பரப்புரை தொடங்கியது
“நம்புங்கள்… அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை”என்ற முழக்கத்தை முன் வைத்து அச்சம் பேக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம், ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. அன்று மாலை இலாயிட்ஸ் சாலையில் நடந்ததொடக்க விழா, சம்பூகன் குழுவினரின் எழுச்சி இசையோடு தொடங்கியது. கழகத் தோழர் பிரகாஷ் தலைமையில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண், கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பகலவன் (வி.சி.), செல்லப்பா (வி.சி. மாவட்ட செயலாளர்) ஆகியோர் பயணத்தை வாழ்த்தி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி 45 நிமிடம் மூடநம்பிக்கைகளை தோலுரித்து எழுச்சி உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி தமிழ்ச் செல்வி -மூடநம்பிக்கைகள் குறித்து உரையாற்றினார். அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ரூ.8000-த்துக்கானகாசோலையையும் கழக வெளியீடுகளையும் பரிசாக வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற மாணவர் ஸ்டாலினுக்கு ரூ.4000-த்துக்கான காசோலையை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும், மூன்றாம் பரிசு பெற்ற மாணவி சிபியாவுக்கு ரூ.2000-த்துக்கான காசோலையை...
