நிமிர் ஜனவரி 2017 இதழ் வாசகர் கடிதங்கள்
அரசு தந்த வீட்டை வாங்க மறுத்த விந்தன்!
‘நிமிர்வோம்’ இதழ் கண்டு மகிழ்ந்தேன்; ஆழமான கட்டுரைகள் இதழை அலங்கரிக்கின்றன. நமக்கு இலக்கியம் உண்டா என்ற பெரியாரின் கேள்வி-சிந்திக்க வைக்கிறது.
வ.கீதா,ஜெயராணி இருவரின் பொதுவுடைமை -ஜாதி ஒழிப்பு குறித்த கட்டுரைகள்.
பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் மீது விமர் சனங்களை முன்வைக்கின்றன.
சுய விமர்சனங்களுக்கு ‘நிமிர்வோம்’ இட மளிப்பது வரவேற்கத்தக்க அணுகுமுறை. ‘நிமிர்வோம்’ மகிழ்வையும் நம்பிக்கைகளையும் ஊட்டுகிறது.
-சி.அம்புரோசு, மாவட்டத்தலைவர், தி.வி.க. தூத்துக்குடி.
படைப்பாளி விந்தன் குறித்து பேராசிரியர் வீ.அரசு கட்டுரை, இளைய தலைமுறைக்கு மறைக்கப்பட்ட சிறந்த படைப்பாளியை அறிமுகப்படுத்தும் சிறந்த கட்டுரை.
நடிகவேள் எம்.ஆர்.ராதா சிறையிலிருந்தபோது உரையாடி – அவரது வரலாற்றை நூலாக்கிய பெருமையும் அவருக்குண்டு.
‘கூண்டுக்கிளி’ திரைப்படத்தில் காதல் செய்த குற்றம் கண்கள் செய்த குற்றமானால், கண்களைப் படைத்த கடவுள் செய்கை சரியா, தப்பா’ என்று பாடல் எழுதியவர் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதரைப் பார்ப்பன ஊடகங்கள்-குறைவாக மதிப்பிட்ட போது பாகவதரின் வரலாற்றை, ‘தினமணி கதிரில்’ பதிவு செய்த பெருமையும் விந்தனுக்கு உண்டு.
‘கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக நான் எண்ணத்தையும் எழுத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டேன். இது செத்தவன் வாழும் தமிழ்நாடு, நானும் செத்தபின் வாழ்வேன்.’ என்று ஒரு சிறுகதையில் கதாபாத்திரம் வழியாகக் கூறுவார்.
அண்ணா அரசு சார்பில் அவருக்கு வீடுவழங்க முன்வந்தார். கலைஞர் முதல்வரானபோது ‘தமிழரசு’ அரசு இதழில் ஆசிரியர் பொறுப்புக்கு அழைத்தார்.
விந்தன் இரண்டுக்குமே இசைவு தரவில்லை. விந்தனுக்கு மணி விழா நடத்தி அதில் ஒரு கணிசமான தொகையை நிதியாக வழங்க விரும்புவதாக எம்.ஆர்.ராதா விடுத்த அன்புக் கட்டளையை மட்டும் ஏற்றுக்கொண்டார். ஆனால் மணி விழாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அவர் மறைந்துவிட்டார்.
‘நிமிர்வோம்’ முதல் இதழிலேயே ‘விந்தனை’ப் போற்றியது. மகிழ்ச்சி தருகிறது: வாழ்த்துகள்
இதழ் வடிவமைப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
அறிவன் – இன்பன், சீனிவாசபுரம், மயிலாடுதுறை
தமிழ் படித்த புலவர் பெருமக்கள் கற்பின் பெருமைகளையே தமிழ்ப்பண்பாடாகப் பேசி கொண்டிருக்கும் -தமிழ்ச் சூழலில் கற்புக்குள் அடங்கியுள்ள பெண்ணடிமைக் கூறுகளை உடைத்துக் காட்டிய பெரியாரின் சிந்தனையை கவிதைகளாக்கிய பெருமை பாவலர் இன்குலாப் அவர்களுக்குஉண்டு. அத்தகையஒருகவிதையை ‘நிமிர்வோம்’ தேர்வுசெய்து வெளியிட்டுள்ளது கவிஞருக்கு செலுத்தக்கூடிய உண்மையான அகவணக்கம்.
க.தமிழ்ச்செல்வி, திருச்சி
மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் கட்டுரையைப் படித்தபோது அதிர்ச்சி அடைந்தேன். நாம் தமிழ்நாட்டில் தமிழர்களாகத்தான் இருக் கிறோமா?நமதுஅரசியல்தலைவர்களுக்குஇவை எல்லாம், ஒரு பிரச்சனையே இல்லையா?
மு.வரததாசன், திருமுல்லைவாசல்