பெரியார் 138ஆவது பிறந்த நாளை செப்.17 அன்று தமிழகம் முழுதும் கழகத்தினர் எழுச்சியுடன் கொண்டாடினர். சேலத்தில் : சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 அன்று தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழகக் கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழகத் தலைவர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூர் சுந்தரம், செ.செ.காட்டுவளவு சின்ராசு, கண்ணாமூச்சி மாரியப்பன், மூலக்கடை இராசேந்திரன், காந்தி நகர் சரசுவதி ஆகியோர் கழகக் கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடை இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார். கொளத்தூரில் :...