Author: admin

நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! 29012017

நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்……. நாள் : 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை.மாலை 6.00 மணி. இடம் : பேருந்து நிலையம் அருகில்,நங்கவள்ளி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் சிவகாமி, அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

அரியலூர் நந்தினிக்கு நீதிவழங்கு. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் செயல்படாத காவல்துறையின், “தீண்டாமை ஒழிப்பு பிரிவு” முற்றுகை போராட்டம்….! நாள்:31.01.2017. செவ்வாய்க்கிழமை. நேரம்:காலை11.00 மணி.  

திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! 27012017

நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! பொள்ளாட்சி,ஈரோடு,திருப்பூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட ஜாதி ஒழிப்பு போராளிகள் பங்கேற்பு. (10 பெண்கள் உட்பட) நன்றி: •கா.சு.நாகராசு.ஒருங்கிணைப்பாளர். பெரியார் திக. •இரத்தினசாமி. மாநில அமைப்பு செயலாளர். திராவிடர் விடுதலைக் கழகம். •சிவகாமி.மாநில அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்றம். •முல்லைவேந்தன்.மேட்டூர் •மணிமொழி.திவிக.பொள்ளாட்சி செய்தி வைரவேல்

கொளத்தூரில் முப்பெரும் விழா !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் 138 வது பிறந்த நாள் விழா ! பெரியார் படிப்பகம் திறப்பு ! தமிழர் திருநாள் ! நாள் : 28.01.2017 சனிக்கிழமை. இடம் : பேருந்து நிலையம்,கொளத்தூர். படிப்பகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுபவர் : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

காந்தி படுகொலை நாள் சிந்தனை: பாசிசத்தை தமிழகம் ஏற்காது

காந்தி படுகொலை நாள் சிந்தனை: பாசிசத்தை தமிழகம் ஏற்காது

‘விடியல்’ ஜனவரி மாத இதழில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை. ஜனவரி 30, காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான நாள். அந்த நாளை நியாயமாக இந்துத்துவா எதிர்ப்பு நாள் என்று அறிவித்திருந்தால் சரியாக இருக்கும். ஆனால், தீண்டாமை எதிர்ப்புக்கு அரசு ஊழியர்கள் உறுதி ஏற்கும் நாளாக அது குறுக்கப்பட்டது. பார்ப்பனியத்தின் திட்டமிட்ட ஒரு சதி தான். இந்திய வரலாற்றில் காந்தியின் ஆளுமை பாத்திரத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவருடன் உடன்படுகிற முரண் படுகிற கருத்துகள்; அவரை உறுதியாக ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் இருவருக் குமே உண்டு. தவறான புரிதல்களில் அவ்வப் போது குழப்பமான கருத்துகளை வெளிப் படுத்தியவர்தான் காந்தி. ஆனால் அதற்கு உள்நோக்கம் அவரிடம் ஏதும் இல்லை என்றுதான் மதிப்பிட வேண்டியிருக்கிறது. இந்தியாவை இந்துக்களின் இராஷ்டிர மாக்குவதே – சித்பவன் பாப்பனரான திலகர் கேட்ட சுயராஜ்யம். திலகர் காலத்துக்குப் பிறகுதான் காங்கிரஸ் தலைமை காந்தியிடம் வருகிறது. காந்தி தனது சுதந்திரப் போராட்...

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

இலங்கைக்கு அய்.நா. மனித உரிமைக்கு தந்த கெடு 2017 மார்ச் மாதத்தோடு நிறைவடைகிறது. மீண்டும் உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது இலங்கை. தமிழர்கள் இந்த சதியை முறியடித்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் என்ன? கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் ஒரு வாக்குறுதியை அளித்திருந்தது. “கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்ட ரீதியான மற்றும் பிற வகைகளிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மை, நீதி, நிவாரணம் மற்றும் மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பதை உறுதி செய்வது” என்பதே அந்த வாக்குறுதி. 15 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி 13, 2017 அன்று, இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா, இலண்டனில் நடந்த ஒரு கலந்துரையாடல் கூட்டத்தின் போது, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது என்று...

‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி!’

‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி!’

மாணவர், இளைஞர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் குறித்து வெளி வந்த சில முகநூல் பதிவுகள். ஜல்லிக்கட்டு ஆதரவு, பீட்டா எதிர்ப்பு என்பன இரண்டு நாட்களாக மத்திய அரசு எதிர்ப்பு, நரேந்திர மோடி எதிர்ப்பு என்பதாக உருப்பெற்றுள்ளது. நான் தொடர்ந்து சொல்லிவருவதைப்போல இது ஒரு கநனநசயட அரசமைப்பு என்பதை மறந்து எதேச்சதி காரத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக இன்று அது வடிவம் பெற்றுள்ளது. பல்வேறு விதமான மோடி எதிர்ப்பு முழக்கங்கள், நகைச்சுவை யாய், கவிதையாய், அரசியல் கூர்மை மிக்க தாய், சற்றே ஆபாசமாய்… வெகுமக்கள் தன்மையின் அனைத்து பலங்களுடனும், பல வீனங்களுடனும் ஆர்ப்பரிக்கும் முழக்கங்கள் தமிழக பா.ஜ.க தலைமையின் எதிர்கால ஆசைகளில் மட்டும் மண் வார்க்கவில்லை.. பா.ஜ.க பக்கம் சாய்ந்து பதவி, பணச் சுகம் காணலாம் எனத் தரகு வேலை பார்த்துவந்த தூதுவர்களின் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது.                                      – அ. மார்க்ஸ் அண்ணா ஒரு நிமிஷம்ணா… ஆங்காங்கே...

தலையங்கம் இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு...

எழுந்தது இளைஞர் எழுச்சி! தமிழன்டா!

தமிழ்நாடு இதுவரை கண்டிராத எழுச்சி; புரட்சி என்றும் கூறலாம். புரட்சித் திருவிழா என்றும் அழைக்கலாம். ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறியீடுதான். தொடர்ந்து தமிழர்கள் டெல்லி, அந்நிய ஆட்சிகளால் புறக்கணிக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராக எழுந்த ஆவேசம். கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்காகக் கல்வி உரிமை கோரி 1950ஆம் ஆண்டுகளில் தொடங்கிய சமூக நீதிப் புரட்சியின் தாக்கங்கள். தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கல்விப் புரட்சி உருவாக்கிய தன்னம்பிக்கை, தன்மான உணர்வு, சமூக வலைதளங்கள் வழியாக இந்த சக்திகளை இணைத்தது. “இந்த அரசியல் கட்சிகள் மீதோ, அரசியல் தலைவர்கள் மீதோ, திரைப்பட பிரபலங்கள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை; விலகிச் செல்லுங்கள்” என்று அறிவித்து, தன்னெழுச்சியாகத் திரண்ட இலட்சக்கணக் கான இளைஞர்கள் 24 மணி நேரமும் மெரினா கடற்கரையை புரட்சிக் களமாக மாற்றினர். ‘தமிழன்டா’ என்ற ஒற்றை வாசகத்துக்குள்ளே பீறிட்டது இந்த உணர்வு. இந்தக் குறிச் சொல்லுக்குள் ஆண் அடையாளம் பதிந்திருக் கிறது என்பது...

என் சுதந்திரத்தை மறுக்க நீ யார்?

இந்தியாவோடு நம்மை (தமிழ்நாட்டை) இணைத்து சட்டத்தால் கட்டி விட்டதால் நாம் பூரண சுதந்திரம் கேட்கக் கூடாது என்பது தேசக் கட்டளையா என்று கேட்கிறேன். நான் (தமிழ்நாடு) பூரண சுதந்திரம் பெறக் கூடாது என்பதற்கு வடநாட்டானா அதிகாரி? இது அடிமைநாடா? சுதந்திர நாடா? ஒரு நாடு சுதந்திரம் பெற வேண்டுமா? வேண்டாமா? ஒரு மொழி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு வேறு நாட்டான்களா அதிகாரிகளாய் இருப்பது? இது சொந்த நாட்டானுக்கு எவ்வளவு அவமானம்! “எனக்கு இந்த காட்டாட்சி வேண்டாம்.” “எனக்கு இந்தி மொழி வேண்டாம்” என்றால் இதுசட்ட விரோதம் என்று பதிலளித்தால் இது அடிமை நாடா? சுதந்திர நாடா? எனது சுதந்திரத்தை மறுக்க அன்னியனுக்கு என்ன அதிகாரம்? ஒரு ஊரில் ஒரு பகுத்தறிவுவாதி (அடங்காப் பிடாரி) இருந்தான். அவன் மீது நம்பிக்கைக் காரர்களுக்கு வெறுப்பு. அவனுக்கு ஒரு நாள் ஒரு மயக்கம் வந்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அங்குள்ள டாக்டரைக்...

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம் 23012017

வேலூர் மாவட்ட திவிக சார்பில் குடியாத்தம் பகுதியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி அவர்களை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜசேகரை கைது செய்யக்கோரியும், அவனை தப்பவிட்ட காவல்துறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம். தோழர் கொளத்தூர் மணி கண்டன உரை காணொளி செய்தி பூரணாசுரன் சு

மாணவர் எழுச்சிக்கு அரணாய் சென்னை திவிக

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அரணாய், அமர்க்களமாய் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் …. எதிரி பீட்டா ( PETA) அல்ல … அந்த போர்வைக்கு பின்னே ஒளிந்திருக்கும் இந்துத்துவாவே ( RSS) என்பதை முழக்கங்கள் மூலமாகவும், பதாகைகள் மூலமாகவும், வீதி நாடகங்கள் மூலமாகவும் மாணவர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். மாணவர்களும் தெளிவாக பொது எதிரியை கண்டுக்கொண்டு பாஜக மோடி அரசையும், ( RSS) ஆர் எஸ் எஸ் யையும் கண்டித்து முழக்கங்களால் விண்ணை அதிர வைத்தனர். சென்னையிலுள்ள தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக சென்னை மாவட்டசெயலாளர் தோழர் இரா. உமாபதி தலைமயில் திவிக மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் பிரகாசு முன்னிலையில் போராட்டத்தில் கலந்துக் கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர் . தோழர் பிரபாகரன் பிணமாக நடித்திட , திவிக தோழர்கள் உடலுரிமை இயக்க தோழர் இரன்யாவின் தலைமையில் ஒப்பாரி வடிவில் தமிழகத்தின் நசுக்கப்படும் உரிமைகளை...

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? – பசு கவுதமன்

முன் வெளியீட்டுத்திட்டத்தில் அதிரடி விலைக் குறைப்பு ! ரூபாய் 2000 மட்டுமே ! ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் ?” பெரியாரின் 1925 முதல் 1973 வரையிலான முழுமையான பதிவுகள். ஐந்து தொகுதிகள் – 4000 பக்கங்கள் – விலை 4000/= முன் வெளியீட்டுத்திட்டத்தில் ரூபாய் 2000 மட்டுமே ! தோழர் பசு.கவுதமனின் பல்லாண்டு பெரும் முயற்சியில் பெரியார் எழுதியபடியே பெரியாரின் எழுத்துக்களுக்கான ஒரு செம்பதிப்பு !

கருகி நிற்கிறோம்!

கருகி நிற்கிறோம்!

எங்களின் தானியக் குதிர்கள்.. அடகுக் கடை ரசீதுகளும், வங்கி அனுப்பிய “ஜப்தி” நினைவூட்டல் கடிதங்களாலும், மூழ்கிப் போன நகைகளின் விபரக் காகிதக் குறிப்புகளாலும் நிரம்பியுள்ளன…. ஏர்முனை தூக்குமேடை ஆகிவிட்டது பயிர் பூச்சிகளை அழிக்கும் நஞ்சுகள் எங்கள் உயிர்மூச்சை நிறுத்தும் நிவாரணிகளாகி விட்டன… விதைமணிகளை கொன்றாகிவிட்டது, நுகத்தடிகளையும், கால்நடைகளையும் விற்று தின்றாகிவிட்டது. இங்கு… நீர்தருவாரும் இல்லை கண்ணீர் துடைப்பாரும் இல்லை! கருகி நிற்கிறோம் எரியும் பயிர்களுக்கு துணையாக..! ஏறு தழுவதற்கு போராடும் தமிழரே! சோறு தரும் எங்களை சாவு தழுவ விடாதிருக்க இணைவீரா? போராடவில்லை என்றாலும் போகிறது… பொங்கல் வாழ்த்து சொல்லிவிடாதீர்கள் …. பச்சையமுள்ள பயிரைக் காணாதவரை, உழவனுக்கு பொங்கலின் நிறம் எல்லாம் கருப்பே..! -பெ.கிருஷ்ணமூர்த்தி பெரியார் முழக்கம் 19012017 இதழ்

திவிக வரவேற்கிறது இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு ஆதரவு’...

தி.மு.க. நடத்திய நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா: கழகத் தலைவர் பங்கேற்பு

தி.மு.க. நடத்திய நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா: கழகத் தலைவர் பங்கேற்பு

தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் 03.01.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை நீலாங்கரை, சுகன்யா திருமண மண்டபத்தில் மேனாள் மேயரும் மாவட்ட செயலாளருமான மா. சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “சமஸ்கிருத திணிப்பு” எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார். இக்கருத்தரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேரா. சுபவீரபாண்டியன் ‘நீட் தேர்வு’ எனும் தலைப்பிலும், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் ‘பண்பாட்டு படையெடுப்பு’ எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 19012017 இதழ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்கள்: சரியானது தானா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்கள்: சரியானது தானா?

தென்தமிழகத்தில் அதிக எண்ணிக்கை யில் இருக்கும் ஆதிக்க ஜாதியினரான முக்குலத்தோரின் விளையாட்டுதான் ஜல்லிக் கட்டு, இது ஒட்டுமொத்த தமிழர்களின் விளையாட்டுகள் அல்ல என்று பெரியாரிய வாதிகள் சொன்னபோது, தமிழ்த் தேசிய வாதிகள் அதை மறுத்தார்கள். ஆனால், உண்மை என்னவென்பதை ஜல்லிக்கட்டு நடத்துபவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். 09.01.2017 அன்று நியூஸ் 18 தொலைக் காட்சியில் நடந்த விவாதத்தில் அம்பேத்கரிய லாளர் அன்பு செல்வம் பேசும்போது – “1996இல் தென் தமிழகத்தில் ஜாதிக் கலவரங்கள் அதிகமாக நடைபெற்றபோது, அதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மோகன் கமிஷன்,  ‘ஜாதிக் கலவரங்களுக்கான காரணிகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று’ எனக் கூறியது என்றும், ஜல்லிக்கட்டுக்குப் பின்புலத் தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் அதிகார அரசியல் இருக்கிறது என்றும், இது தொடர்ச்சியாக தலித் மக்களின் மீது வன் கொடுமைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக் கிறது என்றும் குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த ஜல்லிக்கட்டு மீட்புக் குழுவின் உறுப்பினர் இராஜேஷ், 1996இல் ஜாதிக் கலவரம் ஏற்படுவதற்கு...

மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மோடி ஆட்சியின் அனைத்து  செயல் பாடுகளையும் கண்காணித்து வழி நடத்து வதற்கு ஆர்.எஸ்.எஸ். தனித்தனியான குழுக்களை அமைத்துள்ளது. சிக்சா ஸான்ஸ்கிருதி உதன் நியாஸ் (ssun) – கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான அறக்கட்டளை – ஆர்.எஸ்.எஸ்.இன் கிளை அமைப்பு. இந்தியா வின் தற்போதைய கல்விக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரான தயானந்த் பத்ரா என்பவரால் நிறுவப்பட்டது. பாடத் திட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை காவி மயமாக்குவதே இதன் வேலை. இதன் உறுப்பினர்கள் குழு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து புதிய கல்விக் கொள்கையில் இந்து தேசியத்தை புகுத்துவது தொடர்பான கருத்துகளை முன் வைத்தது. இவர்கள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளையும் சுட்டிக் காட்டி யுள்ளார்களாம். அதனை புதிய பாடத்...

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

17.1.1968 அன்று கரூரில் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி. இந்த பொங்கல் விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள். அதேபோல நாமும் அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற நாள். மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு – அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு – சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ – இதெல்லாம், நாம் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம். நேற்று (16.1.968இல்) இந்த நேரத்துக்கு, நான் சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர், அவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார், போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலேயே நடத்தினாரு. இம்மாதிரி இருநூறு பேருக்குச் சீலை வேட்டி தந்தார். ஒரு புலவர் அம்மையார் காமாட்சி...

மயிலை கழகத் தோழர் மனோகரன் தந்தை மணி முடிவெய்தினார் : பெண்களே சடலத்தைச் சுமந்து சென்றனர்

மயிலை கழகத் தோழர் மனோகரன் தந்தை மணி முடிவெய்தினார் : பெண்களே சடலத்தைச் சுமந்து சென்றனர்

மயிலாப்பூர் பகுதி கழக அமைப்பாளர் மனோகர் தந்தை மணி (60) உடல்நலக் குறைவால் ஜன.2ஆம் தேதி முடிவெய்தினார். இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்கள் பங்கேற்றனர். சடலத்தைப் பெண்களே சுமந்து சென்றனர். எவ்வித சடங்குகளுமின்றி உடல் எரியூட்டப்பட்டது.   பெரியார் முழக்கம் 19012017 இதழ்

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக  நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட முடிவெடுத்திருக்கும் நிலையில் ஒரு  வேண்டுகோளை திராவிடர் விடுதலைக் கழகம் அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அவர்களுக்கும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் முன் வைக்க விரும்புகிறது. தமிழ்நாட்டில் நீண்டகால சிறைவாசிகளையும் இராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாழும் 7 தமிழர்களையும் மாநில அரசுக்கு உரிய உரிமையைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதை செய்தால் அது புதிய ஆட்சிக்கு பெருமை சேர்ப்பதோடு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக்கும் சரியான நினைவுப் பரிசாக வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏற்கெனவே அண்ணா நூற்றாண்டின்போதும் கலைஞர் சட்டமன்றப் பணியின் 50ஆம் ஆண்டு நிறைவை யொட்டியும் ‘சுதந்திரம்’ பெற்று 25ஆம் ஆண்டு நிறைவுக்காகவும் தமிழகத்தில் இதேபோல் சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் முழக்கம் 19012017 இதழ்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு!

அடித்தட்டு மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவராக திகழ்ந்தவர், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்ட அவரது ஆட்சிக் காலத்தில் சாதனைகளும் உண்டு; கொள்கைத் தடுமாற்றங்களும் உண்டு. பெரியார் நூற்றாண்டு விழா, அவரது ஆட்சிக் காலத்தில்தான் – அரசு விழாவாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசு அங்கீகரித்தது. பெரியார் பொன் மொழிகளை நூலாக வெளியிட்டு பரப்பியதோடு, தமிழகம் முழுதும் முக்கிய நகரங்களில் பெரியார் நினைவாக ‘பகுத்தறிவுச் சுடர்’ நிறுவப் பட்டது. பெரியார் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும் கலை நிகழ்வுகள் பல நகரங்களில் நடத்தப்பட்டன. வீதிகளில் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியதும் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மகத்தான சாதனை. ஆனால், இடஒதுக்கீடு குறித்த  தெளிவான புரிதல் அவருக்கு இல்லாமல் போனதால் பார்ப்பனர்கள் எம்.ஜி.ஆரிடம் தங்களுக் கிருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி, பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயிக்க பொருளாதார...

பெரியார் தொண்டர் கோபி தோழர் நாகப்பன் மறைவு

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நமது கழக தோழர் மணிமொழி அவர்களின் தந்தையும், நம் கழகத்தோழர் நிவாஸ் அவர்களின் மாமனாரும் ஆன தோழர் நாகப்பன் அவர்கள் கடந்த 12.01.2017 அன்று உடல்நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்வு உறவினர்களின் பெரும் ஒத்துழைப்புடோடு எந்த  விதமான சடங்குகள் இல்லாமல் கழக மகளிர் முன் நின்று உடல் அடக்கம் நிகழ்வினை செய்தனர்.வீட்டில் இருந்து உடல் அடக்கம் செய்யும் சுடுகாடு வரைக்கும் பெண்களே சுமந்து சென்று உடல்அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்திற்கு பின் கருப்பு, கருமாதிஉள்ளிட்ட எந்த நிகழ்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. தோழரின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் கழக தலைவர் கொளத்தூர் மணி, மாநில அமைப்பு செயலாளர் இரத்தினசாமி,மாநில வெளீயீட்டு செயலாளர் இராம.இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, தபெதிக ஈரோடு மாவட்ட தலைவர் குணசேகரன், திராவிடர்...

அந்நியர் பிரதமர்

அந்நியர் பிரதமர்

நம் நாட்டு ஆட்சியில் இன்று பிரதம மந்திரி அந்நியர். அதாவது, அவர் நம் இனத்தவரல்லர்; நம் வகுப்பினரல்லர்; நம்மைச் சரிசமமாய் சமுதாயத்தில் கருதுபவரல்லர்; நம் மக்களைவிட எந்தவிதத்திலும் புத்தியில், திறமையில், நேர்மையில் மேம்பட்டவருமல்லர். அப்படிப்பட்ட ஒருவர் இன்று ஆட்சிமன்றத்தில் உங்களுக்குப் பிரதமராய் இருக்கக் காரணம் என்ன? திராவிடரின் மான உணர்ச்சியற்றதனம் என்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்? – பெரியார், திருவல்லிக்கேணி கடற்கரையில் 30.6.1946 அன்று. தமிழ்நாடு தமிழருக்கே

தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்

தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்

பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளை பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை நாஸ்திகன், தேசத்துரோகி, மக்கள் துரோகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம். உதைக்கும் காலுக்கும் முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட...

சுதந்திர இந்தியாவின் கொடி

சுதந்திர இந்தியாவின் கொடி

‘சுதந்திர இந்தியாவின் கொடியை அவமதிக்காதீர்கள். அவமதித்தால் சும்மா விடேன்’ என்று கூக்குரலிடுகிறாயே! உனக்குத்தான் பதவி கிடைத்தது; பணம் கிடைக்கிறது; கொள்ளையடிக்க வசதியும் கிடைக்கிறது. கூப்பிட்ட நேரத்திற்குக் குரல் கொடுக்க டவாலி பியூன் உனக்குக் கிடைக்கிறான். அதனால் இந்தக் கொடிக்குத் தலை வணங்குகிறாய்; அதற்கு அர்த்தமும் இருக்கிறது. அந்த வசதிகள் எனக்குத் தேவையில்லை; தேவையிருந்தாலும் அக்கொடிக்கு வணக்கம் செலுத்தாமலே என்னால் அவற்றை அடைய முடிகிறது. அப்படியிருக்க, நான் ஏன் ‘ஹிந்துஸ்தான்’ கொடியை வணங்க வேண்டும்? என்னுடைய சூத்திரப் பட்டத்தைப் போக்குமா அந்தக் கொடி? என்னை ஒரு மார்வாரி சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுமா அந்தக் கொடி? எங்களுக்கு உங்கள் ‘ஹிந்துஸ்தானில்’ இருக்கப் பிரியமில்லை. உங்கள் ஆட்சியில் எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். ஆகவே, எங்களைப் பிரித்துவிட்டு விடுங்கள் என்று கூறுகிறோம். எங்களுடைய பாதுகாப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? பேசாமல் பிரித்து விட்டுவிடுங்கள்” – பெரியார், ஆழியூரில் 10.1.1948ல் சொற்பொழிவு தமிழ்நாடு தமிழருக்கே

பொங்கல் விழா கபாடி போட்டி தூத்துக்குடி 16012017

தூத்துக்குடி மாவட்டமான சூரங்குடி கிராமத்தில் நடந்த தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான “கபாடி” போட்டியில், சூரங்குடி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்ற அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. பரிசுத் தொகையான 8001ஐ அணியின் கேப்டனான தோழர் சதிஷ் பெற்றுக்கொண்டார். வீர விளையாட்டில் பங்கேற்ற தோழர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

பொங்கல் விழா கடலூர் மாவட்டம் கம்மாபுரம் 16012017

கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு 16.01.2017 அன்று பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், மாணவர்கள், அனைவர்களையும், ஊக்குவிக்கும் பொருட்டு ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், கோலப்போட்டி, திருக்குறள் ஒப்பிவித்தல், ஓவியப்போட்டி, கபாடி போட்டி, மித வேக சைக்கிள் போட்டி உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இரவு 9.00 மணியளவில் கடலூர் மாவட்ட செயலாளர் நட.பாரதிதாசன் அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தார் விழா நடைபெற்று இனிதே நடந்து முடிந்தது. ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து திராவிடர் விடுதலை கழக தோழர்களுக்கும் நன்றி

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்த பெருமை மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உண்டு. இதை எவராலும் மறுக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கமே இதை நன்றியுடன் பதிவு செய்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான். சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான். ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும்...

தமிழ்நாடு முழக்கம் – நீதிமன்றத்தில் பெரியார்

தமிழ்நாடு முழக்கம் – நீதிமன்றத்தில் பெரியார்

இந்திய அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்தியதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். – நீதிமன்றத்தில் பெரியாரின் முழக்கம்  

தமிழ்நாடு தமிழருக்கே – தமிழ்நாடு பிரிவினை

தமிழ்நாடு தமிழருக்கே – தமிழ்நாடு பிரிவினை

‘இன்று பிரிவினை கேட்கும் நான் கிழவனாக இருக்கலாம். அதன் காரணமாக பலாத்காரத்தில் நம்பிக்கையற்றவனாக இருக்கலாம். நாளை நம் இளைஞர்களும் இப்படியே இருந்து விட மாட்டார்கள். இரத்த வெள்ளத்தின் மத்தியில் பிரிவினை கேட்பார்கள்; கத்தி முனையில் பிரிவினை கேட்பார்கள். ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் நடக்க விடாமல் நம் நாட்டை ஒழுங்காக நமக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.’ 27111950 சென்னை சைதாப்பேட்டையில் பெரியார்

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், வினியோகிக்கப் பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. உடனே அய்.டி.ஆர்.எப்., இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது. தங்களுக்கும் எந்த ‘இசத்துக்கும்’, தத்துவத்துக்கும், கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அந்த மறுப்பு அறிக்கை கூறியது. ஆனால், ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலித்துப் பார்க்கும்போது, அய்.டி.டி.ஆர்.எப்.க்கும், சங்பரிவார்களுக்கும்...

ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெற்று உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத போதும், அதை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் என்பது மிகக்குறைவே. தமிழக அரசியல் கட்சிகள், சில தேவர் சாதி அமைப்புகளைத் தவிர பெரிய அளவில் ஆதரவு இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு அதுவும் தமிழகம் முழுவதும் எப்படி இது போன்ற திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, இத்தனை ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது மோசடியானதாகவே தெரிகின்றது. குறிப்பாக சென்னையில் போராட்டத்தை Care and Welfere என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இது ஒரு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்புக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. அவர்களது...

ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும்

எங்களது ஊர்ப் பகுதிகளில் ஒரு சொலவடை உண்டு. ‘மாடுமுட்டிப் பய’ என்பார்கள். என்ன என்று பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், “மாடு நம்மை முட்ட வந்தால் புத்தியுள்ளவங்க என்ன பண்ணுவோம்… விலகி நிற்போம். ஆனா இவன் என்ன பண்ணுவான்னா மாட்டுக்குச் சமமா மல்லுக்கு நிப்பான். அந்தளவுக்கு புத்திகெட்ட பய…” அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு. மனித அறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மேம்படாத காலத்தில் மாட்டை அடக்குவது அல்லது அணைத்து, வசப்படுத்துவது வீரமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் மாட்டோடு மல்லுக்கு நிற்க எந்த அவசியமும் இல்லை. மாட்டை வசப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மாட்டிற்கும், நமக்கும் என்ன பொருத்தம்? அதன் உருவ அளவு என்ன? நமது உருவ அளவு என்ன? அதன் கொம்புகள், வலுவான கால்கள் என்ன? நமது உடலமைப்பு என்ன? அதன் பலம் என்ன? நமது பலம் என்ன? அதோடு மோதி நமது பலத்தை நிரூபிக்க...

கழகப் புகார் எதிரொலி: ஜாதிவெறி ஆசாமி கைது

கழகப் புகார் எதிரொலி: ஜாதிவெறி ஆசாமி கைது

4.1.2017 அன்று மாலை 3 மணிக்கு ஜாதி கலவரங்களை தூண்டும் விதமாகவும், கொலையை ஆதரித்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் உடைமைகளை கொளுத்த வேண்டும் என்று பேசியதோடு, தேவர் சமூக இளைஞர்களை மூளை சலவை செய்து  வன்முறையாளர்களாக மாற்ற முயற்சித்த தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையா என்பவரை கைது செய்யகோரியும், இது போன்ற ஜாதி சங்கங்களை தடை செய்யக் கோரியும், மதுரை  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்.மா.பா. மணிகண்டன் தலைமையில்,  மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடன்  புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் கணேஷ் குமார்  புரட்சிப் புலிகள் அமைப்பு தோழர்கள் பீமாராவ், பகலவன், ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர் காமாட்சி பாண்டி உள்ளிட்டோர் சென்றனர். இதைத் தொடர்ந்து தலித் மக்கள் உடைமைகளை அழிக்க வேண்டும்; கொலை செய்ய வேண்டும் என்று வெறியூட்டும் பேச்சுகளை பேசிய முத்தையா...

தலையங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தின் பாராட்டுக்குரிய அறிவுறுத்தல்

தலையங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தின் பாராட்டுக்குரிய அறிவுறுத்தல்

மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜாதி வெறி கொலைகளுக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய தாகும். மதுரை மாவட்டம் மதிச்சியம் காவல் சரகப் பகுதியில் வசிக்கும் சூர்யபிரகாஷ் என்ற இளைஞர், ஜாதி மறுப்பு திருமணம் செய்து திருமணத்தையும் பதிவு செய்துள்ளார். குடும்பத்துடன் வாழத் தொடங்கிய அவருக்கு பெண்ணின் சகோதரரும் தந்தையும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். மதுரை நகர காவல் நிலையமும் பாதுகாப்பு தர முன் வரவில்லை. உயிருக்கு உரிய பாதுகாப்பு தர, மதுரை மாநகர காவல் பிரிவுக்கு ஆணையிட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.  மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி எஸ். விமலா, கடுமையான மொழிகளில் காவல்துறையை எச்சரித்துள்ளது. ஜாதி எதிர்ப் பாளர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ‘உச்சநீதிமன்றம்’ லதாசிங் வழக்கில் வழங்கிய அறிவுறுத்தலை நீதிபதி காவல்துறையிடம் எடுத்துக் காட்டினார். “ஜாதி மறுப்பு மத மறுப்பு திருமணங்களை தேச நலன் கண்ணோட்டத்தில்...

‘யோகா’வை முன்னிறுத்தி மதப் பிரச்சாரமா?

‘யோகா’வை முன்னிறுத்தி மதப் பிரச்சாரமா?

‘யோகா’வை சர்வதேச அளவில் அங்கீகரிக்கச் செய்து விட்டதில் மோடிக்கு அப்படி ஒரு பெருமை. ஜூன் 21 ‘யோகா நாள்’! மோடி அமைச்சர்கள் அத்தனை பேரும் ஆங்காங்கே ‘யோகா’ செய்யும் நிர்ப்பந்தம். ‘யோகா’ என்பது மூச்சுக் கலை பயிற்சி என்கிறார்கள். இதை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. பிரச்சினை எங்கே வருகிறது என்றால், இதை இந்து மதத்தோடு முடிச்சுப் போடும் போதுதான். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் இந்திய தூதரகங்கள், சர்வதேச நாளில் நடத்தும் ‘யோகா’ நிகழ்ச்சிகளுக்கு  ‘சங் பரிவார்’ முன்னணி அமைப்புகளுடன் இணைந்து செயல் படுகின்றன. இந்துத்துவ அரசியலுக்கு யோகாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் இவர்களின் உள்நோக்கம் மிகவும் அற்பமானது. மோடியின் யோகா குரு எச்.ஆர். நாகேந்திரா. இவர் பெங்களூருவிலுள்ள ‘விவேகானந்தா யோகா அனுசந்தான் சமந்தானா’ என்ற பல்கலைக்கழகத்தின் வேந்தராக வும் இருக்கிறார். அரசு ஆலோ சனைப்படி இவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ‘யோகா’வை பாடத் திட்டத்தில்...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

மனு நீதி : ஒரு குலத்துக்கொரு நீதி- பெரியார், விலை-ரூ.10. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?-விடுதலை இராசேந்திரன் விலை-ரூ.30. இந்து மதப் பண்டிகைகள்-பெரியார். விலை-ரூ.30. கடவுளர் கதைகள்- சாமி. விலை-ரூ.20. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? விலை-ரூ.20. உயர் எண்ணங்கள்-பெரியார். விலை-ரூ.30. பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி. விலை-ரூ.50. இவர்தான் பெரியார்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.20. திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.30 ஈழம் முதல் அணுஉலை வரை-கொளத்தூர் மணி. விலை-ரூ.30 பண்பாடு-சமூகம்-அரசியலில் ‘மனு’வின் ஆதிக்கம்- விடுதலை இராசேந்திரன், விலை-ரூ.10 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜாதி ஒழிப்பு மலர். விலை-ரூ.100 பேய், பில்லி-சூன்யம், பொய். விலை – ரூ.30. ‘சமஸ்கிருத’ படையெடுப்பு. விலை – ரூ.30. விஞ்ஞானிகளை அழித்த மதவெறி. விலை – ரூ.30. வளர்ந்தது விஞ்ஞானம்; வீழ்ந்தன மூடநம்பிக்கைகள். செங்குட்டுவன்-விலை-ரூ.20. வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்? அப்துல் சமது உரை- விலை-ரூ.10. தொடர்புக்கு: தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம்...

‘வரலாற்றில் வரம்பைக் கடந்த தலைவர்’

விஞ்ஞானி – கல்வியாளர் – இலக்கியவாதி என்று பன்முகத் திறமையோடு வாழ்ந்த முனைவர் வி.சி. குழந்தைசாமி, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி 87ஆம் அகவையில் முடிவெய் தினார். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இந்திரா தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக திறம்பட பணியாற்றியவர். சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்ற அவர் கோவை மாவட்ட கிராமம் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு பெரியாரிஸ்ட். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த இன உணர்வாளர். பெரியார் மறைந்த 1973ஆம் ஆண்டில் சிந்தனையாளர் பேரவை, சென்னை மத்திய நூலகக் கட்டிடத்தில் நடத்திய பெரியார் இரங்கல் கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரையை இங்கு வெளியிடுகிறோம். இந்த உரை நிகழ்த்தியக் காலத்தில் அவர் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர். “தென்னகத்தின் ஒரு தலைவர்; ஒரு நூற்றாண்டு, திராவிடத்தின் வளர்ச்சிக்கே, தன்னைத் தந்த தன்னிகரில்லாத் தமிழர்;...

‘பசுவதைத் தடை’ச் சட்டத்தின் அரசியல் பின்னணி

பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி: ட           ஆக. 21, 2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதா அறிமுகம் செய்ய முயன்றார். கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை. ட           1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே இந்து ராஜ்யம் குறித்து கனவு காண்பதுகூடத்  தேசத் துரோகம் என்றே நான் கூறுவேன்” என்றார் காந்தி. ட           சங்பரிவாரங்கள், ‘கோமாதா பக்தி’யை முஸ்லிம், கிறிஸ்தவ வெறுப்பு அரசியலுக்கே...

தலையங்கம் முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!

தலையங்கம் முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!

7 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு மதச்சார்பின்மை குறித்து அளித்துள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 1990ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அபிராம் சிங், ‘இந்து ராஜ்யம்’ அமைப்பேன் என்று கூறி வாக்கு கேட்டார். மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பது தேர்தல் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு (பிரிவு 123(3)) எதிரானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தேர்தல் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறியது. 1995இல் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு வந்தபோது வழக்கை விசாரித்த ஜே.எஸ். வர்மா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “இந்துமதம் அல்லது இந்துத்துவா என்பது இந்திய உபகண்டத்தில் மக்களின் வாழ்க்கை நெறி, அதை மதமாகக் கருத முடியாது” என்று கூறிவிட்டது. சங்பரிவாரங்கள் ஆனந்தக் கூத்தாடின. அன்றிலிருந்து இன்றுவரை “இந்து என்பது வாழ்க்கை நெறி” என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என்று வாதிட்டு வருகிறார்கள். இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கம் தரவேண்டும் என்று சில...

பகுத்தறிவு ‘அம்மா’க்கள் வேண்டும்!

பகுத்தறிவு ‘அம்மா’க்கள் வேண்டும்!

திரைப்பட இயக்குனர் பா. இரஞ்சித், ஜன.11, ‘ஆனந்த விகடனில்’ பெண் விடுதலை குறித்து எழுதிய கட்டுரை யிலிருந்து சில பகுதிகள். நாம் சாதி சமூகமாக இருப்பதில் ஆண்களைப் போலவே பெண் களுக்கான பங்கும் அதிகம். ஆண்கள் சொல்கிற எதையுமே தட்டிக் கழிக்கிற பெண்கள், சாதி, மதம், அடிப்படை யிலான நம்பிக்கைகளை, உணர்வுகளை, சடங்குகளை மட்டும் இன்னமும் தாங்கிப் பிடிக்கிறவர்களாக ஏற்றுக் கொள்கிறவர்களாக இருக் கிறார்கள். அப்பா கண்டிப்பான முறையில் கற்றுத் தருகிற சாதியைவிட, நிதானமாக சாதிக்குக் கொடி பிடிக்கிற அம்மா ஆபத்தானவராக இருக்கிறார். சாதி என்பது தவறானது என்றே தெரிந்தாலும், அதைத் தவறு என்று தன் பிள்ளைகளுக்கு அம்மா உணர்த் தாமல் இருப்பது ஆபத்தானது தான். பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத, பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க இயலும். * * * பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வரை பெண் குறித்த என்னுடைய நம்பிக்கைகள், பார்வைகள் என அனைத்தும் கல்வியும்...

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க...

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி காளியப்பகவுண்டன் புதூரில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட தோழர் காசு.நாகராசன் மற்றும் தோழர்களையும் மருத்துவமனையில் சந்தித்து விட்டு பின்னர் ஊரில் சேதமடைந்த பகுதிகளையும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்… பேட்டி பார்க்க இங்கே சொடுக்கவும் பேட்டியில் காவல்துறை இரண்டு நாள் அவகாசம் அளிக்க கேட்டுள்ளனர் அதற்குள் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாடு தழுவிய அளவில் பெரிய போராட்டம் காசு.நாகராசன் க்கு ஆதரவாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.. பின்பு ஊரில் கூடியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் ஊரில் பொதுகூட்டமாகவே நிகழ்ச்சி நடந்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம், தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமுமுக, இந்திய ஜவ்ஹீத் ஜமாத் கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மக்கள் விடுதலை முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, அம்பேத்கர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு மாணவர் மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

17ம் ஆண்டு … தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா சென்னை 12012017

தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு … திருவல்லிக்கேணி பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து நடத்தும் … 17ம் ஆண்டு … தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா … வாருங்கள் தமிழர்களாய் இணைந்து மனிதர்களாய் கொண்டாடி மகிழ்வோம் … நாள் : 12 : 01 : 2017 இடம் : வி . எம் . தெரு, இராயப்பேட்டை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

தமிழன் விழா பொங்கல்

தமிழன் விழா பொங்கல்

பூணூல் “பூணூல் போடுவதற்குச் சர்க்காரில் (அரசில்) லீவு (விடுமுறை) விடுகிறானே! பார்ப்பான் நாட்டில் இருப்பது 100-க்கு 3- பேர். அவர்களின் பூணூல் மாட்டுவது அநேகமாக ஒருவர் அல்லது இருவர். அந்த இனப்பெண்கள் எல்லாரையும் கழித்துப் பார்த்தால் இதற்காக எதுக்கு அத்தனை பேர்களுக்கும் விடுமுறை. இது அக்கிரமம் அல்லவா? அரசாங்கம் இப்படி இருக்கலாமா? என்று எங்களைத் தவிர யாரும் கேட்பதில்லையே? ஆனால் இதைக் கேட்காதவர்கள் கேட்க நடுங்குகிறவன் எல்லாரும் மக்களிடத்திலே வந்து அளக்கிறான்கள். சட்டசபையிலே பிளக்கிறேன் என்கிறார்கள்! நாங்கள் மந்திரிகளுடைய மூக்கிலே, நாக்கிலே விரலை விட்டு ஆட்டுகிறோம் என்கிறார்கள்! இது ஏன் என்று கேட்க ஒரு பயல் முன்வருவது கிடையாதே? ஓட்டு கேட்க மாத்திரம் வருவார்கள்.” – மஞ்சை நாயக்கன் பட்டியில் 14-10-1958 அன்று பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. விடுதலை 19.10.1958   மத விடுமுறை “மற்றபடி சர்க்காரார் விடுமுறை நாட்களில் “மத சம்பந்தமான லீவு நாட்கள் நீக்கப்பட வேண்டும்” என்று மற்றொரு தீர்மானம்...

அரசு மருத்துவமனையில் சட்ட விரோதமாக கோயில் கட்டுவதை தடுக்க மனு கம்மாபுரம் 09012017

அரசு மருத்துவமனையில் சட்ட விரோதமாக கோயில் கட்டுவதை தடுக்க மனு கம்மாபுரம் 09012017

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் கிராமத்தில் அரசு மருத்துவனை வளாகத்தில், இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சட்ட விரோதமாக, அனைத்து மதத்தினரும் வந்து, போகும், இடத்தில் ஒரு மத வழிப்பாட்டு தலமான விநாயகர் கோயில் கட்டுவது அரசாணைக்கு எதிரானதும், மதசார்பற்ற நாடு இந்தியா என்பதும் கேள்விகுறியாகும் செயலாகும், இதை எதிர்த்து கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தோழர் பாரதிதாசன் தலைமையில் தோழர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார்கள்