மாணவர் எழுச்சிக்கு அரணாய் சென்னை திவிக
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அரணாய், அமர்க்களமாய் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ….
எதிரி பீட்டா ( PETA) அல்ல … அந்த போர்வைக்கு பின்னே ஒளிந்திருக்கும் இந்துத்துவாவே ( RSS) என்பதை முழக்கங்கள் மூலமாகவும், பதாகைகள் மூலமாகவும், வீதி நாடகங்கள் மூலமாகவும் மாணவர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். மாணவர்களும் தெளிவாக பொது எதிரியை கண்டுக்கொண்டு பாஜக மோடி அரசையும், ( RSS) ஆர் எஸ் எஸ் யையும் கண்டித்து முழக்கங்களால் விண்ணை அதிர வைத்தனர்.
சென்னையிலுள்ள தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக சென்னை மாவட்டசெயலாளர் தோழர் இரா. உமாபதி தலைமயில் திவிக மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் பிரகாசு முன்னிலையில் போராட்டத்தில் கலந்துக் கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர் .
தோழர் பிரபாகரன் பிணமாக நடித்திட , திவிக தோழர்கள் உடலுரிமை இயக்க தோழர் இரன்யாவின் தலைமையில் ஒப்பாரி வடிவில் தமிழகத்தின் நசுக்கப்படும் உரிமைகளை உணர்வுகளை முழக்கமாக மாணவர்களிடம் நடித்து காட்டி அவர்களை உற்சாகப் படுத்தியது, அங்கு பார்வையாளர்களாக இருந்த வெகுஜன மக்களை பெரிதும் கவர்ந்து சிந்திக்க தூண்டும் விதமாய் அமைந்தது.