‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய 9ஆவது ஆய்வரங்கம்
‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட 9ஆவது கூட்டம் மார்ச் 3, 2019 மாலை சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இலட்சுமணன் தலைமை தாங்க, இராஜேஷ் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அருண் – ‘சங்க காலத்தில் வைதிக ஊடுறுவல்’ எனும் தலைப்பிலும், சென்னைப் பல்கலைக் கழக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைச் சார்ந்த பிரவீண்குமார், ‘பவுத்த தத்துவ சிந்தனையும்-கடவுள் மறுப்பும்’ என்ற தலைப்பிலும், கருந்தமிழன் கலைமதி, ‘உணர்வு-உரிமை-ஒழுக்கம்-பெரியாரியல் பார்வை’ என்னும் தலைப்பிலும், சங்கீதா, ‘பெண்களின் உரிமைகளை நோக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்’ என்ற தலைப்பிலும், நாத்திகன் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதங்கள்’ என்ற தலைப்பிலும், இளம் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ‘புல்வாமா தாக்குதல்களும் – காஷ்மீர் பிரச்சினைகளும்’ என்ற தலைப்பிலும், கழக தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ‘மத்திய அரசின் வேலை வாய்ப்புகளும்-மறுக்கப்படும் மாநில உரிமைகளும்’ என்ற தலைப்பிலும் ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினர். இளம் தோழர் இனியவன் நன்றி கூறினார். ‘நிமிர்வோம்’ ஆசிரியர் விடுதலை இராசேந்திரனுக்கு பெரியார் -அம்பேத்கர் படம் வாசகர் வட்டம் சார்பில் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. ஆய்வுரைகளைப் போல ஆழமான கருத்துகளை முன் வைத்து ஆற்றிய உரைகள் கூட்டத்தினரை மிகவும் ஈர்த்தது.
நிமிர்வோம் மார்ச் 2019 மாத இதழ்