அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை
ஆத்தூரில் அம்பேத்கர் 126 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் பெரியார்-அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம் புதியதாக தொடங்கப் பட்டது. படிப்பகத்தை (வாசகர் வட்டம்) பெரியாரின் தொண்டர், பேராசிரி யர் முருகேசன், பேராசிரியர் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாள ராகக் கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தனர். அண்ணலின் பிறந்த நாளை சிறப்பிக்கும்படி அனைத்து தோழர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது.
சென்னையில் : சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் விழா காலை 8 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து வாகனப் பேரணி யாக மயிலாப்பூர் அம்பேத்கர் சிலைக்கும் இராயப் பேட்டை பத்ரி நாரயாணன் நூலகத் திலுள்ள அம்பேத்கர் உருவ படத்திற்கும் மாலை அணிவிக்கப் பட்டது. மயிலாப்பூர் கழக படிப்பகத் தில் துப்புரவுத் தொழிலாளர் கேக் வெட்டி, அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடினர். இவ்விழாவில் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 20042017 இதழ்