அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாது – சென்னை திவிக மனு

அரசு அலுவலகங்களில் மத சார்புடைய ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாதென அரசு கொண்டுவந்த அரசாணையை கட்டாயம் அமலில் கொண்டுவர வலியுறுத்தியும், பூஜை நடைபெறும் அலுவலகங்களை கண்காணித்து தடுத்தும், மீறும் அலுவலகங்கள் மீதான நடவடிக்கையை எடுக்க கோரியும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் 05 : 10 : 2016 புதன்கிழமை இன்று காலை 11 : 00 மணியளவில் காவல் ஆணையர் அலுவலகம் வேப்பேரியில் மனு கொடுக்கப்பட்டது . மேலும் அவர் செய்தியாளர்களிடம் அரசாணையை மீறி பூஜை நடைபெறும் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று பதிவு செய்தார். நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. உமாபதியுடன் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொண்டனர் .

திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டம்

14484686_693882560750463_7207292078622285405_n 14492455_693882694083783_3123618678698404052_n 14492596_693882590750460_2584983072949534540_n 14519856_693882610750458_3414405590938800075_n 14570483_693882674083785_7929175665766991184_n

You may also like...