Author: admin

ஜாதி ஆணவ படுகொலை, மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வேலூர் 06112015

வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும்,மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராசேந்திரன்,கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா,கெளதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனார், விடுதலைசிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் சந்திரகுமார், SDPI மாவட்ட தலைவர் தோழர் முகமது ஆசாத், ஆதித் தமிழர்பேரவை மாவட்ட செயலாளர் தோழர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் தோழர் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தோழர் சிங்கராயர்,...

பீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் லல்லு பிரசாத் கொந்தளிப்புப் பேட்டி

பீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் லல்லு பிரசாத் கொந்தளிப்புப் பேட்டி

‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, பீகார் குறித்து ஒளிபரப்பிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பீகார் மாநிலத்தை பார்ப்பனர்கள் ஆட்டிப் படைத்த கொடூரமான வரலாறுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த நிகழ்வில் பேட்டி அளித்த லல்லு பிரசாத், பார்ப்பனக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தாம் அரசியலுக்கு வந்ததாக கூறினார். அந்த சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தித் தொகுப்பு. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை மாட்டுக்குப் பதிலாக கழுத்தில் ஏர் பூட்டிக் கொடுமைப்படுத்திய பார்ப்பன உயர் ஜாதிக் கூட்டம், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்கான குரலைக் கொடுக்க ஆரம்பித்த நிலையில், அதற்காக எங்கள் ஆட்சிச் சக்கரம் சுழன்ற நிலையில், எங்கள் ஆட்சியைக் காட்டாட்சி (ஜங்கள்ராஜ்) என்று வருணிக்கிறார் – ஆனால், மோடியோ உயர்ஜாதி யினருக்கான கருவி என்றார் லாலுபிரசாத். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு வடக்கே மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம் தவிர்த்த அனைத்து மாநிலங்களும் பார்ப்பனீய கட்டுக்குள் சென்றுவிட்டன. மகாராஷ்டிரத்தை எடுத்துக் கொண்டால் சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா...

அரசியல் சமூகத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதே மதச் சார்பின்மை சங்பரிவார் புரட்டுகளுக்கு மறுப்பு

இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர் ஜவகர்லால் நேரு பல்கலையின் பேராசிரியர் ரொமிலா தாப்பர். சங்பரிவார் முன் வைக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு சரியான மறுப்புகளை முன் வைத்து ‘பிரன்ட்லைன்’ (செப்.18) ஆங்கில இதழுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள்: வரலாற்று விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ‘ஆரியர்கள்’ எனும் தலைப்பு தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆரியக் கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தையோ, இந்திய மண்ணில்தான் ஆரியர்கள் உதித்தார்களா? போன்ற கேள்விகளையோ யார் எழுப்பினாலும் உடனடியாகச் சமூக வலை தளங்களில் அவர்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான வரலாற்று விவாதங்களுக்கு இடமில்லாமல் போகிறது. கலாச்சாரத் தேசியம் என்பதற்கு அர்த்தம், தேசிய மயமாக்கப்பட்ட கலாச்சாரம் என்பதுதானே? அதாவது, ஒரே ஒரு கலாச்சாரம் மட்டுமே உள்ளது எனச் சொல்வது தானே? என்று கேட்கிறார்கள். சமகாலப் பாரம்பரியம் எதுவும் அசலானது இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றிய பாரம்பரியங்களில்கூட ஏதோ ஒரு கட்டத்தில் இடையூறு நிகழ்ந்துள்ளது. ஆனால் ஆங்கிலேயர்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

ஆயுத பூஜை பண்டிகையில் 1000 கார்கள் விற்று மாருதி சுசுகி சாதனை. – செய்தி விற்பனை இந்துக்களுக்கு மட்டும் தானே? இல்லேன்னா சிவசேனாக்காரங்க கம்பெனிய நொறுக்கிடுவாங்க… மத ரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகம், அணுகுண்டைவிட ஆபத்தானது. – விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவரிடம் மனு சரியான கருத்து; ‘மதவாதப் பரவல் தடை’ ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வருவது குறித்து அவசரமாக ஆலோசிக்க வேண்டும். இந்தியாவின் முக்கிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் அமைக்கப்படும். – தேவஸ்தானம் இதற்கெல்லாம் தனித் தனியா ‘ஸ்தல புராணங்கள்’ எழுதப்படுங்களா…? இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் ‘மதம்’ மாறுவதற்கு மறுத்த ‘பிராமணர்கள்’தான் இன்றைய தீண்டப்படாத மக்கள். – பா.ஜ.க. பேச்சாளர் பச்சோங்கர் சாஸ்திரி அப்படின்னா இன்றைய ‘பிராமணர்கள்’ எல்லாம் இஸ்லாமியர் காலத்துல ‘முல்லாக்களாக’ இருந்தவங்களா, சார்? இந்தியாவில் ‘வாடகைத் தாய்மார்கள்’ இந்தியர்கள் கருக்களையே சுமக்க வேண்டும். வெளிநாட்டினர் கருக்களை சுமக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு...

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார். 3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றி யுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. 5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத் தினான். 7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகா சூரனுடன் போர் துவங்கினார். 8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான். 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!...

தலையங்கம் மதவெறிக்கு எதிராக  விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்

தலையங்கம் மதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் – படைப்பாளிகள்

மோடியின் பார்ப்பனிய மத ஆட்சி -குறுகிய காலத்திலேயே பின்னடைவுகளை சந்திக்கத் தொடங்கி விட்டது. மக்களாட்சி முறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் – அந்தக் கட்டமைப்புக்குள் மதவெறி ஆட்சியை நிறுவிட முயலும் முயற்சிகளும் அதற்கான வெறுப்புப் பேச்சுகளும் உலகம் முழுதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. சுமார் 40 எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கலை படைப்புகளுக்காக கிடைத்த விருதுகளை திருப்பி அளித்து எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என்று 120 விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர். உயிரியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானியும், ‘தேசிய அறிவு ஆணையம்’ என்ற அமைப்பில் தலைவராக இருந்தவருமான ‘பத்மபூஷன்’ விருது பெற்ற பி.எம். பார்கவா, தனது விருதை திருப்பி அனுப்பிவிட்டார். “இந்த அரசுக்கு சகிப்புத் தன்மை இல்லை; பகுத்தறிவு மீதும் அறிவியல் மீதும் தாக்குதலை நடத்துகிறது” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “மதத்தை அரசியலோடு கலக்கக் கூடாது. நம்பிக்கைகள் வீட்டிற்குள்ளேயே...

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

6.11.2015 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட அக்லக் படுகொலையை கண்டித்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கக் கோரியும், தொடரும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், 30.10.2015 அன்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கழகத்தின் சார்பில் வேலூர் சத்துவாச்சேரி காவல்நிலையத்தில் 21.10.2015 அன்று மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த அன்றைய நாளே வேலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சட்டம் அமுலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால் பதட்டமான சூழல் உருவாகும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு 29.10.2015 அன்று விசாரணைக்கு வந்தது. 30.10.2015 அன்று அரசு தரப்பின் விளக்கங்களைக் கேட்ட நீதிமன்றம் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட...

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டவர்கள் என்பதற்கு இராமாயணம், மகாபாரதத்திலேயே ஆதாரங்கள் உண்டு. மௌரியர் காலத்துக்குப் பின்பும், குப்தர் காலத்திலும் இலக்கிய வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமா யணம் ஆகியவை மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்துக்குத் தெளிவான ஆதாரங்களைத் தந்துள்ளன. (தொடக்கக்கால °மிருதிகளும், புராணங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைதாம்). பொழுதுபோக்குக்கு என்பதை விட உணவுக்காக சத்திரியர்கள் அடிக்கடி வேட்டையாடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு மகாபாரதம் – குறிப்பாக அதிலுள்ள வனபர்வம் – ஆதாரமாக இருக்கிறது. உணவுக்காக வளர்ப்பு விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததற்கும் இது ஆதாரத்தைத் தருகிறது. ஹிம்சையை பார்த்து மனம் வருந்திய தர்மர்கூட தன் தம்பிகளுக்கும், திரௌபதிக்கும், காட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களுக்கும் உணவு தர தினந் தோறும் ரூரூ மான்களையும், கிருஷ்ண மிருகத்தையும் வேட்டையாடியதாக இதில் விவரிக்கப்பட் டுள்ளது. பார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. ஜெயத்ரதனுக்கும்...

இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?

1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல். 1926க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பகத்சிங் துhக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 1933 -இல் அன்னை நாகம்மையார் மறைந்த-அடுத்த நாளே தடையை மீறி,...

தீபாவளி

தீபாவளி

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டு களாக எழுதியும் பேசியும்  வருகின்றேன்.  இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும்,  இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள்  இழிநிலையை  மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை.  அவனது தலைமைக்கு அடிமை,  மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்”  என்ற  அறிவுரைப்படி மான மில்லா மக்களே  இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு  ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி...

இந்து மதப் பண்டிகைகள்

சொர்க்கவாசல் மகிமை மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச்செலவு செய்து கொண்டு போவதும்,  தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் றீக்கிக் கொண்டு  பழனி முதலிய மலைகளுக்குப் போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச்  சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்ப தும், வெட்டித் துண்டாக்கப்பட்ட  குழந்தை உயிர்பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்க மில்லாமல், சொல்லுவதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும்  `பஞ்சாமிர்தம்’ எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டது தானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன? சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே,  அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள் : நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின்...

காட்டாறு செய்திக்கு மறுப்பு

காட்டாறு செய்திக்கு மறுப்பு

//அடுத்த தலைமுறைக்கு அறிவாயுதம்’ என்ற அறிவிப்பை நாம் வெளியிட்ட நேரத்தில்,திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dvkperiyar.comஎன்ற தளத்திலும் பணிகள் தொடங்கிவிட்டன. அதில் 1925 முதல் 1938 வரை குடி அரசு,பகுத்தறிவு, புரட்சி, ஏடுகளில் வெளியான ஏறத்தாழ 2631 கட்டுரைகள் யூனிகோட் மற்றும் பி.டி.எஃப் வடிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தைப் பாராட்டுகிறோம்// http://www.suyamariyathai.org/indexnews.php?nid=213 இது குறித்து சில வார்த்தைகள் இனி வரும் காலத்தில் கையடக்கமான தந்தி போன்ற சாதனம் அனைவரிடமும் இருக்கும்” என்று கூறிய சமூக விஞ்ஞானி பெரியாரின் எழுத்துக்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் பொருட்டு, பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுகளையும் தொகுத்து 1925 முதல் 1938 வரை 27 தொகுதிகளாகவும், 1930ல் பெரியாரால் வெளியிடப்பட்ட ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை ஒரு தொகுதியாகவும் தொகுத்து திராவிடர் கழகத்தின் வழக்குகளால் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பெற்று 2007ல் வெளியிட்ட அன்றே அனைத்து தொகுப்புகளையும் அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளமான periyardk.org பதிவேற்றம் செய்யப்பட்டது. ஓரிரு மாதங்களில் யூனிகோடாகவும்...

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

அரசு ஆணைகளை புறந்தள்ளிவிட்டு, காவல் நிலையங்களை ‘இந்து’ வழிபாட்டு இடமாக்கி, ஆயுத பூஜை போடும் மதவாத நிகழ்வை நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் மாநகர ஆணையரிடம் நேரில் தோழர்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணை களையும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  மாநகர காவல் துறை ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி கருத்துகளை பொறுமையுடன் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, துணை செயலாளர் சுகுமார், அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் பலரும் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 29102015 இதழ்

அம்பேத்கர் முன் வைக்கும் ஆழமான சிந்தனைகள் – இந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை

அம்பேத்கர் முன் வைக்கும் ஆழமான சிந்தனைகள் – இந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை

ஜாதி-மொழி-தேசம் குறித்த அம்பேத்கரின் ஆழமான சிந்தனை களை எடுத்துக்காட்டுகிறது இக் கட்டுரை. அம்பேத்கர் என்றவுடன் அவரை தீண்டப்படாதவர்களின் தலைவர் என்றே சமூகம் பார்க்கிறது. அவரின் ஆழமான சமுதாய சிந்தனையும், அறிவும் புறந்தள்ளப்படுகிறது. ஜாதி யின் பெயரால் நாம் இழந்தது சுய மரியாதை, கல்வி, வேலை, இருப் பிடம், செல்வம் என்ற சமூக உண்மையை புரிய வைத்தவர் அம்பேத்கர். ஒரு பள்ளி சிறுவன், தனக்கு அம்பேத்கரை பிடிக்கும் என்கிறான். மற்றொருவன் தனக்கு அம்பேத்கரைப் பிடிக்காது என்கிறான். இந்த விருப்பு வெறுப்புக்கு காரணம் அவருடைய ஜாதியே. அரசியல்வாதிகள் அம்பேத் கரை ஒரு படமாக்குகிறார்களே தவிர, பாடமாக்கவில்லை. இதைப் பற்றி அம்பேத்கர், “இந்தியாவிலோ புனிதர்களையும், மகாத்மாக்களையும் வழிபடுகிறார்கள். வழிபடுவது மட்டுந்தான், அவர்கள் வழியில் நடப்பதில்லை என்ற போக்கு பொது மக்களிடம் இருப்பதால், அவர்களுடைய திட்டத்தால் பெரிய பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை” (அம்பேத்கர் நூல் தொகுப்பு-1, பக்.131) என்கிறார். தீண்டப்படாதவர்களின் தலைவர் என அக்காலத்தில் தான்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்து! கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்து! கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மன்னார்குடியில்: 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உள்பட அனைத்து அலுவலகங்களுக்கும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி, புரோகிதர்களை அழைத்துவந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அரசு...

தனியார் துறையில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் – டி. இராசா

தனியார் துறையில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் – டி. இராசா

தனியார் துறையில் இடஒதுக் கீட்டை வலியுறுத்தியும், இடஒதுக் கீட்டுக்கு எதிராக பார்ப்பனியம் கூக்குர லிடுவதைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.இராசா, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ டில்லி பதிப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவம்: ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பட்டியல் இனப்பிரி வினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இவர்களில் பலரின் விருப்பம். குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராடுவதையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யதையும் தொடர்ந்து இடஒதுக்கீடு தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக குவிந்து கொண்டிருக் கின்றன. சமூகத்தின் ‘மேல்தட்டு அறிவாளி’ப் பிரிவினருக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு உறுத்திக் கொண்டே இருக்கிறது. சமூகநீதி என்ற கருத்தே அவர்களுக்கு கசப்புதான். இடஒதுக்கீட்டின் பயன்,...

‘அருந்ததினர்’ மீதான  தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

‘அருந்ததினர்’ மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள வெட்டல் நாயக்கன்பட்டியைச் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பாலமுருகன் என்பவருக்கும் ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தைச் சார்ந்த நதியா என்பவருக்கும் காதல் திருமணத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சார்ந்த மாவட்ட செயலாளர் போஸ் (இவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்) நடத்தி வைத்துள்ளார். இதற்காக விடுதலை சிறுத்தைகள், புரட்சிப் பாரதம், பறையர் பேரவை அமைப்பைச் சார்ந்தவர்கள், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த போஸ் என்ற தோழரை கொடூரமாக கொலை வெறியோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. இதேபோன்று விழுப்புரம் கச்சிராப்பாளையம் அருகே உள்ள கரடி சித்தூரில் ஆதிதிராவிடர் பரிமளா என்பவரை (பறையர் சமூகம்) அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரை விட்டே ஓட நேர்ந்தது. தொடர்ந்து அருந்ததியர் சமூகப் பெண்கள் நான்கு பேரை மந்தையில் நிறுத்தி மானபங்கப்படுத்தி, 19 வயது வெள்ளையம்மாள் என்பவரை படுகொலை செய்ததாகவும், 17 வயது நதியாவை மனநோய்க்கு உள்ளாக்கியதாகவும்...

மதமா அரசா?

மதமா அரசா?

அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை, கண்டனை இல்லாமல் மனித சமூகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா என்பதை யோசித்தால், மதம் மேற்கண்ட காரியங்களுக்கு உண்மையாய்ப் பயன்படுகின்றதா என்பது விளங்கும்., இன்று எந்தத் தேசத்திலும், எந்த மதத்திலும், எந்தச் சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும் சரீரமும் காப்பாற்றப்படுவது மதத்தினாலா, அரசாங்கச் சட்ட திட்டங்களினாலா என்பதை யோசித்துப் பார்த்தாலே, மதத்தின் காப்பும் நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் புரிந்துவிடும். ‘பகுத்தறிவு’ தலையங்கம் 9.9.1934

வழிகாட்டுகிறது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அனைவருக்கும் பொதுவான அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மத சம்பந்தமான விழாக்கள் கொண்டாடக்கூடாது ” என்ற நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர்.இரத்தினசாமி ,மாவட்ட செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் மற்றும் தோழர்கள் சார்பில் நேரில் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்தும்படி அரசு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டார். இதனால் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி, ஆயுத பூசை கைவிடப்பட்டது. இதனைப் பாராட்டும்விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ”இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நாள் : 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை. கருத்தரங்கம் : நேரம் : காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை. இடம் : K.K.S.K.மஹால்,பவானி ரோடு,ஈரோடு. பொது மாநாடு : நேரம் : மாலை 6 முதல் 10 மணி வரை. இடம் : திருநகர் காலனி,ஈரோடு. தோழர் கொளத்தூர் மணி,தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் விடுதலை ராஜேந்திரன்,பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் அப்துல்சமது,மனித நேய மக்கள் கட்சி, தோழர் ஆளூர் ஷாநவாஸ்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தோழர் இரா.அதியமான்,நிறுவனர் தலைவர்,ஆதித்தமிழர் பேரவை, தோழர் புனிதப் பாண்டியன்,ஆசிரியர் தலித் முரசு, தோழர் வே.மதிமாறன்,முற்போக்கு எழுத்தாளர், தோழர் சுந்தரவள்ளி,முற்போக்கு எழுத்தாளர். மாநாட்டின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின் இசை நிகழ்சியும்,வீதிநாடகமும் நடைபெறும். தொடர்புக்கு : ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.9842712444 – 9944408677

வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்

வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை: தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் பன்னாட்டு குளிர்பான ஆலையை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தாக்குதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உள்பட பலர் கொடுங்காயம் அடைந்துள்ளனர். காவல்துறை யின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுவாக பொதுமக்கள் குடிநீர் பிரச்சனைக் காகவோ, போக்குவரத்து வசதிகளுக்காகவோ, சுகாதாரச் சீர்கேடுகளுக்காகவோ, குடிமைப் பொருட் களுக்காகவோ போராட்டம் நடத்தினால் அதற்குரிய அதிகாரிகள் தான் வந்து பேசி சமரசம் செய்வார்கள். ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் எந்தவிதமான போராட்டங்களாக இருந்தாலும் காவல்துறை மட்டுமே வந்து மக்களிடம் பேசுவதும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையினை நிகழ்த்து வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தமிழகத்தை ஆளும்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதால் காவல்துறையின் அத்துமீறல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின்...

பெரியாரே  சமூகத்தின் ஞாயிறு

பெரியாரே சமூகத்தின் ஞாயிறு

இதுவரை முகநூலில் மூழ்கி முடிப்பேன் ஞாயிறை … இம்முறை முகங்களில் மூழ்கி முடித்தேன் ஞாயிறை … இயந்திர வாழ்வில் இயக்க ஓய்வாய் இரக்கம் பேச ஞாயிறு … இயல்பு மீறிய இயக்க வாழ்வில் இதயம் பேசிட ஞாயிறு … வீதிதனில் இறங்கி பரப்புரையில் கலந்தே மக்களதில் கலந்த ஜாதி புழுதியதை சுட்டெரிக்கும் முயற்சியதில் ( தி.வி.க )பெரியாரின் ஞாயிறுகள் … காஞ்சி மாவட்டமெங்கும் காலடி பதித்தே கருத்ததனை விதைத்தே பெரியாரின் கனவெனவே நின்ற ஞாயிறு … தோழர்களின் பணியதுவோ கடினமன்றோ மக்களின் அறியாமையோ கொடுமையன்றோ சுட்டெரிக்கும் வேளையிலும் சுடாமல் கையேந்திய ஞாயிறு …. களமாடும் கருப்புகளின் கம்பீரம் கண்கொண்டு கண்டேனே கருத்தாடும் கரும்புலிகள் சொல்கீரி சிலிர்த்ததோர் ஞாயிறு … பெரியாரே சமூகத்தின் ஞாயிறு என்றுணர்ந்த எனக்கும் மறக்காதே இந்த ஞாயிறு …. இரா. செந்தில் குமார் ………………. செய்தி : திராவிடர் விடுதலை கழகம் சார்பில் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்...

தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு

தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு நேற்று 24.10.2015 சனிக்கிழமை காலை 10.மணிக்கு திருச்சி.சத்திரம் பேருந்து நிலையம்,ரவி அரங்கத்தில் நடைபெற்றது இதில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சியும் – திரையிடல் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் – புகைப்பட காட்சியும் நடைபெற்றது பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.

Preface

Preface

Revolt was the Self-respect Movement’s first English weekly. In 1925 only 7% of the population in Tamil Nadu was literate. Yet, Periyar dared to start the Tamil weekly Kudi Arasu that year. In 1928, the year that saw Revolt being published, very few Tamilians knew to read or write English. It is surely a historical feat that Revolt continued to be published until 1930. Periyar’s deep and abiding interest and commitment to destroying caste, women’s rights, his opposition to obscurantist faith and belief, to Brahmins, and his endorsement of proportional representation led him to risk such ventures such as these....

காஞ்சி மாவட்டத்தில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? நமது இளைய தலைமுறையின் கவனத்திற்க்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம்,தாழ்த்தபட்ட ஜாதிகளாக, பிற்படுத்தபட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன்,முப்பாட்டன், காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம். பார்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள்.அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது.உழைப்பு ,அடிமை வேலை ,குல தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமூதாயம் விதித்த காறாரான கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படி தகர்த்தோம். ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும்,அம்பேத்கரும் போராடிப் பெற்று தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை பெற்றதால் தகர்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில் காமராசர் ஆட்சியில் தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்தது. அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின. ‘ஜாதி’ யை காட்டி, ‘படிக்ககூடாத ஜாதி’;  ‘உழைக்க வேண்டிய ஜாதி’ என்றார்கள். அத்தகைய ஜாதி தடைகளை, அதே ஜாதி அடிப்படையில் கன்டறிந்து...

பல்லடத்தில் பெரியார் பிறந்தநாள் – ஊர்வலம், கொடியேற்று விழா !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 137 வது பிறந்த நாள் விழா ஊர்வலம் கொடியேற்று விழா ! பல்லடத்தில் கொடியேற்றும் இடங்கள் : 1)தெற்குப்பாளையம் 2)மணி மண்டபம். 3)வடுகபாளையம் 4)அனுப்பட்டி 5)லட்சுமி மில். 6)செட்டிபாளையம் பிரிவு. 7)மாணிக்காபுரம் சாலை. 8)N.G.R..ரோடு. 9)காவல்நிலையம் எதிரில் 10)பேருந்து நிலையம். பல்லடத்தில் 25.10.2015 ஞாயிற்றுகிழமை அன்று காலை முதல் மாலை வரை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137 வது பிறந்த நாள் விழா வாகன ஊர்வலம், கொடியேற்று விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊர்வலம் காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பல்லடம் தெற்குப்பாளையம் பகுதியில் துவங்கியது.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் துவக்கவுரை நிகழ்தினார்.பல்லட நகர தலைவர் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தெற்குப்பாளையம் பகுதியில் கொடியை ஏற்றிவைத்தார். பறை இசை முழக்கத்துடன் எழுச்சியுடன் ஊர்வலம்...

இனி என்ன செய்யப்போகிறோம்? – குறுந்தகடு வழக்கிலிருந்து விடுதலை

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இன அழிப்புப்போர் உச்சத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இங்கு தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஈழத்தின் இன அழிப்பு குறித்து பெதிக வின் சார்பில் ”இனி என்ன செய்யப்போகிறோம்?” எனும் தலைப்பில் காணொலி குறுவட்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஈழத்தில் நடைபெறும் போர் குறித்து தமிழக மக்களுக்கு உண்மைகளை விளக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது அக்குறு வட்டுக்களை வைத்திருந்ததாக கூறி தற்போதைய திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி இராம.இளங்கோவன் அவர்கள் காப்புரிமைச்சட்டத்தின் கீழ் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு 2½ மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அந்த வழக்கில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் அவர்களும் சேர்க்கப்பட்டார்.இந்த வழக்கு கோபி குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 20.10.2015 அன்று...

இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சி – திருச்சியில் திரையிடல்

தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு ! கழக தலைவர் பங்கேற்கிறார் ! இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சி – திரையிடல். இலங்கை கடற்படையின் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் – புகைப்பட காட்சி. நாள் : 24.10.2015 சனிக்கிழமை காலை 10.மணி. இடம் :ரவி அரங்கம்,சத்திரம் பேருந்து நிலையம் திருச்சி. தலைமை : ”தோழர் பேரா.சரஸ்வதி”, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம். முன்னிலை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். வரவேற்பு : தோழர் ஜோதி நரசிம்மன். திறப்பவர் : ஓவியர் வீரசந்தானம். சிறப்புரை : ஜிவாஹிருல்லா,சட்டமன்ற உறுப்பினர். திரையிடல் சின்னப்பா தமிழர். மற்றும் தோழமை அமைப்புகள்.