அமேசானின் தானியங்கி சூப்பர் ஸ்டோர் பொருளாதார சுரண்டலை உறுதி செய்யும் முதலாளித்துவ கட்டமைப்பு

அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் 100% தானியங்கி சூப்பர் ஸ்டோரை அமைத்திருக்கிறது. ஒரே ஒரு வேலையாள் கூட இல்லாத இது அறிவியல் வளர்ச்சியின் உச்ச கட்டம். நவீன விஞ்ஞானம் இயந்திரங்கள் மனிதனை உடல் உழைப்பிலிருந்து விடுவித்திருக்கின்றன. மனித உழைப்பை எளிதாக்கி, மனிதன் அதிக நேரத்தை தன் குடும்பத்தோடும், பொழுது போக்குக்காகவும் செலவிடலாம் என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது.

எந்த அறிவியல் கண்டுப்பிடிப்பும் தனி மனிதனால் கண்டுபிடிக்கப்படுவதாக தோன்றினாலும், உண்மை அப்படி இல்லை. உலக வரலாற்றில் மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் விளைவே அறிவியல் வளர்ச்சியும், மனித வாழ்வின் அனைத்து மேம்பாடுகளும். அமேசானின் அமெரிக்காவில் அமைத்திருக்கும் தானியங்கி சூப்பர் ஸ்டோர் மனித சமூகத்தின் வளர்ச்சியின் பெருமைக்குரிய மைல்கல்.

இதன் பலன்கள் மனித குலத்தின் பலனாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். அதனால் மிச்சப்படுத்தப்பபட்ட மனித உழைப்பின் பலன். தொழிலாளர்கள் வேலை நேரக் குறைப்பாக, பொருளாதாரப் பயன்கள் சமூக மேம்பாட்டின் உயர்வாக மாற வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாறாக அந்த அறிவியல் வளர்ச்சி சில முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்கான அபாயமாகவும், பல தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கான காரணமாகவும் மாறி இருக்கிறது. இதற்குக் காரணம் உற்பத்தி சக்திகள் முதலாளிகளின் கையில் இருப்பது தான். இதற்கான ஒரே தீர்வு உற்பத்தி சக்திகள் பொது உடைமை ஆக்கப்படுவது தான். 21ம் நூற்றாண்டில் முதலாளிகள் முதலாளித்துவம் கடல் கடந்த உலகளாவிய சக்தியாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.

19ம் நூற்றாண்டில் காரல் மார்க்ஸ் கணித்த திக்கிலேயே முதலாளித்துவம் பயனித்துக் கொண்டிருக்கிறது. இந்திய முதலாளித்துவம் ‘பார்ப்பன – பனியா’’ கூட்டணி வடிவமாக இருக்கிறது. உலகெங்கும் உலகெங்கும் முதலாளித்துவம் தன் பொருளாதார இலக்குகளுக்கான கருத்தாக்கங்களையும், அரசியலையும், கலாச்சாரத்தையும் உருவாக்கி வருகிறது. இந்தியாவின் பார்ப்பனிய – பனியா முதலாளித்துவம் மூன்று இலட்சியங்களைக் கொண்டிருக்கிறது.

முதன்மையாக பொருளாதார சுரண்டலை உறுதி செய்யும் முதலாளித்துவ கட்டமைப்பை வலிமைப் படுத்துவது.

இரண்டாவதாக இந்திய சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விளங்கி வரும் பார்ப்பனிய இந்து மதத்தை காப்பது.

மூன்றாவதாக சாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற, சாதிய அமைப்பை தகர்க்க நடத்தப்படும் தாக்குதல்களான இட ஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வளர்ச்சி ஆகியவற்றை எதிர்த்து அழிப்பது.

.
பெரும்பான்மை பலத்தோடு நடுவன் அரசு அதிகாரத்தை கைப்பட்டிருக்கும் மதவாத பாரதிய ஜனதா கட்சியும் அதன் பின்னால் இருக்கும் சங்க பரிவாரங்களும், முதலாளித்துவ சக்திகளும் ஒன்று சேர்ந்து தங்கள் அரசியல், சமூக திட்டங்களை நிறைவேற்ற முழு மூச்சுடன் பாடுபடுகின்றன. முன் எப்போதையும் விட ஆணவத்தோடு, அரசியல் வெற்றிகளின் மமதையோடு செயல்படுகின்றன. ‘’நல்ல நிர்வாகம், நல்ல ஆட்சி’’ என்ற முகமூடிகளை அணிந்துக்கொண்டு, பாசிச இலட்சியங்களை நிறைவேற்ற செயலாற்றுகின்றனர்.

அதிக மதிப்புள்ள காகிதப் பண மதிப்பிழக்கச் செய்தல், டிஜிட்டல் இந்தியா போன்ற நடவடிக்கைகளின் மூலம் அமைப்புச் சாரா தொழில்களுக்கு மரண அடி கொடுக்கப்பட்டிருக்கிறது. வங்கிகள் மூலம் மூலதனம் திரட்டப்பட்டு, அது குஜராத் முதலாளிகளுக்கு அள்ளி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடிகளை முதலாளிகள் சுரண்டுவதற்கு வங்கி அமைப்பு செயலாற்றுகிறது. நாட்டின் பிரதமர் உலகம் முழுவதும் பயணம் செய்து இந்திய முதலாளிகளின் தொழில் பெருக்கத்துக்கும், பரவலுக்கும் செயலாற்றும் முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்பதை பச்சையாக பறை சாற்றுகிறார்.

பாசிச சக்திகள் திரிபுராவில் லெனின் சிலையை இடித்திருக்கிறன்றன. பீமா கோரேகானில் தாழ்த்தப்பட்ட மக்களின் பெருமைக்குரிய வரலாற்று சின்னமாக இருந்த நினைவுத் தூண் முன் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் மத வெறியர்கள் கொடூரத் தாக்குதல்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதன் மூலம் இந்திய சாதியக் கட்டமைப்பிற்கு எதிராகப் போராடிய அம்பேத்காரின் வரலாற்றையும், தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றையும் களங்கப்படுத்த முனைகிறார்கள். பசுவைக் காக்கிறோம் என்ற பெயரில் முஸ்லீம்கள் தாக்கப்படுகிறார்கள். பட்டப்பகலில், நட்டநடு ரோட்டில், ஈவு இரக்கமற்ற கொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்து மதத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கும் மூடநம்பிக்கையையும், பார்ப்பனிய ஆதிக்கத்தையும் எதிர்த்து இயக்கம் கண்டு, வெற்றி பெற்ற தந்தை பெரியாரை இழிவு செய்யத் துணிந்ததின் வெளிப்பாடே பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவர் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்று பிரகடனப் படுத்தியதும், மதவாதிகள் பெரியார் சிலைகளை இடிக்க முற்பட்டதும். இந்திய பார்ப்பனிய-பனியா முதலாளித்துவ, மதவாத சக்திகளின் கூட்டு தன் லட்சியப் பயணத்தில் கிடைத்த தற்காலிக வெற்றியின் மிதப்பில் தான் அணிந்து வந்த ‘’நல்லாட்சி, நல்ல நிர்வாகம்’’ என்ற முகமூடி கிழிந்து தொங்குவதைப் பற்றி கவலைப்படாமல், பொது உடைமை, பகுத்தறிவு போன்ற கொள்கைகளின் மேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

பொது உடைமை, சமூக நீதி, பகுத்தறிவு இவற்றின் அடையாளங்களாக விளங்கி வரும் லெனின், அம்பேத்கார், பெரியார் நினைவுச் சின்னங்களில் நடத்தப்படும் தாக்குதல் இத்தகையதே. பாசிசம் தன் எதிரிகளாக மார்க்சிஸ்ட்களையும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இயக்கத் தலைவர்களையும், முற்போக்கு சிந்தனையாளர்களையும் அடையாளம் கண்டு தாக்குதல் நடத்துகிறது.

இரண்டே கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி மனித குல வரலாற்றின் திருப்புமுனை நிகழ்வு. மானுடர்கள் அனைவரும் சமம் என்று சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியவற்றை அனைத்து மனிதர்களின் அடிப்படை உரிமையாக நிறைவேற்றியது பிரெஞ்சுப் புரட்சி. மத, இன, மொழி, நிற, அடையாளங்களை தாண்டிய பொது அடையாளமாக ஒரு நாட்டின் குடிமகன் என்ற புதிய அடையாளத்தை உருவாக்கியது பிரெஞ்சுப் புரட்சி. எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த நிறத்தினராக, எந்த இனத்தினராக இருந்தாலும் குடிமக்கள் அனைவரும் ஒரே உரிமை பெற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே நாடு என்ற கோட்பாடு முன்னிறுத்தப்பட்டது.

இந்திய பாசிச சக்திகள் இந்திய நாட்டை 250 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்ல விளைகின்றன. இந்திய நாடு என்ற கோட்பாட்டை மதம், மொழி என்ற அடையாளங்களுக்குள் அடக்க முயற்சிக்கின்றன.

பிரெஞ்சுப் புரட்சியின் போது புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து தரைமட்டமாக்கினார்கள். ஆயிரக்கணக்கான மத குருமார்களின் தலைகளை வெட்டிக் கொன்றார்கள். கோயில் நிலங்களை அரசுடைமையாக்கி, பொது உடமையாக்கினார்கள். இந்திய பாசிச சக்திகள் 21ம் நூற்றாண்டிலும் மத நிறுவனங்களை, மத அமைப்பை உயர்த்திப் பிடிக்க நினைக்கின்றன. காடுகளை அழித்து கட்டப்பட்டும், மத நிறுவனத்தினற்கு இந்தியாவின் பிரதமரே வந்து மத குருமார்களோடு சரிசமமாக அமர்ந்து வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிற அவலமும் இங்கே நடக்கிறது.

உலகமயமாக்கப்பட்ட, தனியார் மயமாக்கப்பட்ட, தாராள மயமாக்கப்பட்ட முதலாளித்துவ இந்தியாவில், சோவித் யூனியன் வீழ்ச்சிக்கு பிந்தைய புதிய உலகச் சூழலில் மார்க்சிஸம் தன்னை மறு ஆய்வு செய்து தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட்டுகளும், ஒடுக்கப்பட்ட மக்களும், சிந்தனையாளர்களும் ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன் மூலமே இந்திய பாட்டாளி வர்க்கம் பாசிச தாக்குதலை முறியடித்து வெற்றி பெறும்.

மருத்துவர். இரா. செந்தில்

Amazon Inc has opened a totally automatic outlet in US. The outlet doesn’t have a single human employee. It is fully digitalized and can read a customer’s details on his entry into the store. The customer can pick objects and leave the store. Money will be automatically deducted from his account. This is one of the most advanced modern innovations.

Scientific inventions are not made by individuals, though it may apparently appear so. Edison could not have invented incandescent light if he were living in a forest in paleolithic period. The development of society creates the environment for inventions and hence all scientific inventions are the property of humanity, though the individual deserves accolades.

The automatic superstore of invention is the result of the advancement of modern society. Such innovations should benefit humanity by saving human labour and gives spare time for humanity to spend with family and recreation.

Since the Amazon Inc is given ownership of the innovation, the economic gains of saving human labour benefits only the owners of the firm. The human labour saved by mechanization, instead of giving leisure time for the society, is creating joblessness among laborers.

The only remedy to this evil is that private property should be abolished, and all means of production should become the property of the society.

This is what Marx told us nearly one and half century ago. Marxism has become more relevant than ever in the contemporary world where Capitalism has metamorphized in the lines predicted by Marx.

The Capitalism in India is in the ‘Brahmin – Baniya’ form. World over Capitalism creates cultures, linguistic policies and political governments to benefit its economic gains and expansion of trade. In India the ‘Brahmin – Baniya’ Capitalism has three objectives:

1. To create a favorable environment for exploitation of labour and natural resources.
2. To protect and strengthen the Hindu religious system and thus protect the caste system where Brahmins were given the supreme position.
3. To oppose and neutralize measures to eradicate caste inequalities. Discretely undermining caste-based reservation, crushing the rise of the political movements of oppressed people.

The BJP government that has captured the power in the Center and the RSS behind it and the Indian capitalists are doing everything to achieve their political and social goals. The ‘Good Governance’ mask is worn to hide their real objectives.

Demonetization and digital India were two deadly blows to unorganized sector. It was designed to destroy SMEs and shift business to multinationals and major business houses. They helped Indian capitalists to assimilate capital through Indian Banking system. A handful of Capitalists virtually loot public money through Banks. Prime Minister of the nation is touring the world to create newer pastures for Indian capitalists to expand their business. The attack on the Lenin statue is the symbol of acceptance of BJP, that they are Capitalist representatives and India is a country of Crony capitalism.

The attack on the Raintambh at Bhima Koregaon when tens of thousands of Dalits had assembled to relieve their emotions and their prestigious history, is to challenge the rise of Dalit identity and the politics against discrimination. By desecrating a monument identified and founded by Ambedkar, who vehemently fought Hindu caste hierarchy, Indian religious extremists have openly accepted that they will never come out of Manu Smriti’s lines.

Cow Rakshas attacked and killed Muslims and innocent people in broad daylight in the name of religion. The attack on Periyar, who fought superstition and Brahmanical hegemony in Tamil Nadu by his rationalist movement is an extension of their designs elsewhere in the country. A senior BJP leader declared that fall of Lenin’s statue would be followed by fall of Periyar’s statues and there were also attacks on Periyar’s statues.

Encouraged by a series of election victories, the ‘Brahmin – Baniya’ Capitalist, religious association in India is declaring war on Socialism, Social Justice and rationalism. By attacking the symbols of Communism, Rationalism and Social Justice Hindutva is symbolizing its enmity towards Communism, rationalism and Social justice.

French revolution declared ‘Liberty, Equality and Fraternity’ to all citizens. French revolution created the new identity of ‘Citizenship’ over and above religious, linguistic, colour and regional identities. The concept of a nation was on the concept of Citizenship. India’s fascist forces who always ensured that India did not evolve and progress in line with modern scientific philosophical concepts are trying to contain the concept of Nation within the identities of religion and language. Gurumoorthi’s article in Dinamani openly calls for understanding and accepting the notion of India as a country based on Hindu religious identity. Prime Minister of the country is participating in religious events at venues created by destroying forests.

French revolutionaries destroyed thousands of Churches, guillotined priests and confiscated Church lands and properties. One day Indian revolution will do the same.

Hindu fascists’ venture to destroy the statues of revolutionaries is the sign of their meek attempts to stop the progress of the society and reverse history. Hindu fascists have identified Communists, Oppressed and Rationalists as their primary enemies.

Communists in India appear confused and lack direction. Social justice movements are stranded in the quick sand of corruption.

It is the need of the hour that Communists reexamine themselves. In the globalized, privatized, liberalized India in the post USSR era, Marxism should self-analyze and draw the roadmap for the journey of the 21st Century Proletariat. Social justice movements should come out of their petty politics and look high.

Communists, progressive movements and movements for social justice should come together to face the rise of fundamentalism.

Marxism is an eternal philosophy of humanity
Lenin is eternal

Dr. R. Senthil

You may also like...