கருத்துரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆட்சியின் அச்சுறுத்தல் சட்டம் எட்வின் பிரபாகரன்
பாஜகவுக்கு எதிரான செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, புதிய சட்டத்திருத்தம் (IT Act 2021 – 3[1][b][v]) ஒன்றை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. பத்திரிக்கைத் தகவல் பணியகமோ (PIB), ஒன்றிய அரசால் அங்கீகரிக் கப்பட்ட வேறொரு நிறுவனமோ, ஒரு செய்தியை போலி செய்தி என்று அறிவித்து விட்டால், அந்தச் செய்தி எந்த ஒரு இணைய ஊடகத்திலிருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண் டும் என்பதே அந்த சட்டத்திருத்தம். இதனை மின்ன ணுவியல் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் கொண்டு வரவுள்ளது. எந்த ஒரு ஒழுங்கு முறை அதிகாரமும் இல்லாத PIBயிடம், உண்மை சரிபார்ப்பு & கட்டுப்பாட்டு பொறுப்பை ஒன்றிய அரசு வழங்க விருக்கும் செயல், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அரசின் கொள்கைகள், திட்டங் கள், முன்னெடுப்புகள் & சாதனை கள் தொடர்பான செய்திகளை, அச்சு ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்கும் வழங்குவது தான், பத்திரிக்கைத் தகவல் பணியகத்தின் வேலையாக இருந்து வருகிறது. அரசின் குரலாக ஒலிக்கும் இப்பணியகத்தால், எப்படி ஒரு பக்கச் சார்பற்ற அமைப்பாகச் செயல்பட முடியும்? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே பிபிசி ஆவணப்படத்தை எவ்வாறு முறையற்ற வகையில் ஒன்றிய அரசு தடை செய்தது என்பதை நாம் பார்த்தோம். இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டால், அது ஊடகத் துறையில் சங் பரிவாரங் களின் ஏகபோகத்தில் தான் போய் முடியும்.
ஏற்கனவே “சர்வதேச உண்மை சரிபார்ப்பு வலைப்பின்னல்” உள்ளிட்ட உண்மை சரிபார்ப்பு மாதிரிகள் இயங்கி வரும் நிலையில், அரசின் ஊதுகுழலாக விளங்கும் PIBயின் கட்டுப்பாட் டில், ஊடகங்களை கொண்டு வர முயற்சிப்பது உள்நோக்கம் கொண் டதாகும். இது குறித்து மக்களின் கருத்தும் கேட்கப்படும் என்று, கடந்த வெள்ளியன்று நாடாளு மன்றத்தில் அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் சங்கம், இந்திய செய்தித் தாள் சமூகம், செய்தி ஒளிபரப்பாளர்கள் & எண்ம (னபைவையட) சங்கம் ஆகிய சங்கங்களின் கடும் எதிர்ப்பினால், இச்சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான காலக் கெடுவை அமைச்சகம் நீட்டித் துள்ளது.
PIB தவிர்த்து இன்னும் சில நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசு உண்மை சரிபார்ப்பு அனுமதியை வழங்கவுள்ளது. சனாதனக் கொள்கையுடையவர்கள் நடத்தும் நிறுவனங்களை பாஜக தேர்ந் தெடுக்க வாய்ப்புகள் அதிகம். இந் நிறுவனங்கள் நியாயமாக நடந்து கொள்ளும் என்று எப்படி நம்புவது? இது பற்றி Alt News உண்மை-சரிபார்ப்பு இணைய தளத்தின் நிறுவனர் Pratik Sinha கூறும் போது, “பாஜகவுக்கு எதிரான செய்திகள் ஏதேனும் வந்தால் அதன் உண்மைத் தன்மையை வேகவேக மாகச் சரி பார்க்கும் PIB, வேறு பல வதந்திகளைச் சரி பார்க்கக் கடந்த காலங்களில் தவறியுள்ளதை” சுட்டிக் காட்டி உள்ளார்.
அரசின் இந்த புதிய தணிக்கை நடவடிக்கை, இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுவதாகத் தெரிவித் துள்ள இந்திய பத்திரிகையாளர் மன்றம், நாடாளுமன்ற உறுப் பினர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பவும் கோரிக்கை விடுத் துள்ளது. அரசு “பெரியண்ணன் மனோபாவத்தோடு” நடந்து கொள் வதாக காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவன்கேரா குற்றம் சாட்டி யுள்ளார். 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட PIB உண்மை-சரிபார்ப்புக் குழு, என்ன அழகில் உண்மையைச் சரிபார்த்தது என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.
- 2020ஆம் ஆண்டில், புலனாய் வுப் பணியகத்தின் ஆள்சேர்ப்பு அறிவிப்பை, போலியானது என்று PIB தவறாக அறிவித்தது
- அதே ஆண்டு ஜூன் மாதம், PIB Fact Check குழு ஒரு tweet (கீச்சு) செய்தது. அதில், “59 சீன செயலிகளை (Apps) சிறப்பு பணிக் குழு (STF) பயன்படுத்து வதில்லை என்று வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தவறானது” என்று PIB கூறியது. இது தவறு என பின்பு தெரிய வந்த போதிலும், அந்த கீச்சை இன்று வரை PIB நீக்க வில்லை.
- கொரோனா காலத்தில் ஷ்ரமிக் தொடர் வண்டிகளில் (புலம் பெயர்ந்தோர் சொந்த இடங் களுக்குத் திரும்பிச் சென்ற தொடரிகள்) ஏற்பட்ட இறப்புகள் தொடர்பான செய்திகள் வந்த போதும், PIB உண்மை சரிபார்ப்புக் குழு எந்த விதமான உண்மைகளையும் வழங்காமல், இந்தச் செய்தி களைப் போலி என்று கூறிய தோடு மட்டுமல்லாமல், தொடரித் துறையின் மறுப்பை யும் பகிர்ந்தது. AltNews போன்ற உண்மை-சரிபார்ப்பு இளைய தளங்கள், PIBயின் தவற்றை அம்பலப்படுத்தின.
- மோடி நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையால் (ICMR) அமைக்கப் பட்ட, கோவிட் பணிக் குழு வுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று 2020 ஏப்ரலில் Carawan இதழ் கட்டுரை தீட்டியது. PIB இதற்கு எதிர் வினையாற்றியது. ஆதாரங்களை வழங்கக் கேட்ட போது, PIB தரப்பிலிருந்து ஒரு சிறிய காகிதம் கூட வழங்கப் படவில்லை.
- குஜராத் அரசு மருத்துவ மனையில், செயற்கை சுவாசக் கருவிகள் தரமற்றவையாக இருப்பதைப் பற்றி, ஆதாரப் பூர்வமாக The Wire இணைய தளம் வெளியிட்ட கட்டுரையை PIB மறுத்தது.
- சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை ஊடகங்கள் புகைப் படங்களோடு வெளிப்படுத்திய போதும், PIB அதனை வெட்கமே இல்லாமல் மறுத்து, பின் மூக்குடைபட்டது.
இவ்வாறாக ஒரு செய்தியால் அரசுக்கு பிரச்சனை எழும் பொழுது, அரசைப் பாதுகாக்கும் கேடயமாகக் களத்தில் இறங்கி, ஒருதலைப்பட்சமாகச் செயல் படும் ஒரு நிறுவனத்தின் கட்டுப் பாட்டில், அனைத்து இணைய ஊடகங்களையும் கொண்டு வந்து அச்சுறுத்துவதற்காகவே, பாஜக இந்த சட்டத் திருத்தத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலமாகக் கொண்டு வருகின்றது. Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில், அரசின் மீது வைக்கப்படும் அத்தனை விமர்ச னங்களையும், முழுவதுமாக முடக் குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளி யாக இந்த சட்டத்திருத்தம் (IT Act 2021 – 3[1][b][v]) அமைய உள்ளது. எனவே இதனை ஆரம்பக் கட்டத் திலேயே தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பெரியார் முழக்கம் 16022023 இதழ்