சென்னை காதல் தின கொண்டாட்டத்தில் மதவாத கும்பலுக்கு பதில் அடி கொடுத்த கருப்பு சட்டைகள்
காதல் தினத்திற்கு தோழர்களுடன் ஏதோ பல நிகழ்ச்சிகள்லாம் திட்டமிட்டோம் ஆனால் நாங்கள் திட்டமிட்டதை விட மிகவும் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது இந்து மக்கள் கட்சி. மெரினா உழைப்பாளர் சிலை அருகில் ஒன்று கூடி காதலர் தினத்திற்காக தயார் செய்த பேனரை புடித்து கொண்டு காதலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டும் வாழ்த்து தெரிவித்தும் நடந்து சென்றோம். எதிரே தவ்ஹித் ஜமாத் யை சேர்ந்தவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் துண்டறிக்கை கொடுக்க அவர்களுக்கும் இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்து தெரிவித்தோம்.
கொஞ்ச தூரம் சென்ற பிறகு தோழர் நாத்திகன் எங்களிடம் வந்து கண்ணகி சிலை அருகே இந்து மக்கள் கட்சி ஏதோ ஆர்ப்பாட்டம் பன்றாங்களாம் கண்டிப்பா அங்கே இருக்கும் காதலர்க்கு தொந்தரவு கொடுப்பார்கள் நம்ப அங்கே போயிடலாம் திராவிடர் விடுதலை கழக தோழர்களும் இருப்பாங்கனு சொன்ன வுடனே நாங்க அங்க போயிட்டோம். அங்கே ஏற்கனவே தோழர் உமாபதி தலைமையில் திவிக தோழர்கள் இருந்தனர். அங்கே அனைவரும் நின்று பேசி கொண்டே காதலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டு இருந்தோம். இந்து மக்கள் கட்சி யை சேர்ந்த கொஞ்ச பேர் வண்டியில் காவி கொடியுடன் வந்தனர். அவர்கள் வந்த உடனே காவல் துறை வந்து எங்களிடம் இங்கே நிக்காதிங்க தல்லி போங்க னு சொல்ல அதற்க்கு நம்ப தோழர்கள் நாங்க இங்கே சும்மா தான் நிக்குறோம் னு சொல்ல வாக்குவாதம் ஏற்பட்டது.கொஞ்ச நேரம் கழித்து நாங்க கொஞ்ச தள்ளி போய் நின்று பேசிகொண்டு இருந்தோம். காவி கும்பல் அங்கே ஏதோ வாழ்த்து அட்டை ய எரித்து விளையாடி கொண்டு இருந்துனர். இங்க நம்ப தோழர்கள் பாட்டி பாடி கொண்டே உடனே தபெதிக தோழர்களிடம் தகவல் தெரிவித்தோம். அவர்களும் அங்கே வந்துவிட்டனர். மெரினாவை கருப்பு சட்டைகள் ஆக்கிரமித்த பிறகு எதாவது செய்தால் பதிலடி கிடைக்கும் என புரிந்து கொண்ட காவி கும்பல் கைது என்ற பெயரில் அடக்கி வாசித்து காவல்துறை வாகனத்தில் ஏறி பாதுகாப்பான இடத்திற்க்கு சென்றுவிட்டனர்.
ஊடகத்தில் உள்ள தோழர்கள் எங்களிடம் வந்து நீங்கள் இங்கே இருப்தால் தான் அவர்கள் அடக்கி வாசித்தனர் இல்லையென்றால் அவர்கள் தங்களுடைய வேலை காமித்து இருந்திர்பார்கள் என்று கூறினர்.
காவி கும்பலை படம் எடுக்க வந்து ஊடகங்கள் எங்கள் பக்கம் திரும்பின. நாங்க பாட்டு பாடியும், காதலுக்கும் காதலர்களுக்கும் ஆதரவாக வும், ஜாதிய மதவாத கும்பலை எதிர்த்தும் முழக்கங்கள் போட்டு கொண்டு இருந்தோம். ஊடகங்களுக்கு காதலர் தினத்தை பற்றியும்,
அதை எதிர்க்கும் மதவாத கும்பல் பற்றியும் செய்தி கொடுத்தோம். பின்பு நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில் கேக் வாங்கி வந்து கிருத்திகா மற்றும் நாத்திகன் இனைந்து வெட்டி அனைவருக்கும் கேக் கொடுத்தோம். முத்தங்களின் மூலமாக அன்பை வெளிபடுத்தினோம்.
இந்த நிகழ்ச்சி எதிர்ப்பார்காத வகையில் மிகவும் சிறப்பாக அமைந்ததற்க்கு காரணம் காவி கும்பல் தான். ஊடகங்களை அவர்களுக்கு சாதகமாக எங்களை பயன்படுத்தி கொண்டனர் ஆனால் அது எங்களுக்கு சதகமாகவும், மேலும் எதிர்ப்பார்காத மகிழ்ச்சியை யும்,வெற்றி யையும் தந்தது.
நமக்கு விளம்பரமே நமது எதிரிகள் தான் என்பது நிருபமனமானது.
காதலர்களுக்கு இனிமே ஆதரவாக அவர்களை கருப்பு சட்டைகள் ஊக்குவிக்கும்.
ஆட்டம்,பாட்டம் கொண்ட்டாடம் என் காதலர் தினம் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஜாதி,மதம் ஒழிய காதல் செய்வோம்!
சமத்துவம் மலர காதல் செய்வோம்!
காதலை வரவேற்போம்!
காதலர்களை பாதுகாப்போம்!
ஆதலால் காதல் செய்வீர்!
செய்தி குகன் சாமிநாதன்