வாசகர் கடிதம்

குடிஅரசு வெளியிட ஏற்பட்ட தடைகள் குறித்த கழகத் தலைவரின் உரை பல புதிய தகவல்களை அறிந்து கொள்ள உதவியது. குடிஅரசு தொகுப்பில் உள்ள பல தோழர்களின் கூட்டு உழைப்பு தற்போதைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைகிறது. பேராசிரியர் வீ.அரசு அவர்களின் உரை ஈழப் பிரச்சனையிலும், வீரப்பன் பிரச்சனையிலும் கழகத் தலைவரின் தியாகத்தை, பறைசாற்றும் வகையில் அமைந்தது.

மேலும் குடிஅரசு தொகுப்பை வெளியிட ஏற்படும் பொருளாதார செலவை சமாளிக்க தன் வீட்டையே தர முன்வந்த கழகப் பொதுச் செயலாளரின் குணம் சிலிர்க்க வைக்கிறது. குடிஅரசை தொகுக்க ஏற்பட்ட சிரமங்கள் புரட்சிப் பெரியார் முழக்கம் உரிய முறையில் ஆவணப்படுத்தி சேமித்து வைக்கப்பட வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.

குடிஅரசுத் தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்த சீர் வாசகர் வட்டத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-அருண் கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்)
பெரியார் முழக்கம் இதழ் 09102025

You may also like...