஜா திரையரங்கு (நேரு வீதி சந்திப்பு), புதுச்சேரி. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறோம். இவண் லோகு.அய்யப்பன் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம், புதுச்சேரி.

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் ! மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர் செய்த குற்றம் ஜெனிவாவில் நடந்த அய்.நா. கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்துப் பேசியதுதான்.” இது வன்மையான கண்டனத்துக்குரியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தினார்கள். உயிர்ப்பலி தந்து அரசைப் பணியவைத்து ஆலையை மூடினார்கள்.இப்போது ஸ்டெர்லைட் ஆலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “பசுமைத் தீர்ப்பாயம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தனது நிர்வாகப் பணிகளை தொடங்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. உற்பத்தியைத் தொடங்க கூடாதாம்; ஆனால் நிர்வாகப் பணியைத் தொடங்கலாமாம். உற்பத்தி தொடங்காமல் என்ன நிர்வாகப் பணி இருக்கப்போகிறது என்று நமக்குத் தெரியவில்லை.” பசுமைத் தீர்ப்பாயம் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது திடீரென்று எதனால் அதன் நிலையில்...

கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலி

50 ஆண்டுகாலம் ஒரு இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர், 18 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர், 80 ஆண்டுகாலம் தமிழகத்தின் பொதுவாழ்க்கையில் பயணித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக சமூகத்தின் கடைக்கோடி சமூக பிரிவிலிருந்து அதிகாரத்தின் உச்சிற்கு உயர்ந்த ஒரு மனிதர் கலைஞர் இன்றைக்கு விடைபெற்றுக்கொண்டுவிட்டார். 95 வயது வாழ்க்கை என்பது ஒரு முழுமையான நிறை வாழ்வுதான். அவர் விட்டுச்சென்ற கொள்கைகளை எப்படி அவர் கட்டி எழுப்பிய இயக்கம் பாதுகாக்க போகிறது என்பதுதான் கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலியாக இருக்கக் கூடும். திராவிடர் இயக்கத்தினுடைய அரசியல் கொள்கைகளை ஒழிப்பதற்கும் சீர்குலைப்பதற்கும் இன்றைக்கு திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த தடைகளை கடந்து இயக்கத்தை எப்படி முன்னெடுத்துச் செல்ல போகிறோம் என்பது தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முன்னிருக்க கூடிய மிகப்பெரிய சவால். அந்த சவாலை கடந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் திராவிட இயக்க அரசியலை தீவிரமாக முன்னெடுத்து செல்வது ஒன்று தான் கலைஞருக்கு...

விடை பெற்றார் கலைஞர் !

விடை பெற்றார்  ! கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும் ! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்!

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கல்வி உரிமை பரப்புரைப் பயணம் ஆகஸ்டு 20இல் தொடங்கி ஆக. 26இல் முடிவடைகிறது. சென்னை, குடியாத்தம், சங்கரன் கோயில், மேட்டூர், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 6 ஊர்களிலிருந்து பயணக் குழுக்கள் தனித் தனியாகப் புறப்பட்டு பெரம்பூர் வந்து சேருகின்றன. பெரம் பூரில் பயண நிறைவு விழா மாநாடாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட் டோருக்கான கல்வி வேலை வாய்ப்பு எனும் சமூக நீதித் திட்டங்கள் தமிழகத்தை இந்தியா விலேயே முதன்மை மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகக் கல்வி உரிமையில் நடுவண் கட்சியின் குறுக்கீடுகள் தமிழகம் கட்டி எழுப்பிய சமூக நீதிக் கட்டமைப்பைக் குலைத்து வருவ தோடு வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவரைக் குவித்து வருகிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உருவாக்குவதே இப் பயணத்தின் நோக்கம். மொத்தம் 140 ஊர்களில் பரப்புரை நடக்கிறது....

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு (Current A/C) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 IFC Code : KVBL0001257 தொடர்புக்கு:  7299230363  

பெண்களைப் புறக்கணிக்கும் அய்.அய்.டி. நிறுவனங்கள்

பெண்களைப் புறக்கணிக்கும் அய்.அய்.டி. நிறுவனங்கள்

மாணவர்களைவிட மாணவிகள் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அவர்களது சேர்க்கை குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். கோரக்பூர் ஐ.ஐ.டி.யில்  நடைபெற்ற 64ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: 2017இல் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதிய 1,60,000 பேரில் 30,000 பேர் மட்டுமே மாணவியர்.அதே ஆண்டில் ஐஐடி-யில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்த 10,878 பேரில் 995 பேர் மட்டும் மாணவியர். பொது தேர்வுகளில் மாணவியர் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும், மாணவர்களைவிட மாணவியர்  அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஐஐடி-களில் சேரும் மாணவியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. கோரக்பூர் ஐஐடி-யில் மொத்தம் 11,653 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 1,925 பேர் மட்டுமே மாணவிகள். இது 16 சதவீதத்துக்கும் சற்று அதிகம். இந்த நிலை மாற...

மோடி சுற்றியது 84 நாடுகள்; ஆன செலவு ரூ.1,484கோடி!

மோடி சுற்றியது 84 நாடுகள்; ஆன செலவு ரூ.1,484கோடி!

பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 52 நாடு களுக்குசுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், இதற்காக ரூ. 355 கோடியே 78 லட்சம் செலவாகி இருப்பதாகவும் பிரதமர்அலுவலகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந் தது. இந்நிலையில், மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் குறித்த புதிய விவரங்கள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே. சிங், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பிரதமர் மோடி, 2014 முதல் கடந்த நான்காண்டுகளில் 84 நாடுகளை சுற்றி வந்திருப்பதாகவும், இதற்காக சுமார் ரூ. ஆயிரத்து 484 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2014 மே மாதம் முதல் இதுவரை பிரதமர் மோடி மொத்தம் 42 வெளிநாட்டுப் பயணங்களில் 84 நாடுகளை சுற்றி வந்துள்ளார். 2015-16இல் மட்டும் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கும், 2016-17இல் 18 நாடுகளுக்கும், 2017-18இல் 19 நாடுகளுக்கும் பயணம் செய்துள் ளார்.இதற்காக 2014-15இல் ரூ. 93 கோடியே 76 லட்சமும், 2015-16இல்...

சத்தீஸ்கர் தேர்தல் வெற்றிக்காக மாந்திரீக பூஜை நடத்திய பா.ஜ.க.!

சத்தீஸ்கர் தேர்தல் வெற்றிக்காக மாந்திரீக பூஜை நடத்திய பா.ஜ.க.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, பாஜக தலைமை மாந்திரீக பூஜை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஏற்கெனவே பாஜக-தான் ஆட்சியில் உள்ளது. ராமன் சிங் என்பவர் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் வரப்போகும் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாந்திரீக பூஜை நடத்தியுள்ளனர். சட்டப்பேரவை அலுவலகத் திலேயே நடத்தப்பட்ட இந்த பூஜையில், முதல்வர் ராமன் சிங் மற்றும் பாஜக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ராமன் சிங் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா என்று பிரதமர் மோடி ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, பாஜக-வினரோ இன்னும் மந்திரவாதியை விட்டு வருவதாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.ஆனால், மாந்திரீக பூஜையெல்லாம் நடக்கவில்லை என்றும், சட்டப் பேரவைக்கு வந்த மந்திரவாதி ராம்லால் காஷ்யப், பாஜக-வின் இளைஞரணி மண்டலத் தலைவராக இருப்பவர்...

அறநிலையத் துறை முதல்முறையாக நியமனம் பார்ப்பனரல்லாதார் அர்ச்சகரானார்!

அறநிலையத் துறை முதல்முறையாக நியமனம் பார்ப்பனரல்லாதார் அர்ச்சகரானார்!

தமிழ்நாடு அறநிலையத்துறை நிர்வகிக்கும் மதுரை கோயில் ஒன்றில் பார்ப்பனரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல்வராக கலைஞர் இருந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தில் பார்ப்பனரல்லாத பிற சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2007-08ஆம் ஆண்டு அனைத்து சாதியில் இருந்தும் 206 பேர் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஒருவருக்கு பணி நியமனம் வழங்கப் பட்டுள்ளது. தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் பார்ப்பனரல்லாத  ஒருவருக்கு அர்ச்சகர் பணி வழங்கப் படுவது இதுவே முதன்முறை. இது குறித்து இந்து சமய அற நிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு கோயிலுக் கும் ஒரு ஆகமவிதி உள்ளது. அந்தக் கோயில்களின் ஆகமவிதிகளுக்குட் பட்டே அர்ச்சகர் நியமனம் நடை பெறும். கோயில் செயல் அதிகாரி நேர்காணல் கண்டு ஆகம விதிகளுக்குட்பட்டு அர்ச்சகர்களைத் தேர்வு செய்வார்கள். எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களும் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டுதான்...

திராவிட இயக்க ஆய்வு நூல் கூறுகிறது அடக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரத்தில் அமர்த்தியது திராவிட இயக்கம்

திராவிட இயக்க ஆய்வு நூல் கூறுகிறது அடக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரத்தில் அமர்த்தியது திராவிட இயக்கம்

1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநிலக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்தது. முதலில் மாணவராகவும், பிறகு மாநில நிர்வாகத்தில் அதிகாரியாக இடம்பெற்றும் அப்போதைய மாற்றங்களை நேரிலேயே பார்த்தவர் எஸ்.நாராயண். “தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கை யாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” என்று தன்னுடைய புதிய நூலில் எழுதியிருக்கிறார். ‘தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகள்: அண்ணாவுக்குப் பிறகு… தமிழக முதலமைச்சராக இருந்த சி.என்.அண்ணா துரை 1969-ல் மறைந்தார். மு.கருணாநிதி முதலமைச்சராக அடுத்து பதவிக்கு வந்தார். இந்தியை எதிர்த்தவர்கள், டெல்லிக்கு எதிராக இயக்கங்கள் நடத்தியவர்கள், இளைஞர்கள், மெத்தப் படித்தவர்கள், ஆற்றொழுக்காக அடுக்கு மொழியில் பேசுகிறவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றனர். முந்தைய அரசுகளுக்கு இணையாக மட்டுமல்ல, அதைவிடச் சிறப்பாக மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தங்களால் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் அவர்கள்....

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் – 86 மணி நேர – ஒலி புத்தக வெளியீட்டில் கழக பொதுச்செயலாளர் ஆற்றிய உரை

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் – 86 மணி நேர – ஒலி புத்தக வெளியீட்டில் கழக பொதுச்செயலாளர் ஆற்றிய உரை

”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம் கோவை 19082018

”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம் கோவை 19082018

”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம். தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ”ஆரிய சூழ்ச்சியும் – திராவிட எழுச்சியும்” எனும் தலைப்பிலும், புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் ”இன்றைய சூழலில் திராவிடத்தின் தேவை” எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். நாள் : 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 5 மணிக்கு இடம்- : அண்ணாமலை அரங்கம்,சாந்தி திரையரங்கம் அருகில், கோவை.

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! காஞ்சிபுரம் 03082018

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! காஞ்சிபுரம் 03082018

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! பேச்சுரிமை,கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறையை எதிர்த்து…… நாள் : 03.08.2018,வெள்ளி நேரம் : மாலை 4.00 மணி இடம் : பெரியார் சுடர் காந்தி சிலை,காஞ்சிபுரம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் பண்ருட்டி வேல் முருகன்,மதிமுக து.பொ.செயலாளர் தோழர் மல்லை சத்யா உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தன்னாட்சித் தமிழகம் அமைப்பு.

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! சென்னை 05082018

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! சென்னை 05082018

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! கழகத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு ”பெரியார் பிற்படுத்தப்ப்ட்டவர்களுக்கான தலைவர் என்பது சரியா?” எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். மேலும் புத்தர் கலைக்குழு மணிமாறன் மகிழினி,சங்கர் சமூகநீதி அறக்கட்டளை தோழர் கவுசல்யா,ஊடகவியலாளர் தோழர் ஆசீப் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள். நாள் : 05.08.2018 ஞாயிறு நேரம் : மாலை 5.00 மணி. இடம் : இக்சா மையம்,பாந்தியன் சாலை,அருங்காட்சியகம் எதிரில்,எழும்பூர்,சென்னை.

தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! சென்னை 01082018

தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! சென்னை 01082018

ஆகஸ்ட் 1ல், தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பை கண்டித்தும், போராடுவோர் மீது போடப்படும் பொய் வழக்குகளை நிறுத்த வலியுறுத்தியும், 8 வழிச்சாலை பிரச்சனையில் போராடும் மக்கள்,விவசாயிகள் உணர்வுகளை மதிக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி கோரியும் தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! நாள் : 01.08.2018 புதன் கிழமை. நேரம் : மாலை 3.00 மணி. இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில். பல்வேறு அரசியல்கட்சிகள்,சமுதாய அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்கும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழர் வாழ்வுரிமைக்கூட்டமைப்பு.

கழகத்தோழர் பிரபு அவர்கள் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ! காவேரிப்பட்டிணம் 31072018

கழகத்தோழர் பிரபு அவர்கள் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ! காவேரிப்பட்டிணம் 31072018

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாள் : 31.07.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : மாலை 3.00 மணி. இடம் : காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையம். கிருட்டிணகிரி மாவட்டம். கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒன்றிய அமைப்பாளர் தோழர் பிரபு அவர்கள் 17.07.2018 அன்று படுகொலை செய்யப்பட்டு காவேரிப்பட்டிணம் சந்தாபுரம் மேம்பாலம் கீழே உடல் கண்டெடுக்கப்பட்டது.இந்தக் கொலை குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கிறது.எனவே காவல்துறை இந்த கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தொடர்புக்கு : தோழர் குமார், மாவட்டத்தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம், கிருட்டிணகிரி மாவட்டம். 9585887865.

நீதியின்  புதைச் சேற்றில்….   மனுஷ்ய புத்திரன்

நீதியின் புதைச் சேற்றில்…. மனுஷ்ய புத்திரன்

‘என் மகனை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’ என்று மன்றாடுகிறாள் அற்புதம் அம்மாள்.   `என் மகனைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுங்கள்’ என்று மன்றாடிய அதே அற்புதம் அம்மாள். இப்போது ‘என் மகனைக் கொன்றுவிடுங்கள்’ என்று கேட்கிறாள்   மரணத்தைவிடவும் கொடிய மரணங்கள் இருக்கின்றன தண்டனைகளை விடவும் கொடிய தண்டனைகள் இருக்கின்றன ஒருவனைக் கொல்லவேண்டும் என்பதில்லை ஆனால் அழிக்கலாம் நிதானமாக எந்தக் குழப்பமும் இல்லாமல்   சட்டத்தின் சிலந்தி வலைக்குள் தன் மகனை ஒப்புக்கொடுத்தாள் அற்புதம் அம்மாள். நீதியின் புதிர்ப் பாதைகளுக்குள் அவளுக்கு வழி தவறிவிட்டது எங்கும் போய்ச் சேராத கருணையின் இருட்டில் மீட்சியின் திசைகள் அவளுக்குப் புலப்படவில்லை இருபத்தேழு வருடங்களாக வீடு திரும்பாத மகனுக்காக சிறிய மெழுகுவத்திகளின் துணையுடன் காத்திருக்கிறாள் அற்புதம் அம்மாள்.   அவள் மகனுக்குப் பின் நிறையபேர் குற்றம் சாட்டப்பட்டார்கள் நிறையபேர் விடுதலையானார்கள் நிறையபேருக்கு நிறைய கருணை கிடைத்தது மனிதர்களைக் கொன்றவர்கள் மானைக்கொன்றவர்கள் ஆயுதங்களை விநியோகித்தவர்கள் கலவரங்களில் கர்ப்பத்திலிருந்த சிசுவைக்...

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

  மே 2018 ‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த ‘சுயமரியாதை-சமதர்மக் கட்டுரைகள்’ மிகவும் சிறப்பு. ‘பணக்காரன்-ஏழை’ முரண்பாடுகளைக் கோட்டையாக இருந்து பாதுகாப்பதே இந்தியாவின் ‘மேல்ஜாதி-கீழ்ஜாதி’ அமைப்புதான் என்று 1931ஆம் ஆண்டிலேயே பெரியார் எவ்வளவு சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது பெரும் வியப்பைத் தருகிறது. இந்தியாவில் ‘வர்க்கப் போராட்டம்’ என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு ஜாதிய ஒடுக்குமுறை காரணமாக நடக்கும் மோதல்களுக்கு முகம் கொடுக்கும் காலகட்டத்திலேதான் இருந்து கொண்டிருக்கிறோம். “நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற பகத்சிங் நூலை தமிழில் மொழி பெயர்த்த ப. ஜீவானந்தம் மீது தேசத் துரோக வழக்கை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டபோது அதற்கு ‘மன்னிப்புக் கேட்டு’ எழுதச் சொன்னது நான்தானே தவிர, ப.ஜீவானந்தம் அல்ல என்று பெரியார் எழுதியதைப் படித்தபோது அவரது நேர்மை வியக்க வைத்தது. இத்தகையத் தலைவர்களை இப்போது பார்க்க முடியுமா? – தமிழ்நேசன், திருச்சி ஜாதி-மதப் பண்பாட்டை எதிர்க்காமல், ஆணாதிக்க எதிர்ப்பு மட்டுமே சமத்துவத்தை உறுதி செய்யாது என்ற...

மோடியின் நான்கு ஆண்டு வேதனைகள்

மோடியின் நான்கு ஆண்டு வேதனைகள்

பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, 2014ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் முழுமையாக துரோகம் செய்திருக்கிறது. கடந்த நான்காண்டுகளில், நாட்டின் மீதும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். நாட்டின் பொருளாதார அடிப்படை களுக்கு வலுவாக இருந்தவற்றை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் ஜி.எஸ்.டி. அமலாக்கம் என்னும் இரட்டைத் தாக்குதல்கள் சின்னாபின்னமாக்கிவிட்டன. இவ்விரண்டும், மீட்கமுடியாத அளவிற்கு நம் பொருளாதாரத்தை அழித்துள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, பாதிக்குப் மேல் பங்களிப்பினைச் செலுத்திவந்த, வேளாண்மைக்கு அப்பால் உள்ள தொழில் களில் ஈடுபட்டுவந்த அதிகபட்ச எண்ணிக்கை யிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. ஜிஎஸ்டியும் அது அமல்படுத்தப் பட்ட விதமும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகுத்து வந்த இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை கிட்டத்தட்ட...

வி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்

வி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்

28.12.1992 அன்று திருச்சி பெரியார் நினைவு நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் – குழந்தைகள் காப்பகக் கட்டிடத் திறப்பு விழாவில் நிகழ்த்திய உரை: பெரியார் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருக்குப் பின்னாலே இருக்கின்ற மக்களின், வருகின்ற சந்ததியினரின் உள்ளங்களிலே, அவரது கருத்துகள் நிறைந்திருக்கின்றன என்றால், அவர் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது. மாறாக, அவர் என்றைக்கும் மக்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். மிகப் பெரிய தலைவர் பெரியார் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். அதன் காரணமாக இந்தச் சமூக அநீதியைக் கொடுமையைத் துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்; அதற்காகவே உழைத்தார். ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது, ‘அவமானம்’ என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப் பட்டார்கள். நெருப்பிலே வெந்து கொடுமைப் படுவதைவிடக் கொடுமையானதுதான்...

சாதிய சமூகத்தை ஜனநாயகப்படுத்த முயன்றவர்

சாதிய சமூகத்தை ஜனநாயகப்படுத்த முயன்றவர்

பார்ப்பனர்களின் பார்வையில் வி.பி.சிங் கொடிய எதிரியாகவே பார்க்கப்பட்டார். ‘துக்ளக்’ சோ வி.பி.சிங் மீது நஞ்சு கக்கியதோடு அதற்காக அவர் அரசியல் எதிரியான காங்கிரசோடுகூட சமரசத்துக்கு தயாராக இருந்தார். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியான இன்னொரு விஷயம்வி.பி.சிங்கின் மரணம் பற்றிய செய்தியாகும். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் மும்பை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பர்ஸானா வெர்ஸெ கூறுவது போல, வி.பி.சிங் தான் இறப்பதற்கு ஒரு தவறான தருணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். “மக்களின் எதிரிகள் எதைப் புகழ் கிறார்களோ அதை நாம் இகழ வேண்டும். அவர்கள் எதை இகழ்கிறார்களோ அதை நாம் புகழ வேண்டும்” என்றார் மாவோ.அது வி.பி.சிங் விஷயத்திற்கும் ஓரளவு பொருந்தும்.எனவே, அவரைப் பற்றி இந்து பாசிசவாதிகளின் மிக சாதுரியமான, மிக சாமர்த்தியமான பிரதி நிதியான “சோ’ ராமசாமி கூறியுள்ளதைக் காண்போம்: “வி.பி.சிங்கின் (ஆட்சிக்) காலம் நெறி தவறிய காலம். அந்த மனிதரை நான் எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறேன்.ஆக, எனது கருத்துக்கள் ஒரு...

இந்திய அரசியலில்   அதிசய மனிதர் – விடுதலை இராசேந்திரன்

இந்திய அரசியலில் அதிசய மனிதர் – விடுதலை இராசேந்திரன்

வடநாட்டில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. பெரியாரியல்வாதிகளான  நமக்கு  எந்த வட நாட்டுத் தலைவர் மீதும் அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. அம்பேத்கர் ஒருவரைத் தவிர; எல்லைகளைக் கடந்து தமிழர்களின் இதயத்தோடு ஒன்றிவிட்ட ஒரு தலைவராக வி.பி.சிங் மட்டுமே தெரிகிறார். இந்திய அரசியலில் இவரைப்போல் ஒரு அதிசயமான மனிதரை நாம் கண்டதில்லை. பார்ப்பன ஊடகங்கள் அவர் மீது கக்கிய கசப்பு ஒன்றே போதும். என்றைக்குமே ஊடகங்களின் வளையத்துக்குள் அவர் வீழ்ந்தது கிடையாது. இந்த நாட்டின் ஊடகங்கள் பற்றிய தெளிவான புரிதல் தந்தை பெரியார் அவர்களைப் போல் வி.பி.சிங்குக்கு இருந்தது. அதை வி.பி.சிங் தனக்கே உரிய மொழியில் படம் பிடித்துக் காட்டி யிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததற்காக அவர் பதவியை இழந்தார். நாடாளுமன்றத்தில் அவர் நம்பிக்கை ஓட்டு கிடைக்காமல் பதவியை விட்டு விலகினார். பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான். (2.12.89 இல் பிரதமராகப்...