பல்லடத்தில் பெரியார் பிறந்தநாள் – ஊர்வலம், கொடியேற்று விழா !
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 137 வது பிறந்த நாள் விழா ஊர்வலம் கொடியேற்று விழா !
பல்லடத்தில் கொடியேற்றும் இடங்கள் :
1)தெற்குப்பாளையம்
2)மணி மண்டபம்.
3)வடுகபாளையம்
4)அனுப்பட்டி
5)லட்சுமி மில்.
6)செட்டிபாளையம் பிரிவு.
7)மாணிக்காபுரம் சாலை.
8)N.G.R..ரோடு.
9)காவல்நிலையம் எதிரில்
10)பேருந்து நிலையம்.
பல்லடத்தில் 25.10.2015 ஞாயிற்றுகிழமை அன்று காலை முதல் மாலை வரை திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137 வது பிறந்த நாள் விழா வாகன ஊர்வலம், கொடியேற்று விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஊர்வலம் காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பல்லடம் தெற்குப்பாளையம் பகுதியில் துவங்கியது.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் துவக்கவுரை நிகழ்தினார்.பல்லட நகர தலைவர் தோழர் கோவிந்தராஜ் அவர்கள் தெற்குப்பாளையம் பகுதியில் கொடியை ஏற்றிவைத்தார். பறை இசை முழக்கத்துடன் எழுச்சியுடன் ஊர்வலம் துவங்கியது.
மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்களும்,திராவிடர் கலைக்குழுவின் தோழர் சங்கீதா அவர்களும் ஊர்வலப்பாதை முழுவதும் பொதுமக்களிடையே ஒலிபெருக்கியின் வாயிலாக பெரியாரின் போராட்டங்கள்,சாதனைகள்,திராவிடர் இயக்க கருத்துக்கள் ஆகியற்றை தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்தபடி வந்தனர்.
பல்லடம் மணி மண்டபம் பகுதியில் தோழர் பல்லடம் சுந்தர்ராஜ் அவர்கள் கொடியேற்றினார்.அடுத்ததாக பல்லடம் வடுகபாளையம் பகுதியில் தோழர் பல்லடம் வடிவேல் அவர்கள் கொடியேற்றினார்.
அடுத்து ஊர்வலம் அனுப்பட்டிக்கு சென்றது.அப்பகுதியில் மூத்த பெரியாரியல்வாதியும்,பெரியாரியலை வாழ்வியலாக கொண்டு வாழந்து வருபவருமான தோழர் சீனி செந்தேவன் என்கிற வாசு அண்ணா அவர்கள் மிகசிறப்பானதொரு உரை நிகழ்த்தி கழக கொடியை அனுப்பட்டியில் ஏற்றிவைத்தார்.
மதிய உணவு தோழர் செம்பருதி அவர்கள் தம்பி தோழர் வெங்கடாசலம் அவர்கள் தோட்டத்தில் மாட்டுக்கறி பிரியாணியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.தோழர் மதிய உணவை அங்கு முடித்துக்கொண்டு ஊர்வலத்தை தொடர்ந்தனர்.
அடுத்து செட்டிபாளையம் பிரிவில் தோழர் ராமசாமி அவர்களும்,லஷ்மி மில்ஸ் பகுதியில் தோழர் பார்வதி அவர்களும்,சந்தைப்பேட்டை பகுதியில் தோழர் பல்லடம் சிவசங்கர் அவர்களும்,பேருந்து நிலையத்தில் தோழர் பல்லடம் செம்பரிதி அவர்களும் கழக கொடியை ஏற்றிவைத்தார்கள்.
இந்த கொடியேற்று விழாவிற்கான ஏற்பாடுகளை கழக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,மாநகர தலைவர் தோழர் நீதி ராசன்,தோழர் அகிலன்,தோழர் தனபால்,தோழர் மாப்பிள்ளை சாமி ஆகியோர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.
பல்லடம் நகர தலைவர் தோழர் கோவிந்தராஜ்,தோழர் செம்பரிதி ஆகியோர் பல்லடத்தில் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தி முன்னின்று நடத்தினர்.வரப்பாளையம் குணபாலன்,வினேஷ் ஆகியதோழர்கள் நண்பர்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வல பணிகளுக்கு கழக ஆதரவாளர் தோழர் அனுப்பட்டி பிரகாசு அவர்கள் முன்வந்து உதவிகளை செய்தார்.
மிகுந்த எழுச்சியுடன் பல்லடம் பகுதியில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் 50 க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் தங்கள் இருசக்கர வாகங்களில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 29102015 இதழ்