தபோல்கர் மசோதா சட்டமானது
நரபலி, மாயமந்திரம், பேய், பில்லி சூன்யம் போன்ற மூடநம்பிக்கைகளைத் தடை செய்யவும், அதில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் மகாராஷ்டிராவில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு தபோல்கர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்காக அவர் தயாரித்து அனுப்பிய மசோதா, தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டு வந்தது. பா.ஜ.க., சிவசேனா போன்ற அமைப்புகள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்து வந்தன. இந்த மசோதாவை தாக்கல் செய்யாமல் காலம் கடத்தும் மராட்டிய முதல்வர் பிரித்திவிராஜ் சவானை இரண்டு வாரங்கள் முன் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தபோல்கர் கடுமையாக விமர்சித்தார். அவர் உருவாக்கித் தந்த மசோதாவை அவரது வீரமரணத்தின் நினைவாக மராட்டிய அரசு இப்போது சட்டமாக்கியுள்ளது. தபோல்கர் உருவாக்கிய மசேதாவை சட்டாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அழுத்தம் வந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21 ஆம் நாள் மராட்டிய அமைச்சரவை கூடி, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. அவசர சட்டத்தின்...
