பார்ப்பனியக் கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது திராவிடக் கட்சிகளை வீழ்த்த ஈரோட்டில் பா.ஜ.க. யாகம்!
திராவிட கட்சிகளை வீழ்த்தி, பா.ஜ.க.வின் ‘இந்து சாம்ராஜ்யத்தை’ தமிழகத்தில் நிறுவுவதற்கு ஈரோட்டில் பல கோடி ரூபாய் செலவில் பா.ஜ.க. தலைமை, யாகம் நடத்தியுள்ளது. இது குறித்து ‘ஜூனியர் விகடன்’ ஏடு (7.2.18) வெளியிட்டுள்ள செய்தி: “இஸ்லாமியர்களை விரட்டிவிட்டு இந்து சாம்ராஜ்ஜியத்தைப் பலப்படுத்த அஸ்வமேத ராஜ சூய யாகத்தை சத்ரபதி சிவாஜி நடத்தினார். அப்படியொரு யாகத்தை ஈரோட்டில் பல கோடி ரூபாய் செலவில் நாங்கள் நடத்தியுள்ளோம். ‘இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய யாகம் இது’ என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறினார்” என்று பெருமையுடன் நம்மிடம் கூறினார், பி.ஜே.பி. விவசாய அணியின் தமிழகப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜு. ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே ஏ.இ.டி. பள்ளி வளாகத்தில், பி.ஜே.பி. சார்பில் ஜனவரி 26, 27, 28 தேதிகளில் பிரமாண்டமான முறையில் யாகம் நடத்தப் பட்டது. இந்த யாகத்தில், குதிரையை உயிருடன் எரித்ததாகத் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் காட்டுத் தீ போல பரவிய தகவல், பெரும்...
