நிமிர்வோம் பிப்ரவரி 2017 இதழ் வாசகர் கடிதஙகள்
நன்னன் நேர்காணல்
நிமிர்வோம் இதழில் பேராசிரியர் நன்னன் அவர்களின் பேட்டி -இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. பெரியார் இயக்கம் எதிர் நீச்சலில் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்ற வரலாற்றை -இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். பேராசிரியர் நன்னன் –மொழியியல் அறிஞர் என்ற பார்வை மட்டுமே எங்களிடம் இருந்தது. அவர் பெரியாரியச் சிந்தனையில் ஆழமானப் பற்றுகொண்டு -அந்த நெறியை வாழ்க்கையாக்கிக் கொண்டவர் என்பதை பேட்டியிலிருந்து அறிந்தோம்.
-வே.கண்ணன், வில்லிவாக்கம்
மேக்நாட் சாகா
பஞ்சாங்கமும்அறிவியலும் பஞ்சாங்கம் அறிவியலுக்கு எதிரானது என்பதை விஞ்ஞானி மேக்நாட் சாகா அறிக்கையிலிருந்து வெளி யிட்டிருந்தது மிகவும் சிறப்பு. ‘நிமிர்வோம்’ கட்டுரையை படித்தபிறகு தேவிகாபுரம் சிவா நூலை தேடிப்போய் வாங்கிப் படித்தேன். கல்வியில்மிகச்சிறந்தமாணவனாகஇருந்தாலும் -சமூகத்தின் தீண்டாமைக் கொடுமையை அவர் அனுபவித்திருக்கிறார்.
காலில் செருப்பு அணியாமலே சொந்த ஊருக்குநடந்தேசென்றிருக்கிறார். சொந்தகிராம மான சியாத்தாலி (இப்போது வங்கதேசம்) யில் சரசுவதி கோயிலுக்கு வழிப்படச் சென்ற அவரை பார்ப்பன அர்ச்சகர் விரட்டி அடித்த போதுதான் சாதியச் சமூகத்தின் கொடுங்கோன்மையை அவர் உணர்ந்து, அப்போது முதற்கொண்டே இந்து மதத்தையும்-கடவுள் நம்பிக்கையையும் உதறித் தள்ளி இருக்கிறார். நோபல் பரிசுக்கு நான்கு முறை அவர் பரிந்துரைக்கப் பட்டிருந்தும் கூட அவருக்கு அது மறுக்கப் பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற சி.வி. இராமன் தொடர்ந்து சாகாவின் புகழ் பரவ விடாமல் செய்த திரைமறைவு சூழ்ச்சிகளைப் படித்தபோது நெஞ்சம் குமுறியது .
அமெரிக்காவின் ராக்பெல்லர்அறக்கட்டளை -சாகாவின் ஆய்வுக்கு 2000 பவுன்ட் நிதி உதவி வழங்க முடிவு செய்த நிலையில், அப்போது தவிர ஆராய்ச்சியாளர் அல்ல என்று கூறி நிதி கிடைப்பதைதடுத்திருக்கிறார்.இந்தஉண்மையை கல்கத்தாவில் 1994 ல் நடந்த சாகா நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் டி வோர் கின் தனது உரையில் வெளிப்படுத்தினார். பொதுவாக நோபல்பரிசை காலனி நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்குவது இல்லை. அதையும் மீறி சி.வி.இராமன், சீனிவாசஇராமானுஜம் போன்ற பார்ப்பனர்களுக்கு கிடைத்தது என்றால், அந்த அளவுக்கு பார்ப்பன ‘லாபி’ (அழுத்தம் தரக்கூடிய செல்வாக்கு) வலிமையாக வேலை செய்தது. அதற்கு ஒரு உதாரணமாக நிகழ்வு, இந்தியாவைச் சார்ந்த விஞ்ஞானி சந்திரசேகர் ஒரு பார்ப்பனர்.
இவரை அமெரிக்காவின் “இயர்க் வானியல்’’ ஆய்வு கூடத்துக்கு ஆய்வாளராக அனுப்பி வைக்க பார்ப்பன லாபி முயற்சித்தது. இதற்காக உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிஆட்டோஸ்பரூவ் என்பவரிடம் பார்ப்பனர்கள் பரிந்துரை கடிதம் ஒன்றை எழுதி வாங்கினார்கள். அந்த கடிதத்தில் ஸ்ட்ரூவ் எழுதிய பரிந்துரைதான் மிகவும் முக்கியமானது.“சந்திரசேகர்உலகின்தலைசிறந்த விஞ்ஞானி. நோபல் பரிசுப்பெற்ற சி.வி.இராமனின் அண்ணன் மகன்’’ என்று தகுதிகளை குறிப்பிட்டதோடு, கூடுதல்தகுதியாக ‘‘பிராமண வகுப்பில் பிறந்தவர்’’என்று குறிப்பிட்டிருந்தார். சந்திரசேகர் ஒரு மேற்கத்தியர் அல்லாதவர் என்ற குறைப்பாட்டை “பிராமணனாக’’ பிறந்தார் என்ற “தகுதி’’ சரிப்படுத்தி விடுகிறது. இப்படி ஏராளமான தகவலை இந்த நூலில் படித்ததை “நிமிர்வோம்’’ வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளவே சற்று விரிவாக எழுத நேரிட்டது. தமிழக ஏடுகள் இருட்டடித்த மேக்நாத் சாகா என்னும் புரட்சிகர தலித் விஞ்ஞானியின் கட்டுரையை தேடிப்பிடித்து வெளியிட்ட “ நிமிர்வோம் “ இதழைப் பாராட்ட வேண்டும்.
அரங்கராசன், மயிலாப்பூர்
“நல்ல நேரம்” மோசடி
குழந்தை பிறந்தநாள் நேரம், நட்சத்திரம் இந்து பண்டிகைகள் அனைத்துமே பஞ்சாங்கத்தைப் பார்த்துதான், புரோகிதர்களும் சோதிடர்களும் கணிக்கிறார்கள்.“அக்னிநட்சத்திரம்’’‘‘செவ்வாய் தோஷம்’’ என்று கணிக்கப்பட்டவர்கள் திருமணத்துக்கு துணையான பொருத்தம் கிடைக்காமல், ஆண்டுக் கணக்கில் திருமணம் தள்ளிப் போடப்படுகிறது.
“ராகுகாலம்’’ “எமகண்டம்’’ என்று குறிப் பிடப்படும் நேரங்களில் “நல்ல’’ செயல்கள் நடத்தக் கூடாது என்று நம்புகிறார்கள். இவை எல்லாமே தவறான கணக்குகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை என்ற உண்மையை “சோதிட பலன்’’ வெளியிடும் ஏடுகளும், இதழ்களும் மக்களுக்கு தெரிவிக்காமலே இருப்பது எவ்வளவு பெரிய மோசடி., கி.பி 500 லிருந்தே நாள் கணக்கு பெரும் பிழையோடு பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ஓர் ஆண்டுக்கான நாள் 365 . 258756 என்று “ஆரிய சித்தாந்தம்’’ என்ற நூல் போட்ட கணக்கு உண்மையான ஆண்டுக் கணக்கை விட 0.01656 நாள் நீண்டது என்றும், இந்தப் பிழையோடு கணிக்கப் பட்ட பஞ்சாங்ககணக்கு 1952 ம் ஆண்டில், ஆண்டுக்கு 365 நாட்களை விட 23 நாட்கள் கூடுதலாகவே இருந்து வருகிறது என்ற உண்மையை சாகா தலைமையில் அமைந்த விஞ்ஞானிகள் குழு நிருபித்திருக்கிறது.
இந்த பிழையை 1400 ஆண்டுகளாக பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் கணக்கில் கொள்ளாததால், பொங்கல் தீபாவளி உட்பட ஒவ்வொரு பண்டிகையும் 23 நாட்கள் கழித்தே கொண்டாடி வருகிறோம். நல்ல நாள் ராகுகாலம் எமகண்டம் பார்ப்பவர்கள் இதற்கெல்லாம் என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்?
மகிழினி. திருவரங்கம்
“டிரம்பின் இந்துத்துவம்” குறித்து
டிரம்பின் இந்துத்துவம் கட்டுரை சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும் சரியான பார்வை. பார்ப்பனிய இந்துத்துவம் அமெரிக்காவில் செயல்பட துவங்கிவிட்டது. அரசியல் அனுபவமே இல்லாத தொழிலதிபர்தான் டிரம்ப். தேர்தல் களத்தில் தொடக்கக் காலத்தில் பேசியதை ஒரு கோமாளியின் பேச்சுக்களாகவே அமெரிக்கர்கள் கருதினர். பிறகு டிரம்ப் அமெரிக்க கலாச்சார தேசியம் என்ற இந்துத்துவ வடிவத்தை கட்டமைத்த போதுதான், இவ்விவாதம் உசுப்பி விடப்பட்டது வெள்ளைநிறவெறிதொழிலாளர்கள்பேராதரவு கிடைத்தது. இந்த இனவாத கருத்தியலை வடிவமைத்தவர் ஸ்டீபன் கே.பேனன் (Stephen k.
bannon) என்பவர். இவர் அமெரிக்காவிலேயே பெரிதும் விளம்பரமாகாத ஒரு இணையதளத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தவர். வெள்ளை நிறவெறிக் கொள்கையையும், இஸ்லாமிய வெறுப்பையும் பரப்பி வந்த இணையதளம் அது. தேர்தலின் கடைசி கால கட்டங்களில் டிரம்பின் ஆலோசகரானார். இப்போது டிரம்பின் தத்துவார்த்த குரு அவர்தான். உலகிலேயே அதிகாரமிக்க இரண்டாவது நபர் என்ற எல்லையில் நிற்கிறார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் உரிமைகளைப் பெற்று, டிரம்பின் கொள்கை அணுகு முறைகளை அவரே தீர்மானித்து வருகிறார்.
இந்து ஆங்கில நாளேட்டில் ( மார்ச் 03, 2017) வெளிவந்த ஒரு நடுப்பக்க கட்டுரை இந்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. ஆர்.எஸ். எஸ் கருத்தியலான கலாச்சார தேசியம் “இந்து தேசியவாதம்’’ போன்றவற்றை இங்கே மோடி பேசுவதற்கும்,டிரம்பின்கருத்தியலுக்கும்வேறுபாடு ஏதும் இல்லை. மோடியின் ஆலோசகராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் செயலாளர்களில் ஒருவரான மதன்ராம் என்னும் பார்ப்பனர் மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சுக்குமிடையே உறவுப் பாலமாக செயல்படுகிறார்.
மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு முன் கூட்டியே ஏற்பாடுகள் செய்வதும், அந்த நாடுகளில் இந்துத்துவ பார்ப்பன சக்திகளை ஒருங்கிணைப்பதும், இந்துத்துவ பார்வையில் கொள்கைகளை உருவாக்குவதும் இவர்களின் வேலை. இந்திய வரலாற்றிலேயே அய் நாவில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்துக்கு எதிராகவும், அண்மையில் இந்திய பிரதி-நிதி செயல்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஜாதி அமைப்பை உருவாக்கி, ஜாதி மேலாதிக்கத்தை நிறுவனப்படுத்தி வரும் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டில் மட்டும் ஜாதி கூடாது என்று ஜாதி எதிர்ப்பாளர்களாகி விடுகிறார்கள்.
அதே போல் உலக மயமாக்கல் என்ற கொள்கையை தூபமிட்டு உரம் போட்டு வளர்த்து பயனடைந்த அமெரிக்கா இப்போது அமெரிக்கர்களின் பாதுகாப்பு (றிக்ஷீஷீtமீநீtவீஷீஸீவீsனீ ) என்ற போர்வையில் உலகமயமாக்கலை எதிர்க்க தொடங்கியிருக்கிறது . “பலித்தவரை லாபம்’’ என்ற பார்ப்பனீயம் குறித்த பெரியாரின் புரிதல் எவ்வளவு துல்லியமானது இப்போது புரிகிறது.
செந்தில் குமார், நெல்லை.