புத்தகங்கள் வெளியீடு! புதிய தலைப்புகள்! 42 புத்தகங்கள்!

ரூ.4000/- மதிப்புள்ள நூல்கள் ரூ.3000/-க்கு சலுகை விலையில்

சேலத்தில் ஏப்.29.30 ல் நடைபெறும் “இது தமிழ்நாடு,இளைய தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டை முன்னிட்டு நிமிர்வோம் வெளியீட்டில் புத்தகங்கள் வெளியிடப் படுகின்றன.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் எழுதி 2022 டிசம்பர் மாதம் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 தலைப்புகளும்,

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி, உரைகள் ஆகியவை

3 புத்தகங்களாகவும்,

திமுக துணைப் பொதுச்செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ இராசா கருத்தரங்க உரை நூல் வடிவில் “எங்களை தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்” எனும் நூலும் ஆகியவற்றோடு

“நான் பார்ப்பனர்களுக்கு அல்ல, பார்ப்பனீயத்துக்கே எதிரானவன்” (எனும் அம்பேத்கரின்  மேற்கோள் குறித்து) வெளியான ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம். எட்வின் பிரபாகரன் மொழிப்

பெயர்ப்பில்.

இவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 42 புத்தகங்களாய் வெளியிடப்பட உள்ளது.இவற்றின் மொத்த பக்கங்கள் 4211 இதன் விலை ரூ. 4000/-

மாநாட்டு திடலில் அனைத்து புத்தகங்களும் ரூபாய் 3000/-த்திற்கு சலுகை விலையில் கிடைக்கும்.

புத்தகங்களின் பட்டியல் –

கொளத்தூ மணி புத்தகங்கள்  :

  1. கொளத்தூர் மணி நேர்காணல்கள்
  2. கருஞ்சட்டைக் கலைஞர்
  3. 1929 செங்கல்பட்டு மாநாடு

விடுதலை இராசேந்திரன் எழுதியுள்ள புத்தகங்கள் :

  1. உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி
  2. அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு
  3. ஆட்சி மாற்றமல்ல; அடையாள மீட்புப் போர்!
  4. இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
  5. இராமன் எத்தனை இராமனடி
  6. இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? நூல் அறிமுகம்
  7. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
  8. கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்
  9. கலைஞரின் ஆட்சி நிர்வாகத் திறன்
  10. காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
  11. கீதையின் வஞ்சகப் பின்னணி
  12. சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் அய்.அய்.டி
  13. தமிழை இழிக்கும் வேத மரபு
  14. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
  15. பாசிசத்தை வீழ்த்த திராவிடத்தைப் பேணுவோம்
  16. புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி
  17. புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
  18. பெரியார் கொள்கைத் ‘தூதர்கள்’
  19. பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் – போராட்ட வரலாறு களின் ஓர் தொகுப்பு
  20. எரியட்டும் மனுசாஸ்திரம்
  21. வீர சாவர்க்கர் – புதைக்கப்பட்ட உண்மைகள்.
  22. யார் தேச விரோதிகள் ?
  23. பெரியாரியத்தின் வெற்றி – தலையங்க தொகுப்பு 1
  24. பகுத்தறிவும் வாழ்வுரிமையும் – தலையங்க தொகுப்பு 2
  25. ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
  26. தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை தலையங்க

தொகுப்பு 4

  1. ஆன்மீகத்துக்குள் பதுங்கும் ஆரியம் – தலையங்க தொகுப்பு 5
  2. சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது
  3. பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்
  4. திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?
  5. திராவிடர் விடுதலைக் கழகத்தின் 22 ஆண்டுகளின் பணிகள்
  6. ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம்
  7. குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
  8. கோயில் உரிமை யாருக்கு?
  9. சங் பரிவாரின் சதி வரலாறு
  10. மாநில உரிமைகள் – பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மோடி ஆட்சி வரை
  11. அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்

ஆ இராசா கருத்தரங்க உரை :

  1. எங்களை தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்.

எட்வின் பிரபாகரன் – மொழிப்பெயர்ப்பு செய்துள்ள நூல் :

  1. நான் பார்ப்பனர்களுக்கு அல்ல, பார்ப்பனீயத்துக்கே எதிரானவன் (எனும் அம்பேத்கரின் மேற்கோள் குறித்து)

–  திராவிடர் விடுதலைக் கழகம்.

பெரியார் முழக்கம் 27042023 இதழ்

You may also like...