சென்னையில் மாநாடு விளக்கக் கூட்டம்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும்”இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு!” விளக்கக் கூட்டம் ஏப்ரல் 13, மாலை 6 மணியளவில் அயனாவரம், ஜாயின்ட் ஆபிஸ் அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சேத்துப்பட்டு இராசேந்திரன் தலைமை வகித்தார். வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்தார். நாத்திகனின் மந்திரமா? தந்திரமா ? நிகழ்ச்சி கூட்டத்தின் தொடக்கமாக நடைபெற்றது.
தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, சென்னை கழகச் செயலாளர் இரா.உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன் நிறைவுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 20042023 இதழ்