காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிரடியாக நடைபெற்ற எஸ்.வி.ஆர். ஆவணப்பட வெளியீடு !
கழக தலைவர் வெளியிட தோழர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார் !
04.06.2016 சனிக்கிழமை, மாலை ”மனிதநேயப் போராளி தோழா் எஸ்.வி.ஆா்.” எனும் ஆவணப்பட வெளியீடு மற்றும் திரையிடல் சென்னை மேற்கு மாம்பலம்,சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நிகழ்சிகள் துவங்கும் நிலையில் திடீரென வந்த காவல்துறை நிகழ்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த திருமண மண்டபத்தில் நிகழ்சியை நடத்தக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்தது.அப்பட்டமான ஜனநாயக விரோதமாக நடந்து கொண்ட காவல்துறையின் அடாவடித்தனத்தை முறியடித்து குறும்பட வெளியீட்டை,திரையிடலை எப்படியும் நடத்தி விடுவது என தோழர்கள் முடிவு செய்தனர்.
உடனடியாக கழக தோழர் அன்பு தனசேகர் அவர்களின் இல்லத்தின் மேல் மாடியில் நிகழ்சியை நடத்த மாற்று ஏற்பாடு செய்தனர்.தோழர் அன்பு தனசேகர் அவர்கள் காவல் துறையின் மிரட்டகளை புறந்தள்ளி தன் வீட்டில் நிகழ்சியை நடத்த மகிழ்சியுடன் ஒப்புக்கொண்டு நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.
உடனடியாக நாற்காலி, ஒலிபெருக்கி, விளக்கு அனைத்தும் தயார் செய்யப்பட்டு 100 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.இதையும் நடத்தக்கூடாது அனைவரையும் Secure செய்வோம், Force கொண்டுவந்து கூட்டத்தை கலைப்போம் என்று காவல்துறை வீட்டின் கீழே நின்று கொண்டு மிரட்டிக்கொண்டு இருந்தது. தோழர்கள் உமாபதி, தபசி குமரன், கண்ணன், லட்சுமணன் போன்றோர் அவர்களை சமாளித்துக்கொண்டு இருக்க திரையிடல் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
தோழர்கள் நல்லக்கண்ணு, கொளத்தூர் மணி, கு.இராமகிருட்டிணன், தலித் சுப்பையா, வ.கீதா, பொழிலன், பேராசிரியர் அரசு,முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி ஆகியோர் உட்பட 100க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மனித உரிமைக்கு போராடிய எஸ்.வி.ஆரின் ஆவணப்பட திரையிடலை தடை செய்து மீண்டும் ஓர் மனித உரிமை படுகொலையை நிகழ்த்தியுள்ளது காவல்துறை.
தனது நூல்கள் மூலம் பெரியாரை மறுவாசிப்புக்கு உள்ளாக்கிய எஸ்.வி.ஆரின் ஆவணப்படத்தினை கடும் நெருக்கடிக்கிடையே வெளியிடப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.