இப்படிக்கு ஃபாரூக் – தோழர் கண்மணி கவிதை

எரிபொருளு இல்லாம
எங்கேயோ தவிக்கறன்னு,
என்வீட்டப் பாக்காம,
ஒன்னப்பாக்க வந்தேனே.

பகுத்தறிவு அப்பாவோட
பாசமாக வளர்ந்தபுள்ள,
பாதியில தவிச்சுநிக்க
என்னநீயும் கொன்னுபுட்ட.

மதமெல்லாம் பொய்யுன்னு,
மனிதம் மட்டும் மெய்யுன்னு,
பகுத்தறிவு ஊட்டத்தானே
பெரியாரின் பிள்ளையாக
பூமியிலே வாழ்ந்தேனே.

என் கழுத்த அறுக்கையிலே
எங்கே என் அப்பான்னு,
ஏங்கியழுமே புள்ளைங்கன்னு,
ஏன்டா நீயும் மறந்துபுட்ட.

கடவுள்தானே இல்லையின்ன,
காதல் உண்டு எப்போதும்.
காவியமாய் வாழ்வதற்குள்
காதல்செய்த துணைவியாளை.,
தவிக்கவிட்டு போறேனே.

கடவுளிருக்குனு சொன்ன நீ,
கருணைகூட இல்லாம.,
வயிற்றில்குத்தி துளையிட்டு
கழுத்தறுத்து உயிரெடுத்த
எந்தன் உயிர்நண்பனே!!
இப்போதும் சொல்கிறேனே.
மாண்டுபோய்விட்டாலும்,
மண்ணாகிச் சொல்கிறேனே.
கடவுள் எங்கும் இல்லையே!

மதத்தாலே நீயும்தா மிருகமாகிப்போனாயே,
கடவுள்தா எல்லான்னு கருணையற்று கொன்னாயே.
உனக்கும்இனி தோன்றுமே,
உந்தன் சிறை வாழ்விலே,
கடவுள் எங்கும் இல்லையே.

சாவைக்கண்டு அஞ்சாமல்,
சாகநானும் தயாரானேன்.
தோள் கொடுக்க கூட்டம் உண்டு.
தோழமை என்னும் உறவுண்டு.

பகுத்தறிவு பால்குடுக்க,
எம்புள்ளைக்கொரு பள்ளியுண்டு.
தி.வி.க என்னுமொரு பள்ளியும்தான் இங்குண்டு.

தோழர்களே! தோழர்களே!
மதத்தைநானும் எதிர்த்துநிக்க,
விதையாகப் புதைஞ்சுபுட்ட.
தோழர்களே! தோழர்களே!
வாழ்த்துசொல்லி அனுப்புங்களே!!!!!

இப்படிக்கு பாரூக்

ஒலி வடிவில் கேட்க

You may also like...