சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்
பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 3 கேள்வி : ‘ஹிந்துக்கள்’ தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லிம்கள் பர்தா அணிகிறார்கள். ‘ஹிந்துக்கள்’ தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும், பர்தா கழற்றும் நிகழ்ச்சியும் நடத்தும் ஆண்மை இருக்கிறதா? பதில் : ‘தாலி’ அறுப்புப் போராட்டம் என தவறாகக் கூறுவது பற்றியும் ‘ஹிந்துக்கள்’ பற்றியும் ஏற்கெனவே விளக்கியாகிவிட்டது. சிறுபான்மை கிறித்துவ மக்கள் மோதிரம் மாற்றி, திருமண பந்தத்தைக் காட்டுவது, ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவிப்பது போல், இந்துக்கள் என்பாரும் ஆணும் பெண்ணுமாகவா தாலி கட்டிக் கொள்கிறார்கள்? இல்லையே! பெண்ணுக்கு மட்டும்தானே தாலி? கிறித்துவ சிறுபான்மை மக்களின், இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் பர்தா அணிதல் உட்பட்ட பழக்க வழக்கங்கள், அந்த மதக் குழுக்களின் அடையாளங்கள், அவற்றை மதித்து...
