அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை: தமிழக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மதுரை மீனாட்சி கோயில் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணை மே மாதம் முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எல்.ராஜா என்பவர் ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.
(நவம்.4, 2015) அதில், “அர்ச்சகராவதற்கு மதம் குறித்த சடங்குகள் – ஒழுக்கமுமே முக்கியம். ஜாதி முக்கியமல்ல. ஆகம அடிப்படையிலான கோயில்களிலும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆவதை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்க வில்லை” என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தக் கருத்தை வரவேற்கிறோம். பார்ப்பனர்கள் – பார்ப்பன அமைப்புகள் – இராம கோபாலன்கள் – சங்கராச்சாரியர்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கிறார்களா?

பெரியார் முழக்கம் 12112015 இதழ்

You may also like...