கழகத் தோழர் திலீபன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர்திலீபன் (பழனி) மீது கொடும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் பாணாவரம் காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் தமிழகம் கட்சி, ஊர் பொது மக்கள் தோழைமை இயக்கத் தோழர்கள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டனர். நிகழ்வில் தலைமை குழு உறுப்பினர் அய்யனார், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மக்கள் தமிழகம் கட்சி விஸ்வநாதன், மக்கள் குடியரசு இயக்கம் ஜான் மண்டேலா, திவிக பேரணாம்பட்டு நகர செயலாளர் தோழர்கள் ச.பார்த்திபன், மற்றும் மகிழவன், இரண்யா, அன்பழகன், ராஜேஷ், மணி, அருண், சூரியா, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 20042023 இதழ்

 

 

You may also like...