பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000 கோடி
பொதுத் துறை வங்கிகளில் அதிகாரம் செலுத்தும் பார்ப்பன அதிகார வர்க்கம் ரூ. 70,000 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய். இது தவிர, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனைப் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகளில் அதிகரித்த வாராக்கடன் ரூ. 10.25 லட்சம் கோடி. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடிகள் வங்கிகளில் அரங்கேறியுள்ளன. மோசடிகளின் எண்ணிக்கை மட்டுமே 6,500. இதில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி கூட்டணி நிகழ்த்திய மோசடி ரூ. 12 ஆயிரம் கோடி. பெரிய தொகை சம்பந்தப்பட்ட மோசடிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலையச் செய்யும் மோசடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக் குறிதான் என எச்சரிக்கிறது ஊழல் கண்காணிப்பு ஆணையம்...
