அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் சத்தியமங்கலம் பயணக் குழு
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை!நம்பாதீர்கள் சாமியார்களை எனும் தலைப்பில், அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தை தமிழகத்தில் 4 பகுதிகளில் இருந்து தொடங்கி மாநிலம் முழுவதும் பலவேறு பகுதிகளில் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தில் இருந்து ஆகத்து 7 ம் தேதி கழக பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் தலைமையில் பரப்புரை பயணம் துவங்கியது. பயணத்தின் முதல் நிகழ்வாக சத்தியமங்கலம் கழக தோழரும், மேட்டூர் தோழர் சம்பத் அவர்களின் தம்பியுமான தோழர் கோகுல்ராசு அவர்களின் படத்தினை தோழர் பால்பிரபாகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து மேட்டூர் டி கே ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்களுக்கு இடையே தோழர் கோவிந்தராசு மற்றும் தோழர் கிருட்டிணன் அவர்களும் நகைச்சுவையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தருக்கவகையில் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் கோபி வேலுச்சாமி ஆகையோர் உரையாற்றினார்கள். தோழர் மூர்த்தி நன்றியுரை ஆற்ற அங்கு.நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆதிதமிழர் முன்னணி அமைப்பை சார்ந்த தோழர்கள் நமது தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பயணக்குழு நம்பியூர் ஒன்றிய...
