சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!
மாநாட்டின் இறுதி நிகழ்வாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சனாதன எதிர்ப்பு உறுதி மொழியை வாசிக்க, தோழர்கள் உறுதி எடுத்தனர். உறுதி மொழி விவரம்: இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில் அந்த கொள்கை உணர்வோடும் இலட்சிய துடிப்போடும் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிற இளைஞர் களாகிய நாங்கள் கீழ்கண்ட உறுதியினை ஏற்கிறோம். ஜாதியற்ற தமிழர்களாக வாழ்ந்த நமது சமூகத்தை ஆரியம் ஊடுருவி வர்ணாசிரம சனாதனத்தால் வீழ்த்தியது. 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம், பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து உருவான திராவிடர் கழகம் தொடர்ந்து வந்த திராவிட ஆட்சிகள் ஆகியவற்றின் உழைப்பால் திராவிடர் என்ற பெருமையோடு நாம் தலை நிமிர்ந்தோம். பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நம்மை இழிமக்களாக்கிய ஆரிய சனாதனத்திற்கு எதிரானது எங்கள் திராவிடம். ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான சமத்துவம் சம நீதியே எங்கள் திராவிடம். ஆனால் சனாதன ஒன்றிய ஆட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமத்துவத்தை...
