கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக்கழகம்,சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க்கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது.

காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி,பட்டி மன்றம்,கருத்தரங்கம்,கருத்துரை ஆகியன இடம்பெற்றன.

சென்னையில் மழை வரும் சூழல் நிலவிய போதும் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழக தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள்.காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள்,தோழமை அமைப்புகள்,பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது.

காலை 10 முதல் நிகழ்வாக சம்பூகன் கலைக்குழுவினரின் இசை நிகழ்சி நடைபெற்றது.கழக தோழர்கள் நாத்திகன், சங்கீதா, கவிஞர் கனல்மதி ஆகியோர் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப் பாடல்களை பாடினர்.

அடுத்த நிகழ்வாக கருத்தரங்கம் நடைபெற்றது.
”பார்ப்பனீயம் பதித்த ரத்தசுவடுகள்” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

கழக தோழர் வழக்கறிஞர் துரை.அருண் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
வடசென்னை மாவட்ட தலைவர் ஏசு.குமார்,தென்சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் இக்கருத்தரங்கிற்கு முன்னிலை வகித்தார்கள்.

”பார்ப்பனீயம் பதித்த ரத்தச்சுவடுகள்”
‘பெண்ணியத்தில்’ எனும் தலைப்பில் பேராசியர் சரசுவதி அவர்களும்,
‘புராணங்களில் எனும் தலைப்பில்’ தந்தை பெரியார் திராவிடர் கழக பேச்சாளர் தோழர் சீனி.விடுதலை அரசு அவர்களும், ‘அரசியலில்’ எனும் தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தை சார்ந்த தோழர் முனைவர் சுந்தரவள்ளி அவர்களும், ‘வரலாற்றில்’ எனும் தலைப்பில் மார்ச்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியை சார்ந்த எழுத்தாளர் தோழர் வாலாசா வல்லவன் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்.

1 மணியளவில் மதிய உணவு இடைவேளை.கலந்து கொண்ட தோழர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

உணவு இடைவேளிக்குப்பிறகு சம்பூகன் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி தொடர்ந்தது.

இசை நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் பட்டிமன்றம் துவங்கியது.
‘மக்களை பிளவு படுத்துவதில் விஞ்சி நிற்பது மதவாதமா?ஜாதியவாதமா?’ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் நடுவராக இருந்தார்.

பட்டிமன்றம் துவங்கிய உடன் சென்னையின் பலத்த மழை காரணமாக மின்தடை ஏற்பட்டுவிட்டது. ஜெனரேட்டையும் இயக்க முடியாத அளவிற்கு மழை நீர் மண்டபத்தின் முன் தேங்கிவிட்டது.ஆனாலும் பட்டி மன்றத்தில் தொடர்ந்து பேசிய தோழர்கள் ஒலிபெருக்கியும் இல்லாமலேயே மிகவும் உரத்த குரலில் பேசி தங்கள் வாதங்கள் கூடி இருந்த அணைவ்ருக்கும் கேட்கும் வகையில் கருத்துக்கள் சென்றடைய செய்தனர்.

”மதவாதமே ”எனும் தலைப்பில் கழக வழக்கறிஞர் தோழர் திருமூர்த்தி அவர்களும்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்களும் வாதங்களை எடுத்துரைத்தனர்.

”ஜாதியவாதமே” எனும் தலைப்பில் கழக தோழர் திருச்சி புதியவன் அவர்களும்,கழக தோழர் கு.அன்புதனசேகர் அவர்களும் வாதங்களை எடுத்துரைத்தனர்.

வாதங்கள் முடிந்த பின் நடுவர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் மக்களை பிளவு படுத்துவதில் விஞ்சி நிற்பது ‘ஜாதியவாதமே’ என தீர்ப்பளித்தார்.

தோழர் இராவணன் அவர்கள் நன்றியுரை வழங்க பட்டி மன்றம் நிறைவுற்றது.

மாலை 6 மணிக்கு திறந்த வெளி மாநாடாக திட்டமிடப்பட்டிருந்த மாநாடு பலத்த மழையின் காரணமாக மண்டப அரங்கத்திலேயே தொடர்ந்து நடைபெற்றது.மின் விளக்கு இல்லாமல் சிறிய பேட்டரி விளக்கொளியில் ஒலிபெருக்கி இல்லாமல் மாநாடு நடைபெற்றது.

கடும் மழையிலும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் நாகராஜன் அவர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

‘நூல் வெளியீடு’
மாநாட்டின் இடையே ”புராணங்கள் வரலாறுகளில் பார்ப்பன் பயங்கரவாதம்” எனும் நூலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் நாகராஜன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மழை,மின்வெட்டு,ஒலி பெருக்கி இல்லாத சூழலிலும் நிறைவாக கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்களும்,கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் நிறைவுறையாற்றினார்கள்.

மழை காரணமாக திறந்த வெளி மாநாடு நடந்த இயலாத சூழல் ஏற்பட்ட காரணத்தால் பிறிதொரு நாளில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களை அழைத்து திட்டமிட்டபடி திறந்த வெளி மாநாட்டை நடத்துவது என அறிவிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட தோழர்கள் இறுதிவரை பங்கேற்று இம்மாநாடு சிறப்புடன் நடைபெற்று வெற்றியடைய வைத்தார்கள்.

கழக தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் நிறைவுறையாற்ற மாநாடு முடிவுற்றது

11224259_1673199289630631_3092963758877627840_n 11225269_1673199292963964_219111201068509411_n 12191989_1673199729630587_2744881737201415724_n 12289611_1673200116297215_5298955445607481032_n 12295236_1673200352963858_3202025872224508423_n 12295318_1673199592963934_2782860704228337700_n 12299112_1673199232963970_1028233762879548414_n 12308263_1673199409630619_5785412376054421081_n 12308309_1673199392963954_2679570953720124285_n 12308647_1673199682963925_8836592145779679961_n 12308788_1673199622963931_4704747877468591627_n 12310499_1673199249630635_8215118058263387911_n 12310565_1673199699630590_4882474290588565878_n 12313763_1673198302964063_8449078941360297562_n 12313791_1673200106297216_9150918295214017658_n 12314083_1673199856297241_7923168924089651898_n 12341060_1673199316297295_5335293216669902912_n 12341642_1673199199630640_3541484089999058517_n 12345630_1673200242963869_6620492303803481550_n 12345634_1673200239630536_5976049916610075420_n 12346457_1673200286297198_7256702909164815834_n 12347775_1673200372963856_4205108160975425147_n 12347949_1673200022963891_6251335457625221405_n

You may also like...