சோதிட மூட நம்பிக்கையால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால்
உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் ராஜகோபால், ஜூலை 18ஆம் தேதி இறந்தார். ஏழு வயதிலிருந்து உழைத்து உயர்ந்தவர் ராஜகோபால். ஆரம்ப காலத்தில் மெஸ் நடத்தியவர். ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டுச் சென்ற பிறகு, அவர்கள் பயன்படுத்திய இலைகளைப் பிரித்துப் பார்ப்பாராம். எந்த உணவு அய்ட்டத்தைச் சாப்பிடாமல் தவிர்த்திருக்கிறார்கள், எதை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிப்பாராம். அதை வைத்து அடுத்த வேளைக்கான சாப்பாடு மெனுவை மாற்றியமைப்பார். இந்த நுணுக்கத்தைப் பயன்படுத்தித்தான் ஓட்டல் தொழிலில் உச்சத்தை அடைந்தார் ராஜகோபால். ஓட்டல் தொழிலில் பார்ப்பனர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தில் பிறந்த அவர் தொடங்கிய ‘சரவண பவன்’ ஓட்டல்கள் சென்னையில் பார்ப்பனர்கள் ஓட்டலுக்கு மிகப் பெரும் சவாலாக மாறியது. ‘சரவண பவன்’ அதன் கிளைகளை உலகம் முழுதும் கொண்டு சென்றது. பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்க மாநாடு களில் ‘நாடார்...