கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி! சென்னை 08082018

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி !

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விடை பெற்ற திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு 08.08.2018) காலை 11 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்.அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீரவணக்க உரையாற்றினார்கள். தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

You may also like...