காமராசர் திராவிட மாடலின் முன்னோடி
காமராசரின் 120 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. கல்விக் கண் திறந்த கல்வி வள்ளல் காமராசர். கடவுள் வாழ்த்துகளை கைவிட்டுவிட்டு, ‘காமராசர் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும்’ என்று சொன்னத் தலைவர் பெரியார். அவருக்கு மிகப் பொருத்தமாக இந்த நாளில் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை துவக்கியிருக்கிறது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராமப்புற வளர்ச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கி இருக்கிறது. இந்தியை எதிர்த்தார் காமராசர். மத்திய அரசு, மாநில அரசு வேலைத் தேர்வுகளில் இந்தி கட்டாயமான ஒரு பாடமாக இருக்கக் கூடாது என்று 1955இல் நேருவை சந்தித்து ஆலோசித்து விட்டு அவர் அறிவித்தார். அதற்கு காரணம், பெரியார் இந்தியை எதிர்த்து தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தது தான். 1966இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 10...
