தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறியாளர் அம்புரோஸ் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பொறியாளர்.அம்புரோஸ், சாலை விபத்தில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் உடல் அடக்கம் அக்டோபர் 27ஆம் தேதி காலை புதுக்கோட்டையிலுள்ள அவர் இல்லம் அருகில் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம், குமரி மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் நீதியரசர், முன்னாள் மாவட்ட தலைவர் சூசையப்பா, திருநெல்வேலி மாவட்ட தலைவர் பால்வண்ணன், மாவட்ட அமைப்பாளர் அன்பரசு, தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப் பாளர் தமிழ்செல்வம், கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் மாசிலாமணி, செயலாளர் சுப்பையா, பொருளாளர் சங்கர், ஆதி தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் அருந்ததியராசு, நெல்லை கலைக் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் தென்மண்டல செயலாளர் சே.சு.தமிழ் இனியன், ஆதித் தமிழர் கட்சி இரஞ்சித், வெண்மணி, சூ.க.சங்கர், உலக திருக்குறள் பேரவை அன்பழகன், புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்தர், தமிழரசன், முருகபெருமாள், தொழிலதிபர் மாதவராசு, தி.மு.க பிரமுகர், துரைமலைக் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இரங்கல் உரை நிகழ்த்தியும். இறுதி நிகழ்வில் அதிக அளவில் தோழர்கள் மற்றும் உறவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 16112017 இதழ்

You may also like...