கோவை ஃபாரூக் படுகொலை குறித்த அண்ணன் கொளத்தூர் மணி

கோவை பரூக் படுகொலை குறித்த அண்ணன் கொளத்தூர் மணியின் தீர்க்கமான பேச்சுக்கு நன்றி..

இஸ்லாத்தை மறுத்து, கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்ட காரணத்திற்க்காக, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த பெரியார் திராவிடர் கழக அன்பு சகோதரர் பாரூக் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அண்ணன் கொளத்தூர் மணியின் ஒரு மணி நேர பேச்சை முழுமையாக நேற்று கேட்டேன்.

பரூக்கின் கொலையை செய்தவர் பரூக்கோடு கடந்த சில மாதங்களாக திட்டமிட்டே உடன் சுற்றித் திரிந்த ஒரு இஸ்லாமியர் என்றும், கொலையை செய்த பிறகும், மருத்துவமனையில் வந்து அழுது நாடகம் ஆடி இருக்கும் அளவுக்கு குரூரர் என்ற செய்தியும் கேட்டு அதிர்ச்சி தான்.அந்த திடீர் இஸ்லாமிய நண்பர் மீதான சந்தேகம் இருந்ததையும் பரூக் உணர்ந்தே இருந்திருக்கிறார் என்பது இன்னும் கூடுதல் அதிர்ச்சி.

பரூக்கின் உடல் பிணக்கூராய்வு நேரத்தில் நானூறு வெகுஜன மக்கள் குறிப்பாக பெரியார் திராவிட கழகர்கள் மருத்துவமனை முன்பு கூடி இருந்த சூழலில் அங்கே வந்ததில் எண்ணிக்கையில் வெறும் நாற்பது இஸ்லாமியர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் என்று அவர் பேசியது உண்மையில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது…

சிந்தித்து பாருங்கள் நண்பர்களே…

உண்மையில் இந்த படுகொலையை செய்தது ஒருவேளை இந்துத்துவ காவி பயங்கரவாதிகளாக இருந்திருக்கும் என்றால்,இந்நேரம் கோவையே ஸ்தம்பித்து இருக்காதா?இஸ்லாமிய அமைப்புகள் மிகப்பெரிய போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து இருக்க மாட்டார்களா?

அப்படியானால் சொந்த சகோதரனை மதத்தின் பெயரால் நாமே கொன்றால் கேள்வி இல்லை. அடுத்தவன் செய்தால் மட்டும் நியாயம் கேட்பீர்களா? இதென்ன இரெட்டை வேட நியாயம்?

இதில் பெரிய கொடுமை என்னவென்றால் பாரூக் மரணத்துக்கு ஆறுதல் சொல்ல வந்த பதினைந்து பெண்கள், பரூக் தாயாரிடம், உன் மகன் அல்லாவுக்கு எதிராகவும், நபிகளுக்கு எதிராகவும் அடுத்த மாதம் ஒரு புத்தகம் வெளியிட இருப்பதாக அறிகிறோம் என்று சொன்ன போது,

பிள்ளையை பறிகொடுத்த அந்த தாயார் மிகக் கோபத்துடன் அதற்காக நீங்கள் கொன்று விடுவீர்களா என்று கேட்ட நிகழ்வு என்பது, மதவாதம் மக்கள் மனதில் எந்த அளவுக்கு மோசமான மன நிலையில் இருக்கிறது என்பதை தெளிவாக சொல்கிறது..

ஒரு சக மனிதனைக் கொல்ல காரணமான மத அடிப்படை வாதத்துக்கும் அடிப்படைவாதிகளுக்கும் எதிராக கோபம் இல்லாமல், தங்கள் மதத்துக்கு ஆதரவாக நின்று எந்த இறைவனின் அன்பை போதிக்கப் போகிறார்கள்? எதைக் காப்பாற்ற போகிறார்கள்?

பெரியார் தலித்துகளை இஸ்லாத்துக்கு மாறச் சொன்னார், அம்பேத்கர் புத்த மதத்தை ஏற்கப் போகும் போது, அதிகமான எண்ணிக்கையிலான மக்களோடு புத்த மதத்தில் சேரச் சொன்னார் என்பதெல்லாம் அவர் கடவுளை ஏற்றுக் கொண்டார் என்ற நோக்கத்தில் அல்ல.

பெரியாரின் ஒற்றை நோக்கம் சாதிய தீண்டாமை ஒழிய என்னென்ன வழிமுறைகள் இருந்தாலும் ஏற்கும் மன நிலை. அவ்வளவு தான்.

அந்த வகையிலேயே அவர் இஸ்லாத்தை தலித்துகளுக்கு பரிந்துரை செய்திருக்கிறாரே அல்லாமல், இஸ்லாத்தின் மீதான காதிலில் அல்ல. இஸ்லாமிய மேடைகளில் பொதுக் கூட்டங்களில், மசூதிகளில் இஸ்லாத்துக்கு எதிராகவே பெரியார் பேசிய தைரியமான பேச்சுகள், எழுத்துகள், கட்டுரைகள் எல்லாம் உண்மையில் பிரமிக்க வைக்கின்றன.

பெரியாரின் கடவுள் மறுப்பு பேச்சுகளை மதங்களுக்கு எதிரான பேச்சுகளை எழுத்துகளை எல்லாம் இஸ்லாத்துக்கு மட்டும் அல்ல. கிறிஸ்தவத்துக்கும் சேர்த்தே பொருத்திப் பார்க்கிறேன்.

இறைவனை ஏற்றுக் கொண்ட இறை நம்பிக்கையை ஏற்றுக் கொண்ட எல்லோருக்கும் பொதுவான பேச்சாகவே பெரியாரின் பேச்சுகளை பார்க்கிறேன். கிறிஸ்தவத்துக்கு எதிரான பெரியார் பேச்சுகளும், எதிர்ப்புகளும் எழுத்துகளும் நான் அறியாதவன் அல்ல.

பெரியார் மனிதத்தையும், சமத்துவத்தையும் முன்னிறுத்தி தான் மதங்களை அதன் சாதிய வன்முறைகளை கொடுமைகளை எதிர்த்து இருக்கிறார் என்ற புரிதல் இருப்பதால் பெரியார் இறை நம்பிக்கைக்கு எதிராக என்னென்ன பேசி இருக்கிறார் என்பது குறித்து அவர் மீது வருத்தப் பட எனக்கு எதுவும் இல்லை.

மனிதத்தை மிஞ்சிய மதங்கள் இல்லை. அன்பைத் தாண்டிய போதனை இல்லை. அதைப் பெரியார் மிகச் சரியாகவே செய்திருக்கிறார்.

தலித்துகளுக்கு எதிராக வன்னியர்கள் செய்த கொடுமைகளுக்கு எதிராக ,போராடிய அடிதடி வரை சென்ற பெரியாரிய இயக்கங்கள் தான் அதே வன்னியர்களுக்கு கொங்கு மண்டலத்தில் சாதிய ரீதியான சிக்கல் வந்த போது, ஆதரவாக நின்றது என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டி இருக்கிறது.

பெரியாரியவாதிகள் எந்த சாதிக்கும் ஆதரவு அல்ல.எந்த சாதிக்கும் எதிரியும் அல்ல.,ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த சாதியாய் இருந்தாலும், மதமாக இருந்தாலும் அந்த மக்கள் பக்கம் நிற்பதே பெரியாரியத்தின் அடிப்படை நோக்கம்.

கோவை ஆர்.எஸ்.எஸ் சசிகுமார் படுகொலையில் பரூக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அண்ணன் மணி அவர்கள் சொன்னது கூடுதல் சுவராஸ்யம்.

அதாவது ஆர்,எஸ்.எஸ் சசிகுமார் கொல்லப் படுகிறார். அவரது கொலையில் சந்தேகப்படும் படியான ஆட்களை காவல் துறை கைது செய்து இருக்கிறது. அப்போது கைது செய்யப்பட்டவர்களை(இஸ்லாமியர்கள் அல்ல) பொது வெளியில் வைத்து கடுமையாக தாக்கி இருக்கிறது காவல்துறை.

அந்த வழியாக வந்த பரூக் காவல்துறையிடம் சண்டை போட்டு ஏன் அவர்களைத் தாக்குகிறீர்கள் என்று சண்டை போட, நீ யாரடா உன் பேரென்ன, இஸ்லாமிய பெயராக இருக்கவும் உள்ள தூக்கி வெச்சு குண்டர் சட்டம்.

ஆக பரூக் கடவுள் மறுப்பாளானாக இருந்தாலும் மனிதத்தை மதித்தே நடந்திருக்கிறான்.

இல்லாவிட்டால் காவல்துறை எவனை அடித்தால் எனக்கென்ன சென்று நகர்ந்து போய் இருக்க முடியும்.ஆனால் சக மனிதனுக்கு துன்பம் என்றால் கண்ணுக்கு முன்னால் ஒரு அநியாயம் என்றால் எது குறித்தும் கவலை இல்லாமல் தட்டிக் கேட்டு இருக்கிறான். இவனா இந்த சமூகத்துக்கு வேண்டாதவன்?

கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள், சக மனிதனை கருத்து முரண்களுக்காக, அதிலும் குறிப்பாக கடவுள் மறுப்புக்காக கொல்லும் நிலை என்பது எவ்வளவு பெரிய கொடூரம்? இதைத் தான் அன்பை போதிக்கும் மார்க்கங்கள் சொல்லிக் கொடுக்கின்றனவா?

ஒப்பீட்டு அளவில் மனித நேயத்தில்,சாதியத்துக்கும் மதவாததுக்கும் எதிரான போராட்டத்தில் அனைத்து மதவாதிகளை விட,ஆயிரம் மடங்கு போற்றுதற்குரியவர்கள் பெரியாரியவாதிகள் என்பதை உறுதியாகவும் ஆணித் தரமாகவும் சொல்வேன்.

இது போன்ற கொடூரக் கொலைகளால் உங்கள் அல்லாவுக்கு பெருமையா? அல்லது இது போன்ற கொலைகளை செய்வதால் மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கடவுளுக்கு பெருமை சேர்க்கிறார்களா? அன்பை விதைக்காத, போதிக்காத, கடை பிடிக்காத மார்க்கங்களால் மக்களால் என்ன பயன்?

கோவை இஸ்லாமிய மக்கள் தான் பரூக் கொலையை பாராமுகம் கொண்டு இருந்தார்கள் என்றால், இஸ்லாமிய தலைவர்கள், கட்சிக் காரர்கள் நிலை? அவர்களில் பெரும்பான்மை கள்ள மௌனம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம்?

காவிகளுக்கு எதிராக என்றால் பொங்குவதும்,சக இஸ்லாமியனை இன்னொரு இஸ்லாமியன் மார்க்க அடிப்படைவாதத்துக்காக கொல்வதில் கள்ள மௌனம் காப்பதும் அப்பட்டமான அயோக்கியதனம்.

இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

அண்ணன் கொளத்தூர் மணியின் வெளிப்படையான பேச்சுக்கு ஆயிரம் நன்றிகள்.

பெரியாரியவாதிகளின் கருத்துகளில் நாம் முரண்படலாம். ஆனால் இது சகோதர முரண்கள். இந்த கருத்து முரண்களுக்காக நாம் விலகி நின்றால் நஷ்டம் ஒருபோதும் பெரியாரியவாதிகளுக்கு அல்ல.

காவிகள் தங்கள் சகல அஸ்திரங்களையும் கையில் எடுத்து,பிரிவினை வாதத்தை கூர் தீட்டிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான மோசமான வேளையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்பதே நமக்கான கூடுதல் பலம். புரிந்து நடந்தால் சரி.

முடிந்தால் மணி அண்ணனின் காணொளியை எல்லோரும் கட்டாயம் பாருங்கள் யூ ட்யூபில்..

-ஆன்டனி வளன்

You may also like...