ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 28022019 இதழ்

You may also like...