மருத்துவக் கல்வி: மறுக்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீடு
மருத்துவப் பட்டப் படிப்பு, மேல் பட்டப் படிப்புகளுக்கான இடங்களில் ‘அகிலஇந்திய கோட்டா’ என்ற பிரிவில் நடுவண் ஆட்சி இடங்களைப் பறித்துக் கொள்கிறது. மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 சதவீதமும் மேல்பட்டப் படிப்புக்கான இடங்களில் 50 சதவீதமும் இவ்வாறு பறிக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள், கடந்த பத்து ஆண்டுகளாக மறுக்கப்படுகின்றன. பட்டியல் இனப்பிரிவினருக்கான இடஒதுக்கீடுகள் வழங்கும்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமைகளை மறுக்கக் கூடாது என்று சமூக நீதி மருத்துவர் சங்கத்துக்கான பொதுச் செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார்.
மத்திய கல்வி நிறுவனங்களுக்கான சட்டத்தில் இடம் பெற்றுள்ள சில பிரிவுகளைக் காட்டி இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அந்த சட்டப் பிரிவுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க தடை செய்யவில்லை என்று வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 11072019 இதழ்