காட்டாறு செய்திக்கு மறுப்பு
//அடுத்த தலைமுறைக்கு அறிவாயுதம்’ என்ற அறிவிப்பை நாம் வெளியிட்ட நேரத்தில்,திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dvkperiyar.comஎன்ற தளத்திலும் பணிகள் தொடங்கிவிட்டன. அதில் 1925 முதல் 1938 வரை குடி அரசு,பகுத்தறிவு, புரட்சி, ஏடுகளில் வெளியான ஏறத்தாழ 2631 கட்டுரைகள் யூனிகோட் மற்றும் பி.டி.எஃப் வடிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தைப் பாராட்டுகிறோம்//
http://www.suyamariyathai.org/indexnews.php?nid=213
இது குறித்து சில வார்த்தைகள்
இனி வரும் காலத்தில் கையடக்கமான தந்தி போன்ற சாதனம் அனைவரிடமும் இருக்கும்” என்று கூறிய சமூக விஞ்ஞானி பெரியாரின் எழுத்துக்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் பொருட்டு, பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுகளையும் தொகுத்து 1925 முதல் 1938 வரை 27 தொகுதிகளாகவும், 1930ல் பெரியாரால் வெளியிடப்பட்ட ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை ஒரு தொகுதியாகவும் தொகுத்து திராவிடர் கழகத்தின் வழக்குகளால் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பெற்று 2007ல் வெளியிட்ட அன்றே அனைத்து தொகுப்புகளையும் அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளமான periyardk.org பதிவேற்றம் செய்யப்பட்டது. ஓரிரு மாதங்களில் யூனிகோடாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டது. பெரியார் திராவிடர் கழக்த்தில் வெளியிடப்பட்ட அனைத்து வெளியீடுகளும் மின்னூல்களாக பதிவேற்றப்பட்டன.
2012ம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயரில் இயங்க தொடங்கிய பின்னால் dvkperiyar.org என்று தொடங்கப்பட்ட இணையதளத்திலும் தொடர்ந்து பதிவேற்றப்பட்டிருந்தன.
அந்த இணையதளம் முடக்கப்பட்ட காரணத்தாலும், எற்கனவே ஏற்றி வைக்கப்பட்ட கட்டுரைகள் யாராலோ திட்டமிட்டு அழிக்கப்பட்ட காரணத்தாலும், ஜுலை மாதம் முதல் dvkperiyar.com என்ற புதிய பெயரில் அனைத்து குடிஅரசு இதழ்கள் 27 புத்தகங்களாக pdf வடிவிலும், அனைவரும் எடுத்து கையாள வசதியாக யூனிகோட் வடிவில் மறுபடியும் ஒரு மாதத்திற்கும் மேலாக தொகுத்து இணையத்தில் பதிவேற்றினோம். இவை கருவூலம் பகுதியின் கீழ் காணலாம்.
எஸ்.வி.இராஜதுரை மற்றும் வி. கீதா அவர்களால் தொகுக்கப்பெற்ற பெரியாரின் Revolt ஆங்கில வார ஏட்டில் வெளியான கட்டுரைகளும் pdf மற்றும் யூனிகோடாக பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும் கழக வெளியீடாக பெரியார் புத்தகங்கள் மற்றும் பெரியாரிய புத்தகங்கள் மின்னூலாக இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்.
இவை அனைத்தும் காட்டாறு இதழின் ஆசிரியர் குழுவிற்கும் தெரிந்தது தான். அவர்களின் சிலரின் பங்களிப்பும் இதில் உண்டு. என்றபோதிலும்
//அடுத்த தலைமுறைக்கு அறிவாயுதம்’ என்ற அறிவிப்பை நாம் வெளியிட்ட நேரத்தில்,திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dvkperiyar.comஎன்ற தளத்திலும் பணிகள் தொடங்கிவிட்டன. அதில் 1925 முதல் 1938 வரை குடி அரசு,பகுத்தறிவு, புரட்சி, ஏடுகளில் வெளியான ஏறத்தாழ 2631 கட்டுரைகள் யூனிகோட் மற்றும் பி.டி.எஃப் வடிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தைப் பாராட்டுகிறோம்//
என்று ஏதோ இப்போது புதிதாக பதிவேற்றியதுபோல குறிப்பிட்டு இருப்பதை தெளிவாக்கவே இதை எழுதுகிறோம்.
வேண்டுமானால் //காட்டாறு அறிவிப்பால்தான் இவை நடந்தன என்று சொல்லமுடியாது// என்று தங்களின் அறிவிப்பு வேண்டுமானால் கட்டாயம் பொருந்தலாம். எப்படியிருப்பினும் பெரியார் கருத்துக்களை முன்னெடுத்து அனைவரும் செல்வோம் தங்கள் தங்கள் தளங்களில்.