பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! மதவெறியைத் தூண்டும் வகையில் பேசிவரும் எச். இராசாவைக் தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – பேராவூரணி பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம். பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எச். ராசாவைக் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேல் “திரிபுரா மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த, புரட்சியாளர் லெனின் சிலையை, தற்போது அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் உடைத்தெரிந்திருக்கும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உலகில் தலைசிறந்த தலைவர்களின் சிலைகளை எல்லா நாடுகளும் அமைத்துப் போற்றி வருகிறது. இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகளின் சிலை உலகெங்கும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவுத் தந்தைப் பெரியாரின் சிலை உலகெங்கிலும் அமைக்கப்பட்டு போற்றப்படுகிறது. சமூகத்தில் சிறந்த சிந்தனைகளை போற்றுவதும் அச்சிந்தனை...