வர்ணாசிரம கல்விக் கொள்கை
இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய பின் அதிகாரம் பெற்றவர்களாக மாறினார்கள். வேதங்கள் உருவாக்கப்பட்டன. இந்துத்துவா கொள்கையை வேலையின் அடிப்படையில் நான்கு வர்ணங்களை உருவாக்கினார்கள். முதல் மூன்று வர்ணங்களும் சேர்ந்து மனித சமூகத்திற்கு உழைப்பாளிகளாக இருந்த மக்களை அடிமைப்படுத்தினார்கள். அவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அக்காலக்கட்டத்தின் குருகுல கல்வி முறை உருவானது. வேதங்கள் கற்றுக் கொள்வதும் கொடுப்பதும் பிராமணர்கள், ஆட்சி புரிபவர் சத்திரியர், வியாபாரம் செய்பவர்கள் வைசியர்கள். இவர்களே கல்வி கற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. சூத்திரர், பஞ்சமர் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்கள் வேதங்களை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள் என்று மனுதர்ம கோட்பாடு கூறுகிறது. அக்கால கட்டத்தில் மறைந்திருந்து வில்வித்தை கற்ற வேடர் சமூகத்தை சேர்ந்த ஏகலைவன் கட்டை விரல் வெட்டப்பட்டது வர்ணாசிரம கோட்பாட்டின் அடிப்படையில் தான்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொதுக் கல்வி முறை 1968இல் கோத்தாரி கமிஷனால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் இலவசக் கல்வி பெறுவதற்கு, கல்வி உரிமைச்சட்டம், அமல்படுத்தப்படாததால் பெரும்பகுதியான மக்கள் கல்வி அற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அவர்கள் கல்வி அறிவு பெற முடியாததற்கு மிக முக்கிய காரணம் வறுமை தான். மத்திய அரசு வசதிபடைத்தவர்களுக்கு அனைத்து வசதியும் கொண்ட நவோதயா பள்ளிகளை உருவாக்கின. ஏழை மாணவர்களுக்கு வகுப்பறை, கழிப்பிடம், குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம் ஆசிரியர்கள் பற்றாக் குறையுள்ள அரசுப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
புதிய கல்விக் கொள்கை : 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் கல்வி, மருத்துவம் ஆகியவை தனியார்க்கு தாரை வார்க்கப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையும் ஏழைகளுக்கு ஒரு கல்வியும், வசதி படைத்தவர்களுக்கு சிபிஎஸ்இ மெட்ரிக் பள்ளிகளையும் உருவாக்கின. 120 கோடிக்கு மேல் உள்ள இந்திய மக்களில் 40சதவீதம் மக்கள் கல்வியற்றவர்களாக இருக்கிறார்கள். கல்வி உரிமைச்சட்டம் 2009இல் கொண்டு வரப்பட்டு 01.04.2010 முதல் அமலுக்கு வந்தது. ஆனால் தனியார் பள்ளிகளின் கொள்கை மாற்றப்படவில்லை. அதனால் மூன்று கல்விக் கொள்கைகளாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட மக்களின் கல்வி நிலை இன்னும் உயர வில்லை.இந்நிலையில் மத்திய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை வரைவை வெளியிட்டிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை : அனைவருக்கும் உயர் தரக்கல்வி வழங்குவதன் மூலம் நமது தேசத்தை ஒருங்கிணைந்த மற்றும் துடிப்பான அறிவுமிக்க சமுதாயமாக மாற்று வதற்கு நேரடியாக பங்களிக்கும் விதமாக இந்தியை மையமாகக் கொண்ட கல்வி முறையாக தேசியக்கல்வி கொள்கை 2019 (வரைவு) கருதப்படுகிறது.
பள்ளிக்கல்வி அமைப்பு முறை : பள்ளிக்கான பாடத்திட்ட வரையறை (கலைத்திட்டம்) 1968 இல் (10+2) பள்ளிக்கல்வி 12 ஆண்டுகளாக மாற்றப்பட்டு
1 – 5 வகுப்பு தொடக்கப்பள்ளி, 6 – 8 வகுப்பு நடுநிலைப் பள்ளி, 9-10 உயர்நிலைப்பள்ளி, 11-12 வகுப்பு மேல் நிலைப்பள்ளிகள் என உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மாநில அரசின் கல்விக் கொள்கைகள் எல்கேஜி, யுகேஜி 1 – 5 வகுப்பு வரை புற்றீசல் போல் நர்சரி பள்ளிகளை உருவாக்கியதால் – அரசு பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தன. தேசியக் கல்விக் கொள்கை பாடத்திட்ட வரையறை (கலைத்திட்டம்) (5+3+3+4) 5 வருடம் அடிப்படை நிலை- பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி மற்றும் 1, 2 வகுப்பு களும், 3 வருடம் ஆயத்த நிலை – 3, 4, 5 வகுப்புகளும், 3 வருடம் நடுநிலை – 6, 7, 8 வகுப்பு களும், 4 வருடம் உயர் நிலை அல்லது இடைநிலை 9, 10, 11, 12 வகுப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு பால் வாடிப்பள்ளிகள் தொடக்கப் பள்ளியோடு இணைக் கப்படுவதால் பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி மற்றும்
5 ஆம் வகுப்பு முறை பாடச்சுமை அதிகரிக்கப்படு கிறது. அவர்களின் உடல்நலம், மனநலம் பாதிக்கக் கூடிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். கோத்தாரி கமிஷன் கல்வி முறையில் அருகமை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்க வாய்ப்பு உருவாகும். தற்போதைய கல்விக் கொள்கையால் தொடக்க, நடுநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தை களுக்கு கல்வி கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
தொழிற்கல்வி முறை கல்வியும் திறன்களும் : வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி: பல்வேறு தொழில்கள் 3, 4, 5 வகுப்புகளில் குழந்தைகளுக்கு தோட்டக்கலை, மண்பாண்டம் செய்தல், மரவேலை குறித்து அருகில் உள்ள பயிற்றுநர்கள் மாணவர் களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை வருடம் முழுவதும் மரவேலை, மின்துறை சார்ந்த வேலை, தோட்டக்கலை, மண்பாண்ட வேலைகள், விவசாயம் கற்றுக் கொடுப்பது. கல்வி உரிமைச்சட்டம், 18 வயது குழந்தை கள் கல்வி கற்பது.இந்தக் கொள்கை அதை ஒழித்து தொழிற்கல்வி என்ற பெயரில் வர்ணாசிரம கல்வி முறையை மீண்டும் உருவாக்குகிறது.
தேர்வுமுறைகள் : 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நடைபெறும் பொதுத் தேர்வுடன் நிறுத்தாமல் 3, 5, 8 வகுப்புகளுக்கு மாநில அரசுகளால் மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும். கல்வி உரிமைச்சட்டம் வழங்கி யுள்ளபடி கல்வி வழங்குவதை உறுதிப்படுத்தாமல் தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு 8 ஆம் வகுப்பிற்கு மேல் பள்ளிப் படிப்பை தொடரவிடாமல் செய்வதே இந்த தேசிய கல்விக் கொள்கையின் உள் நோக்கமாகும்.
ஆசிரியர்களின் பணி நிலை : இந்தியாவில் 10 இலட்சம் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன என வரைவு அறிக்கை கூறுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல் டெட் (கூநவ) தேர்வு மூலம் பணி நியமனம் கட்டாயமாக்கப்படும். ஆசிரியர்களுக்கு ஊதியம், பதவி உயர்வு, தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படாமல் வயது மூப்பு அடிப்படையிலே வழங்கப்படுவது தடுத்து, தகுதி திறன் என்று தேர்வு மூலம் ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படுவது சமூக நீதிக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
இடைநிற்றல் மாணவர்கள் நிலை : 2030ஆம் ஆண்டிற்குள் 3 முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும். ரு.னுஐளுநு மூலம் மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தரத்தின் அடிப்படையில் 2016-2017ஆம் ஆண்டிற்கான தேர்ச்சி விகிதம். வரைவு அறிக்கை பகுதி 39ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது ஐந்தாம் வகுப்பிற்கு பின் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு தேசிய அளவில் 6.2 கோடி குழந்தைகள் (வயது 6-18) பள்ளியைவிட்டு விலகி யுள்ளனர்.
1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு – 95.1 ரூ
1 – 8 வகுப்பு வரை – 90.7 ரூ
9-10 வகுப்பு வரை – 79.3 ரூ
11-12 வகுப்பு வரை – 51.3 ரூ
பள்ளிக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட தொலைவு அதிகம் உள்ளதால் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. நவீன டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கு கிறோம் என்று முழக்கமிடும் மத்திய அரசு வர்ணாசிரமக்கல்விக் கொள்கையை தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் உருவாக்கி 8 ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பை தொடரவிடாமல் குலத் தொழிலுக்கு தள்ளிவிடுகிறது. தட்டுத்தடுமாறி பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பெறுவதற்கு தடையாக நீட் (சூநுநுகூ), ஜேஇஇ போன்ற தொழிற் கல்விகளுக்கு நுழைவுத் தேர்வும் பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வு நடத்துவது உயர் கல்வி பெறாமல் தடுப்பதாகும். இந்த கல்விக் கொள்கை பணம் இருந்தால் படிக்க லாம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற நிலையையே உரு வாக்கும். இந்த வரைவு அறிக்கையை நடைமுறைப் படுத்தினால் இந்திய நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கல்வி கேள்விக்குறி யாகும் ஆபத்தான நிலை உள்ளது. மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதோடு வசதி படைத்தவர்களுந்தான் கல்வி என்று ஆகிவிடும் ஆபத்து உள்ளது. இத்தகைய இந்துத்துவா கொள்கையை தடுத்திட இந்தியாவில் உள்ள கல்வியாளர்கள், அறிவு ஜீவிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து போராடு வதன் மூலம் தான் சமமான வாய்ப்புள்ள வேறு பாடற்ற கல்விக் கொள்கையை உருவாக்க முடியும்.
நன்றி : ‘தீக்கதிர்’
கட்டுரையாளர் – அ. மணவாளன்
பெரியார் முழக்கம் 18072019 இதழ்