இந்து மக்கள் கட்சியின் ‘நேர்மை’

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). தொழில் அதிபரான இவர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், “ இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத் பிரிவு) மாநில இளைஞர் அணி செயலாளர் பாலச்சந்தர் (27) என்பவர் தன்னை மிரட்டி அடிக்கடி பணம் கேட்டு தொல்லைக் கொடுப்பதாகவும், தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய அதிகாரி சகாதேவன் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தார். பாலசந்தர் கைது செய்யப்பட்டார். காவல் நிலைய விசாரணை யில், பாலசந்தர் ஏற்கனவே பல பொய் புகார்கள் கொடுத்து காவல் நிலையத்துக்கு தொல்லை கொடுத்தாக தெரிய வந்தது. இந்து மக்கள் மக்கள் கட்சி அலுவலகம் முன்பு மாட்டு தலையைப் போட்டு நாடகம் ஆடி யதும் இவர்தான் என்று கண்டுபிடிக்கப் பட்டது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பாலசந்தர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்கண்ட தகவல்கள் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி : ‘தினத்தந்தி’ நவ. 13

பெரியார் முழக்கம் 16112017 இதழ்

You may also like...